• Nov 26 2024

பாடசாலையின் 102 வருட கால வரலாற்றை மாற்றிய வவுனியா மாணவிகள்...! குவியும் பாராட்டுக்கள்...!

Sharmi / Jun 1st 2024, 4:24 pm
image

வவுனியா தெற்கு வலயத்திற்குட்பட்ட சூடுவெந்தபுலவு அல் இக்பால் மகாவித்தியாலயம் ஆரம்பிக்கப்பட்டு 102 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் வெளியாகிய உயர்தரப் பரீட்சைப் பெறுபேற்றில் முதன் முறையாக பாடசாலை அதிபர் ஏ.கே.உபைத்தின் வழிகாட்டலில் இப் பாடசாலையில் இரு மாணவிகள் கலைப் பிரிவில் 3ஏ சித்திகளைப் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

அந்தவகையில் நஹார் பாத்திமா சுஹா என்ற மாணவி தமிழ், புவியியல், வரலாறு ஆகிய பாடங்களை கற்று 3ஏ சித்தியைப் பெற்று மாவட்ட மட்டத்தில் 12 ஆவது நிலையைப் பெற்றுள்ளார்.

மனாஸ் பாத்திமா அப்னா என்ற மாணவியும் தமிழ், புவியியல், வரலாறு ஆகிய பாடங்களைக் கற்று 3ஏ சித்தியைப் பெற்று மாவட்டத்தில் 31 ஆவது இடத்தைபெற்று சாதனை படைத்துள்ளார். இவர்களுடன் தாஜீதீன் மொஹமட் சபீக் ஏ,பி,சீ பெறுபேற்றைப் பெற்று 94 ஆவது நிலையையும், முஸ்தபா பாத்திமா 2ஏ,சி பெறுபேற்றைப் பெற்று 103 ஆவது நிலையையும், நியாஸ் அஸ்னப் 2ஏ,பி பெறுபேற்றைப் பெற்று மாவட்டத்தில் 122 ஆவது நிலையையும், மாவட்ட மட்டத்தில் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

அத்துடன் பரீட்சைக்கு தோற்றிய அனைத்து மாணவர்களும் அனைத்து பாடங்களில் சித்தி பெற்றுள்ளதுடன், பாடசலையின் 102 ஆண்டு வரலாற்றில் கலைப் பிரிவில் பெறப்பட்ட இப் பாடசாலையின் முதலாவது சிறந்த பெறுபேறு பெறுபேறு என தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் சாதனை படைத்த மாணவிகளுக்கு பலரும் தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


பாடசாலையின் 102 வருட கால வரலாற்றை மாற்றிய வவுனியா மாணவிகள். குவியும் பாராட்டுக்கள். வவுனியா தெற்கு வலயத்திற்குட்பட்ட சூடுவெந்தபுலவு அல் இக்பால் மகாவித்தியாலயம் ஆரம்பிக்கப்பட்டு 102 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் வெளியாகிய உயர்தரப் பரீட்சைப் பெறுபேற்றில் முதன் முறையாக பாடசாலை அதிபர் ஏ.கே.உபைத்தின் வழிகாட்டலில் இப் பாடசாலையில் இரு மாணவிகள் கலைப் பிரிவில் 3ஏ சித்திகளைப் பெற்று சாதனை படைத்துள்ளனர்.அந்தவகையில் நஹார் பாத்திமா சுஹா என்ற மாணவி தமிழ், புவியியல், வரலாறு ஆகிய பாடங்களை கற்று 3ஏ சித்தியைப் பெற்று மாவட்ட மட்டத்தில் 12 ஆவது நிலையைப் பெற்றுள்ளார்.மனாஸ் பாத்திமா அப்னா என்ற மாணவியும் தமிழ், புவியியல், வரலாறு ஆகிய பாடங்களைக் கற்று 3ஏ சித்தியைப் பெற்று மாவட்டத்தில் 31 ஆவது இடத்தைபெற்று சாதனை படைத்துள்ளார். இவர்களுடன் தாஜீதீன் மொஹமட் சபீக் ஏ,பி,சீ பெறுபேற்றைப் பெற்று 94 ஆவது நிலையையும், முஸ்தபா பாத்திமா 2ஏ,சி பெறுபேற்றைப் பெற்று 103 ஆவது நிலையையும், நியாஸ் அஸ்னப் 2ஏ,பி பெறுபேற்றைப் பெற்று மாவட்டத்தில் 122 ஆவது நிலையையும், மாவட்ட மட்டத்தில் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.அத்துடன் பரீட்சைக்கு தோற்றிய அனைத்து மாணவர்களும் அனைத்து பாடங்களில் சித்தி பெற்றுள்ளதுடன், பாடசலையின் 102 ஆண்டு வரலாற்றில் கலைப் பிரிவில் பெறப்பட்ட இப் பாடசாலையின் முதலாவது சிறந்த பெறுபேறு பெறுபேறு என தெரிவிக்கப்படுகிறது.இந்நிலையில் சாதனை படைத்த மாணவிகளுக்கு பலரும் தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement