• May 02 2024

வெடுக்குநாறிமலை விவகாரம்...! கருணா எடுத்த அதிரடி முடிவு...! வெளியான தகவல்...!

Sharmi / Mar 18th 2024, 10:54 am
image

Advertisement

வவுனியா வடக்கு வெடுக்குநாறிமலையின் கள நிளவரங்களை ஆராயும் பொருட்டு,  கருணா என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் குறித்த பகுதிக்கு நேரடி விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.

இது  தொடர்பில் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் உப தலைவரும்,  அம்மான் படையணியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான ஜெயா சரவணா ஊடகமொன்றுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வி ஒன்றின் போதே இதனை தெரிவித்தார்.

எங்களுடைய கலாச்சார விடயங்கள் பூமியில் சீரழிக்கப்படும் போது எமது பங்கு அதிகம் இருக்கின்றது. கடந்த வாரமும் வெடுக்குநாறிமலை தொடர்பாக கண்டன அறிக்கையினை நாம் வெளியிட்டிருந்தோம். 

அத்துடன் எதிர்வரும் வாரத்தில் எங்களுடைய தலைவர் கருணாம்மான் நேரடி களவிஜயம் மேற்கொள்ளவுள்ளார். 

நீதிமன்றத்திலே இவ்விடயம் நடந்து கொண்டிருக்கின்றது. இதனை அரசியலாக்க வேண்டும் என்ற காரணத்தினால் மக்களை ஒரு பொது நிலையில் வைத்திருக்க சில அரசியல் கட்சிகள் செயற்படுகின்றன.

இந்துக்களின் கலாச்சாரத்தை சீரழிக்க கூடாது என்பதில் நாம் கவனமாக இருக்கின்றோம். ஆனால் அரசியலாக்கும் முனைவு மேற்கொள்ளப்படுகின்றது. ஏனைய கட்சிகளது பிரசன்னம் கூட மழுங்கடிக்கப்பட்டு ஒரு சில கட்சிதான் செய்வது போல் வெளியே ஒரு விம்பத்தை கட்டமைத்து கொண்டிருக்கின்றார்கள்.

குறித்த விடயம் நீதிமன்றங்களூடாக தீர்க்கப்பட வேண்டிய விடயம் மிக விரைவில் அது நிறைவேறும் என நினைக்கிறேன். அத்தோடு எங்களுடைய தலைமையும் ஜனாதிபதியுடன் கதைத்து இதற்கான தீர்வினை பெற்றுத்தருவார் என அவர் மேலும் தெரிவித்தார்.

வெடுக்குநாறிமலை விவகாரம். கருணா எடுத்த அதிரடி முடிவு. வெளியான தகவல். வவுனியா வடக்கு வெடுக்குநாறிமலையின் கள நிளவரங்களை ஆராயும் பொருட்டு,  கருணா என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் குறித்த பகுதிக்கு நேரடி விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.இது  தொடர்பில் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் உப தலைவரும்,  அம்மான் படையணியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான ஜெயா சரவணா ஊடகமொன்றுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வி ஒன்றின் போதே இதனை தெரிவித்தார்.எங்களுடைய கலாச்சார விடயங்கள் பூமியில் சீரழிக்கப்படும் போது எமது பங்கு அதிகம் இருக்கின்றது. கடந்த வாரமும் வெடுக்குநாறிமலை தொடர்பாக கண்டன அறிக்கையினை நாம் வெளியிட்டிருந்தோம். அத்துடன் எதிர்வரும் வாரத்தில் எங்களுடைய தலைவர் கருணாம்மான் நேரடி களவிஜயம் மேற்கொள்ளவுள்ளார். நீதிமன்றத்திலே இவ்விடயம் நடந்து கொண்டிருக்கின்றது. இதனை அரசியலாக்க வேண்டும் என்ற காரணத்தினால் மக்களை ஒரு பொது நிலையில் வைத்திருக்க சில அரசியல் கட்சிகள் செயற்படுகின்றன.இந்துக்களின் கலாச்சாரத்தை சீரழிக்க கூடாது என்பதில் நாம் கவனமாக இருக்கின்றோம். ஆனால் அரசியலாக்கும் முனைவு மேற்கொள்ளப்படுகின்றது. ஏனைய கட்சிகளது பிரசன்னம் கூட மழுங்கடிக்கப்பட்டு ஒரு சில கட்சிதான் செய்வது போல் வெளியே ஒரு விம்பத்தை கட்டமைத்து கொண்டிருக்கின்றார்கள்.குறித்த விடயம் நீதிமன்றங்களூடாக தீர்க்கப்பட வேண்டிய விடயம் மிக விரைவில் அது நிறைவேறும் என நினைக்கிறேன். அத்தோடு எங்களுடைய தலைமையும் ஜனாதிபதியுடன் கதைத்து இதற்கான தீர்வினை பெற்றுத்தருவார் என அவர் மேலும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement