• Oct 02 2025

இலங்கையில் 8 மாதங்களில் ஒரு பில்லியன் டொலருக்கு வாகன இறக்குமதி - மத்திய வங்கி தகவல்

Chithra / Oct 1st 2025, 12:50 pm
image

  

இலங்கைக்குள் வாகன இறக்குமதி மீதான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டமைக்கு அமைய, 2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஓகஸ்ட் மாதம் வரையிலான 8 மாத காலப்பகுதியில், நாட்டிற்குள் வாகன இறக்குமதிக்காக 1,007.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. 

இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட 2025 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதத்திற்கான வெளிநாட்டு பிரிவு செயல்திறன் அறிக்கையில் இது குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்த ஆண்டு ஒரே மாதத்தில் அதிகபட்ச வாகன இறக்குமதி செலவு கடந்த ஓகஸ்ட் மாதம் பதிவான நிலையில், அதன் எண்ணிக்கை 255.7 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகும். 

2025 ஆம் ஆண்டில் இதுவரை ஒவ்வொரு மாதமும் நாட்டிற்குள் வாகன இறக்குமதிக்காக செய்யப்பட்ட செலவாக ஜனவரி - 29.1 மில்லியன், பெப்ரவரி - 22.3 மில்லியன், மார்ச் - 54.0 மில்லியன், ஏப்ரல் - 145.6 மில்லியன், மே - 125.2 மில்லியன், ஜூன் - 169.6 மில்லியன், ஜூலை - 206.0 மில்லியன், ஓகஸ்ட் - 255.7மில்லியன் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. 

இலங்கையில் 8 மாதங்களில் ஒரு பில்லியன் டொலருக்கு வாகன இறக்குமதி - மத்திய வங்கி தகவல்   இலங்கைக்குள் வாகன இறக்குமதி மீதான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டமைக்கு அமைய, 2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஓகஸ்ட் மாதம் வரையிலான 8 மாத காலப்பகுதியில், நாட்டிற்குள் வாகன இறக்குமதிக்காக 1,007.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட 2025 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதத்திற்கான வெளிநாட்டு பிரிவு செயல்திறன் அறிக்கையில் இது குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஒரே மாதத்தில் அதிகபட்ச வாகன இறக்குமதி செலவு கடந்த ஓகஸ்ட் மாதம் பதிவான நிலையில், அதன் எண்ணிக்கை 255.7 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகும். 2025 ஆம் ஆண்டில் இதுவரை ஒவ்வொரு மாதமும் நாட்டிற்குள் வாகன இறக்குமதிக்காக செய்யப்பட்ட செலவாக ஜனவரி - 29.1 மில்லியன், பெப்ரவரி - 22.3 மில்லியன், மார்ச் - 54.0 மில்லியன், ஏப்ரல் - 145.6 மில்லியன், மே - 125.2 மில்லியன், ஜூன் - 169.6 மில்லியன், ஜூலை - 206.0 மில்லியன், ஓகஸ்ட் - 255.7மில்லியன் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement