• Jan 26 2025

வெருகல் பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

Chithra / Jan 17th 2025, 11:23 am
image

 

வெருகல் பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் இன்று வெள்ளிக்கிழமை (17) வெருகல் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

வெளி விவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதியமைச்சரும் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவருமான அருண் ஹேமச்சந்திரா தலைமையில் கூட்டம் இடம்பெற்றது.

இக் கூட்டத்தில் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சண்முகம் குகதாஸன், இம்ரான் மகரூப் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

வெருகல் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பொதுமக்களின் காணிகளை வனஜீவராசிகள் திணைக்களம் வைத்துள்ளமை, யானைப் பிரச்சினை, அஸ்வெசும கொடுப்பனவு, தொல்லியல் பிரச்சினை, வெருகலில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதை தடுப்பதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.    


வெருகல் பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்  வெருகல் பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் இன்று வெள்ளிக்கிழமை (17) வெருகல் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.வெளி விவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதியமைச்சரும் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவருமான அருண் ஹேமச்சந்திரா தலைமையில் கூட்டம் இடம்பெற்றது.இக் கூட்டத்தில் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சண்முகம் குகதாஸன், இம்ரான் மகரூப் ஆகியோரும் கலந்து கொண்டனர்.வெருகல் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பொதுமக்களின் காணிகளை வனஜீவராசிகள் திணைக்களம் வைத்துள்ளமை, யானைப் பிரச்சினை, அஸ்வெசும கொடுப்பனவு, தொல்லியல் பிரச்சினை, வெருகலில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதை தடுப்பதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.    

Advertisement

Advertisement

Advertisement