• Jan 03 2025

பிரபல நடிகர் பிஜிலி ரமேஷ் காலமானார்!

Chithra / Aug 27th 2024, 8:26 am
image

 

யூடியூப் சேனல் மூலமாக பிரபலமாகி அதை தொடர்ந்து சினிமாவில் நடித்து வந்த பிஜிலி ரமேஷ் உடல்நலக் குறைவு காரணமாக இன்று காலமானார்.

யூடியூப் சேனல் ஒன்று நடத்திய 'பிராங்க் ஷோ' மூலமாக மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார் பிஜிலி ரமேஷ். 

ரஜினியின் தீவிர ரசிகர் என்றும் இவரது பேச்சு மற்றும் முக பாவனைகள் ரசிகர்களிடம் தனிகவனம் பெற்றது.

இதை தொடர்ந்து சினிமாவில் நடிக்கவும் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. 

பொன்மகள் வந்தாள், நட்பே துணை, ஆடை, கோமாளி உள்ளிட்ட படங்களில் நடித்து சினிமாவில் தனக்கென இடத்தை தக்கவைத்தார். 

ஆனால் மதுப்பழக்கம் காரணமாக இவரது உடல்நிலை மோசமடைந்தது.

நடிகர் பிஜிலி ரமேஷ் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தார். 

இந்நிலையல் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். 

இவரது இறுதி சடங்கு இன்று மாலை 5 மணிக்கு எம்.ஜி.ஆர் நகரில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரபல நடிகர் பிஜிலி ரமேஷ் காலமானார்  யூடியூப் சேனல் மூலமாக பிரபலமாகி அதை தொடர்ந்து சினிமாவில் நடித்து வந்த பிஜிலி ரமேஷ் உடல்நலக் குறைவு காரணமாக இன்று காலமானார்.யூடியூப் சேனல் ஒன்று நடத்திய 'பிராங்க் ஷோ' மூலமாக மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார் பிஜிலி ரமேஷ். ரஜினியின் தீவிர ரசிகர் என்றும் இவரது பேச்சு மற்றும் முக பாவனைகள் ரசிகர்களிடம் தனிகவனம் பெற்றது.இதை தொடர்ந்து சினிமாவில் நடிக்கவும் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. பொன்மகள் வந்தாள், நட்பே துணை, ஆடை, கோமாளி உள்ளிட்ட படங்களில் நடித்து சினிமாவில் தனக்கென இடத்தை தக்கவைத்தார். ஆனால் மதுப்பழக்கம் காரணமாக இவரது உடல்நிலை மோசமடைந்தது.நடிகர் பிஜிலி ரமேஷ் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையல் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். இவரது இறுதி சடங்கு இன்று மாலை 5 மணிக்கு எம்.ஜி.ஆர் நகரில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement