• Nov 23 2024

பாடகி பவதாரணி திடீர் மரணம் - இலங்கைக்கு வருகை தந்த யுவன் சங்கர் ராஜா..!

Chithra / Jan 26th 2024, 11:30 am
image

 

இசைஞானி இளையராஜாவின் மகளும் பாடகியுமான பவதாரணி இலங்கையில் நேற்று திடீரென உயிரிழந்த நிலையில், அவரது சகோதரரும் இசையமைப்பாளருமான யுவன் சங்கர் ராஜா உள்ளிட்ட குழுவினர் இன்று காலை இலங்கைக்கு வருகை தந்தனர். 

தற்போது பாடகி பவதாரணியின் உடல் வைக்கப்பட்டுள்ள கொழும்பில் உள்ள மலர்சாலைக்கு அவர் வருகைத் தந்துள்ளார்.  

புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த பாடகி பவதாரணி கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி நேற்றையதினம் மாலை  உயிரிழந்தார்.

இந்த நிலையில், இசை நிகழ்ச்சிக்காக இலங்கைக்கு வருகைத் தந்திருந்த இசைஞானி இளையராஜா உடனடியாக கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலைக்கு விரைந்ததுடன், 

அதன் பின்னர் பவதாரணியின் உடல் கொழும்பில் உள்ள மலர் சாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

மேலும், இசைஞானி இளையராஜாவின் மகனும் இசையமைப்பாளருமான யுவன் சங்கர் ராஜா உள்ளிட்ட குடும்பத்தினர் தற்போது கொழும்பு நோக்கி வருகைத் தந்துள்ளனர். 


பாடகி பவதாரணி திடீர் மரணம் - இலங்கைக்கு வருகை தந்த யுவன் சங்கர் ராஜா.  இசைஞானி இளையராஜாவின் மகளும் பாடகியுமான பவதாரணி இலங்கையில் நேற்று திடீரென உயிரிழந்த நிலையில், அவரது சகோதரரும் இசையமைப்பாளருமான யுவன் சங்கர் ராஜா உள்ளிட்ட குழுவினர் இன்று காலை இலங்கைக்கு வருகை தந்தனர். தற்போது பாடகி பவதாரணியின் உடல் வைக்கப்பட்டுள்ள கொழும்பில் உள்ள மலர்சாலைக்கு அவர் வருகைத் தந்துள்ளார்.  புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த பாடகி பவதாரணி கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி நேற்றையதினம் மாலை  உயிரிழந்தார்.இந்த நிலையில், இசை நிகழ்ச்சிக்காக இலங்கைக்கு வருகைத் தந்திருந்த இசைஞானி இளையராஜா உடனடியாக கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலைக்கு விரைந்ததுடன், அதன் பின்னர் பவதாரணியின் உடல் கொழும்பில் உள்ள மலர் சாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.மேலும், இசைஞானி இளையராஜாவின் மகனும் இசையமைப்பாளருமான யுவன் சங்கர் ராஜா உள்ளிட்ட குடும்பத்தினர் தற்போது கொழும்பு நோக்கி வருகைத் தந்துள்ளனர். 

Advertisement

Advertisement

Advertisement