• Oct 06 2024

வட்டுக்கோட்டையில் வெற்றுக் காணிக்குள் பாய்ந்த முச்சக்கரவண்டி...! சாரதிக்கு ஏற்பட்ட நிலை...!

Sharmi / Mar 14th 2024, 12:10 pm
image

Advertisement

வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு அருகாமையில் உள்ள வட்டுக்கோட்டை சந்தியில் இன்று(13) காலை இடம்பெற்ற விபத்தில் முச்சக்கர வண்டியின் சாரதி தலையில் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

காரைநகரில் இருந்து இன்று(13) காலை யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த பயணிகள் தனியார் போக்குவரத்து பேருந்து வட்டுக்கோட்டை சந்தியை கடக்க முற்பட்டது. 

இதன்போது அராலி தெற்கு பக்கத்தில் இருந்து வந்த,வெதுப்பக பொருட்கள் விற்பனை செய்யும் முச்சக்கர வண்டி வேகக் கட்டுப்பாட்டை இழந்து அருகேயுள்ள வெற்றுக் காணியினுள் இருந்த கற்களின் மேல் பாய்ந்தது.

இதனால் முச்சக்கர வண்டியின் சாரதி தலையில் காயமடைந்த நிலையில்  வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.





வட்டுக்கோட்டையில் வெற்றுக் காணிக்குள் பாய்ந்த முச்சக்கரவண்டி. சாரதிக்கு ஏற்பட்ட நிலை. வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு அருகாமையில் உள்ள வட்டுக்கோட்டை சந்தியில் இன்று(13) காலை இடம்பெற்ற விபத்தில் முச்சக்கர வண்டியின் சாரதி தலையில் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,காரைநகரில் இருந்து இன்று(13) காலை யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த பயணிகள் தனியார் போக்குவரத்து பேருந்து வட்டுக்கோட்டை சந்தியை கடக்க முற்பட்டது. இதன்போது அராலி தெற்கு பக்கத்தில் இருந்து வந்த,வெதுப்பக பொருட்கள் விற்பனை செய்யும் முச்சக்கர வண்டி வேகக் கட்டுப்பாட்டை இழந்து அருகேயுள்ள வெற்றுக் காணியினுள் இருந்த கற்களின் மேல் பாய்ந்தது.இதனால் முச்சக்கர வண்டியின் சாரதி தலையில் காயமடைந்த நிலையில்  வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement