• Nov 06 2024

தேர்தல்களில் வெற்றியோ தோல்வியோ...நாங்கள் எப்போதும் தனி வழியே...! அனுர திட்டவட்டம்...!samugammedia

Sharmi / Dec 20th 2023, 12:42 pm
image

Advertisement

எதிர்வரும் தேசிய தேர்தல்களில் எவருடனும் கூட்டணியமைக்க தயாரில்லை என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.


வெற்றியோ,தோல்வியோ  தேர்தல்களில் தனித்தே போட்டியி டுவோம் எனவும் தெரிவித்துள்ளார்.


தேர்தல் கள நிலவரம் தொடர்பில் அனுர மேலும் தெரிவிக்கையில்


டலஸ் அழகபெரும தலைமையிலான சுதந்திர மக்கள் சபையின் உறுப்பினர்களுடன் அண்மையில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டோம் அரசாங்கத்துக்கு எதிரான போராட்டம் உள்ளிட்ட ஜனநாயக ரீதியிலான செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவோம் எனவும் தெரிவித்தார்.


அதேவேளை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுடன் நாங்கள் கூட்டணியமைக்கவுள்ளதாக வெளியாகியுள்ள செய்தியில் எவ்வித உண்மையுமில்லை என தெரிவித்த அனுர எதிர்வரும் 2024ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள தேர்தல்களில் தனித்தே போட்டியிடுவோம் எனவும் தெரிவித்தார்.


2024ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள தேர்தல் அரசியல் ரீதியில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தும். மக்கள் தேர்தலை கோருகிறார்கள் தேர்தல் ஒன்று இடம்பெற்றால் படு தோல்வியடைய நேரிடும் என்பதை அறிந்தே அரசாங்கம் தேர்தலை தொடர்ந்து பிற்போடுவதாகவும் குற்றம் சுமத்தினார்.



தேர்தல்களில் வெற்றியோ தோல்வியோ.நாங்கள் எப்போதும் தனி வழியே. அனுர திட்டவட்டம்.samugammedia எதிர்வரும் தேசிய தேர்தல்களில் எவருடனும் கூட்டணியமைக்க தயாரில்லை என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.வெற்றியோ,தோல்வியோ  தேர்தல்களில் தனித்தே போட்டியி டுவோம் எனவும் தெரிவித்துள்ளார்.தேர்தல் கள நிலவரம் தொடர்பில் அனுர மேலும் தெரிவிக்கையில்டலஸ் அழகபெரும தலைமையிலான சுதந்திர மக்கள் சபையின் உறுப்பினர்களுடன் அண்மையில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டோம் அரசாங்கத்துக்கு எதிரான போராட்டம் உள்ளிட்ட ஜனநாயக ரீதியிலான செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவோம் எனவும் தெரிவித்தார்.அதேவேளை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுடன் நாங்கள் கூட்டணியமைக்கவுள்ளதாக வெளியாகியுள்ள செய்தியில் எவ்வித உண்மையுமில்லை என தெரிவித்த அனுர எதிர்வரும் 2024ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள தேர்தல்களில் தனித்தே போட்டியிடுவோம் எனவும் தெரிவித்தார்.2024ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள தேர்தல் அரசியல் ரீதியில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தும். மக்கள் தேர்தலை கோருகிறார்கள் தேர்தல் ஒன்று இடம்பெற்றால் படு தோல்வியடைய நேரிடும் என்பதை அறிந்தே அரசாங்கம் தேர்தலை தொடர்ந்து பிற்போடுவதாகவும் குற்றம் சுமத்தினார்.

Advertisement

Advertisement

Advertisement