• Feb 06 2025

மீண்டும் விசாரணைக்கு வரும் வித்தியாவின் படுகொலை வழக்கு!

Chithra / Feb 6th 2025, 3:24 pm
image

 

2015 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவி சிவலோகநாதன் வித்தியா படுகொலை செய்யப்பட்ட வழக்கில், மரண தண்டனை விதிக்கப்பட்ட பிரதிவாதிகளால் மரண தண்டனைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் திகதி நிர்ணயித்துள்ளது.

குறித்த மேன்முறையீட்டு மனுக்கள் இன்று நீதிபதிகள் பிரீத்தி பத்மன் சூரசேன, ஜனக் டி சில்வா மற்றும் சம்பத் அபேகோன் ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு முன் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது

அதன்படி, மூவரடங்கிய நீதிபதிகள் குழாம், சம்பந்தப்பட்ட மேன்முறையீட்டு மனுக்களை ஓகஸ்ட் 25 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உத்தரவிட்டது.

2015 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் சிவலோகநாதன் வித்தியா என்ற பாடசாலை மாணவி கடத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 7 பேருக்கு யாழ்ப்பாண மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகள் அமர்வு மரண தண்டனை விதித்துள்ளது.

மேற்படி, மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் தங்களுக்கு தண்டனை விதித்த விதம் சட்டத்திற்கு முரணானது என்றும், எனவே மேல் நீதிமன்ற தீர்ப்பை இரத்து செய்து அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் தங்களை விடுவிக்க வேண்டும் என்றும் கூறி, பிரதிவாதிகள் இந்த மேன்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது

மீண்டும் விசாரணைக்கு வரும் வித்தியாவின் படுகொலை வழக்கு  2015 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவி சிவலோகநாதன் வித்தியா படுகொலை செய்யப்பட்ட வழக்கில், மரண தண்டனை விதிக்கப்பட்ட பிரதிவாதிகளால் மரண தண்டனைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் திகதி நிர்ணயித்துள்ளது.குறித்த மேன்முறையீட்டு மனுக்கள் இன்று நீதிபதிகள் பிரீத்தி பத்மன் சூரசேன, ஜனக் டி சில்வா மற்றும் சம்பத் அபேகோன் ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு முன் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளதுஅதன்படி, மூவரடங்கிய நீதிபதிகள் குழாம், சம்பந்தப்பட்ட மேன்முறையீட்டு மனுக்களை ஓகஸ்ட் 25 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உத்தரவிட்டது.2015 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் சிவலோகநாதன் வித்தியா என்ற பாடசாலை மாணவி கடத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 7 பேருக்கு யாழ்ப்பாண மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகள் அமர்வு மரண தண்டனை விதித்துள்ளது.மேற்படி, மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் தங்களுக்கு தண்டனை விதித்த விதம் சட்டத்திற்கு முரணானது என்றும், எனவே மேல் நீதிமன்ற தீர்ப்பை இரத்து செய்து அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் தங்களை விடுவிக்க வேண்டும் என்றும் கூறி, பிரதிவாதிகள் இந்த மேன்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது

Advertisement

Advertisement

Advertisement