• May 06 2024

இலங்கையில் நடிகர் விஜயை ரசிகர்கள் சந்திப்பதற்கு ஏற்பாடு...!

Chithra / Jan 4th 2024, 8:16 am
image

Advertisement

 

தென்னிந்திய திரைப்பட நடிகரான இளைய தளபதி விஜய் இலங்கைக்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் அவரை நேரில் சந்திப்பதற்கு ரசிகர்கள் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

படப்பிடிப்புக்காக இலங்கைக்கு தளபதி விஜய் வந்தால் படப்பிடிப்பு நிறைவு பெற்ற பின்னர் நேரமிருந்தால் ரசிகர்களை சந்தித்து புகைப்படத்தை எடுப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி தருமாறு அகில இந்திய விஜய் மக்கள் மன்ற பொறுப்பாளர் புஸ்ஸி ஆனந்தை தொடர்பு கொண்டு அகில இலங்கை விஜய் நற்பணி மன்றத்தினர் கோரிக்கை விடுத்துள்ளதாக அறிய முடிகிறது.

இதேவேளை தளபதி 68 திரைப்பட இயக்குனர் வெங்கட் பிரபு சில தினங்களுக்கு முன்னர் கொழும்புக்கு வந்து சென்ற புகைப்படங்கள் வைரலாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஜனவரி இரண்டாம் வாரத்தில் விஜய் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் ‘தளபதி 68’ படத்தின் படப்பிடிப்புக்காகவே அவர் இலங்கை வருகிறார்.

இலங்கையில் நடிகர் விஜயை ரசிகர்கள் சந்திப்பதற்கு ஏற்பாடு.  தென்னிந்திய திரைப்பட நடிகரான இளைய தளபதி விஜய் இலங்கைக்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் அவரை நேரில் சந்திப்பதற்கு ரசிகர்கள் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.படப்பிடிப்புக்காக இலங்கைக்கு தளபதி விஜய் வந்தால் படப்பிடிப்பு நிறைவு பெற்ற பின்னர் நேரமிருந்தால் ரசிகர்களை சந்தித்து புகைப்படத்தை எடுப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி தருமாறு அகில இந்திய விஜய் மக்கள் மன்ற பொறுப்பாளர் புஸ்ஸி ஆனந்தை தொடர்பு கொண்டு அகில இலங்கை விஜய் நற்பணி மன்றத்தினர் கோரிக்கை விடுத்துள்ளதாக அறிய முடிகிறது.இதேவேளை தளபதி 68 திரைப்பட இயக்குனர் வெங்கட் பிரபு சில தினங்களுக்கு முன்னர் கொழும்புக்கு வந்து சென்ற புகைப்படங்கள் வைரலாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.ஜனவரி இரண்டாம் வாரத்தில் விஜய் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் ‘தளபதி 68’ படத்தின் படப்பிடிப்புக்காகவே அவர் இலங்கை வருகிறார்.

Advertisement

Advertisement

Advertisement