பால்நிலை தொடர்பான கலந்துரையாடல் கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் மாவட்டச் செயலாளர் றூபவதி கேதீஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.
இக்கலந்துரையாடலில் வைத்தியர்கள், அரச அதிகாரிகள், பொலிசார், சிறுவர் நன்நடத்தை உத்தியோகத்தர்கள், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டனர்.
கிளிநொச்சி மாவட்டத்தில் பால்நிலை சமத்துவம் தொடர்பாக தற்பொழுது ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் மற்றும் மாற்றங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
இதன்போது 2022ல் 89 முறைப்பாடுகளும், 2023ம் ஆண்டில் 166 முறைப்பாடுகளும் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் பெண்களால் சிறு குற்ற முறைப்பாடுகளாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், குடும்ப வன்முறை மற்றும் பெண்களுக்கெதிரான வன்முறைகளாக 2022ம் ஆண்டு 1175 முறைப்பாடுகளும், 2023ம் ஆண்டு 863 முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டது.
பெண்களுக்கெதிரான வன்முறைகள் அதிகரித்து காணப்படுவதாகவும், குடும்ப வன்முறைகள் காரணமாக பல பெண்கள் மற்றும் சிறுவர்கள் அதிகமாக பாதிக்கபடுவதாகவும் கூறப்பட்டதுடன், இதற்கான மாற்றுநடவடிக்கை எடுக்கப்படவேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
அத்துடன், போசாக்கற்ற நலிவடைந்த சிறுவர்கள் காணப்படுவதுடன், அவர்களுக்கான போசாக்கு மாத்திரைகளை விட, போசாக்கான உணவுகளை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கிளிநொச்சியில் பெண்களுக்கு எதிரான வன்முறை கடந்த ஆண்டு அதிகரிப்பு - பால்நிலை தொடர்பான கலந்துரையாடலில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்வு.samugammedia பால்நிலை தொடர்பான கலந்துரையாடல் கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் மாவட்டச் செயலாளர் றூபவதி கேதீஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. இக்கலந்துரையாடலில் வைத்தியர்கள், அரச அதிகாரிகள், பொலிசார், சிறுவர் நன்நடத்தை உத்தியோகத்தர்கள், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டனர். கிளிநொச்சி மாவட்டத்தில் பால்நிலை சமத்துவம் தொடர்பாக தற்பொழுது ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் மற்றும் மாற்றங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. இதன்போது 2022ல் 89 முறைப்பாடுகளும், 2023ம் ஆண்டில் 166 முறைப்பாடுகளும் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் பெண்களால் சிறு குற்ற முறைப்பாடுகளாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.மேலும், குடும்ப வன்முறை மற்றும் பெண்களுக்கெதிரான வன்முறைகளாக 2022ம் ஆண்டு 1175 முறைப்பாடுகளும், 2023ம் ஆண்டு 863 முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டது.பெண்களுக்கெதிரான வன்முறைகள் அதிகரித்து காணப்படுவதாகவும், குடும்ப வன்முறைகள் காரணமாக பல பெண்கள் மற்றும் சிறுவர்கள் அதிகமாக பாதிக்கபடுவதாகவும் கூறப்பட்டதுடன், இதற்கான மாற்றுநடவடிக்கை எடுக்கப்படவேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. அத்துடன், போசாக்கற்ற நலிவடைந்த சிறுவர்கள் காணப்படுவதுடன், அவர்களுக்கான போசாக்கு மாத்திரைகளை விட, போசாக்கான உணவுகளை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.