• Jul 01 2024

வெளிநாட்டிலிருந்து வரும் பணத்தால் யாழில் வன்முறை - கைக்குண்டு, காருடன் சிக்கிய இளைஞன்

Chithra / Jun 28th 2024, 3:25 pm
image

Advertisement

 

 யாழ்ப்பாண மாவட்டத்தில் அண்மைக்காலமாக நடந்த பல்வேறு வன்முறை சம்பவங்கள்இ கடைகள் எரிப்பு சம்பவங்களுடன் தொடர்புடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


24 வயதான குறித்த சந்தேக நபர் உடுவில் பகுதியில் யாழ்ப்பாணப் பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால்  கைது செய்யப்பட்டார்.


சந்தேகநபரிடம் இருந்து கார், மோட்டார் சைக்கிள், தயாரிக்கப்பட்ட கைக்குண்டு, வாள்கள் என்பனவும் மீட்கப்பட்டுள்ளது.


வெளிநாட்டில் உள்ள நபரொருவர் மூலம் பணம்பெற்று வன்முறையில் ஈடுபட்ட கும்பலைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டார். 


சந்தேக நபர் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் நேற்று  பொலிஸாரால் முற்படுத்தப்பட்டபோது, சந்தேக நபரை எதிர்வரும் 14ம் திகதி வரை தடுப்புக் காவலில் வைக்க  நீதிவான் உத்தரவிட்டார்.


குறித்த வன்முறை கும்பலைச் சேர்ந்த மேலும் ஐவரை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

வெளிநாட்டிலிருந்து வரும் பணத்தால் யாழில் வன்முறை - கைக்குண்டு, காருடன் சிக்கிய இளைஞன்   யாழ்ப்பாண மாவட்டத்தில் அண்மைக்காலமாக நடந்த பல்வேறு வன்முறை சம்பவங்கள்இ கடைகள் எரிப்பு சம்பவங்களுடன் தொடர்புடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.24 வயதான குறித்த சந்தேக நபர் உடுவில் பகுதியில் யாழ்ப்பாணப் பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால்  கைது செய்யப்பட்டார்.சந்தேகநபரிடம் இருந்து கார், மோட்டார் சைக்கிள், தயாரிக்கப்பட்ட கைக்குண்டு, வாள்கள் என்பனவும் மீட்கப்பட்டுள்ளது.வெளிநாட்டில் உள்ள நபரொருவர் மூலம் பணம்பெற்று வன்முறையில் ஈடுபட்ட கும்பலைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டார். சந்தேக நபர் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் நேற்று  பொலிஸாரால் முற்படுத்தப்பட்டபோது, சந்தேக நபரை எதிர்வரும் 14ம் திகதி வரை தடுப்புக் காவலில் வைக்க  நீதிவான் உத்தரவிட்டார்.குறித்த வன்முறை கும்பலைச் சேர்ந்த மேலும் ஐவரை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement