• Oct 30 2026

கிழக்கில் உக்கிரமடையும் கடல் சீற்றம்! வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மீனவர்கள்

Chithra / Oct 29th 2026, 3:29 pm
image

கிழக்கு கடற்பரப்பில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் கரையோரப் பகுதிகளில் கடல் சீற்றம் அதிகரித்துள்ள நிலையில், ஆயிரக்கணக்கான மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.


மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக நிலவும் சீரற்ற வானிலையால் கடல் கொந்தளிப்பான நிலையில் காணப்படுகின்றது.


இன்று (29) மாவட்டத்தின் பல பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன், ஆங்காங்கே இலேசான மழையும் தொடர்ந்து பெய்து வருகின்றது.


இந்நிலையில், கடல் சீற்றம் மற்றும் சீரற்ற காலநிலை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கைகளை கருத்திற்கொண்டு, மாவட்டத்தின் கரையோரப் பகுதிகளில் வாழும் ஆயிரக்கணக்கான மீனவர்கள் இன்று தமது அன்றாட மீன்பிடி நடவடிக்கைகளுக்குச் செல்லவில்லை.


இதனால் மீன்பிடித் தொழிலை நம்பி வாழும் குடும்பங்கள் பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ளன.


குறிப்பாக மட்டக்களப்பு, கல்லடி, திருச்செந்தூர், நாவலடி, வாகரை, வாழைச்சேனை, களுவாஞ்சிகுடி மற்றும் கல்லாறு உள்ளிட்ட கரையோரப் பகுதிகளில் கடல் சீற்றத்தின் தாக்கம் காணப்படுகின்றது.


கடல் கொந்தளிப்பு காரணமாக மீனவர்கள் தமது மீன்பிடிப் படகுகளைப் பாதுகாப்பான இடங்களுக்கு நகர்த்தி வைத்துள்ளதுடன், கடல் சீற்றம் மற்றும் கடல் நீர் பெருக்கெடுக்கும் நிலைமைகளையும் உன்னிப்பாக அவதானித்து வருகின்றனர்.


வழக்கமாக மீன்பிடி நடவடிக்கைகளால் பரபரப்பாகக் காணப்படும் மாவட்டத்தின் பல கடற்கரைப் பகுதிகள், தற்போது மீனவர்களின் நடமாட்டமின்றி வெறிச்சோடிக் காணப்படுகின்றன.


தொடரும் சீரற்ற காலநிலையால் மீன்பிடி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கடலை நம்பி வாழும் மீனவக் குடும்பங்களின் அன்றாட வருமானமும் பாதிக்கப்பட்டுள்ளது.

 

கிழக்கில் உக்கிரமடையும் கடல் சீற்றம் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மீனவர்கள் கிழக்கு கடற்பரப்பில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் கரையோரப் பகுதிகளில் கடல் சீற்றம் அதிகரித்துள்ள நிலையில், ஆயிரக்கணக்கான மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக நிலவும் சீரற்ற வானிலையால் கடல் கொந்தளிப்பான நிலையில் காணப்படுகின்றது.இன்று (29) மாவட்டத்தின் பல பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன், ஆங்காங்கே இலேசான மழையும் தொடர்ந்து பெய்து வருகின்றது.இந்நிலையில், கடல் சீற்றம் மற்றும் சீரற்ற காலநிலை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கைகளை கருத்திற்கொண்டு, மாவட்டத்தின் கரையோரப் பகுதிகளில் வாழும் ஆயிரக்கணக்கான மீனவர்கள் இன்று தமது அன்றாட மீன்பிடி நடவடிக்கைகளுக்குச் செல்லவில்லை.இதனால் மீன்பிடித் தொழிலை நம்பி வாழும் குடும்பங்கள் பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ளன.குறிப்பாக மட்டக்களப்பு, கல்லடி, திருச்செந்தூர், நாவலடி, வாகரை, வாழைச்சேனை, களுவாஞ்சிகுடி மற்றும் கல்லாறு உள்ளிட்ட கரையோரப் பகுதிகளில் கடல் சீற்றத்தின் தாக்கம் காணப்படுகின்றது.கடல் கொந்தளிப்பு காரணமாக மீனவர்கள் தமது மீன்பிடிப் படகுகளைப் பாதுகாப்பான இடங்களுக்கு நகர்த்தி வைத்துள்ளதுடன், கடல் சீற்றம் மற்றும் கடல் நீர் பெருக்கெடுக்கும் நிலைமைகளையும் உன்னிப்பாக அவதானித்து வருகின்றனர்.வழக்கமாக மீன்பிடி நடவடிக்கைகளால் பரபரப்பாகக் காணப்படும் மாவட்டத்தின் பல கடற்கரைப் பகுதிகள், தற்போது மீனவர்களின் நடமாட்டமின்றி வெறிச்சோடிக் காணப்படுகின்றன.தொடரும் சீரற்ற காலநிலையால் மீன்பிடி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கடலை நம்பி வாழும் மீனவக் குடும்பங்களின் அன்றாட வருமானமும் பாதிக்கப்பட்டுள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement