• Nov 24 2024

நாட்டில் சிறுவர்களிடையே பரவும் வைரஸ் காய்ச்சல் - விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Chithra / Mar 30th 2024, 6:56 am
image

 

12 வயதிற்கு குறைந்த சிறுவர்களிடையே பரவும் வைரஸ் காய்ச்சல் தொடர்பில் சுகாதார தரப்பினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

குறித்த தகவல் கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

அவர் தெரிவிக்கையில், இந்த நோய்த் தாக்கத்திற்கு உள்ளான சிறுவர்களின் முகம் மற்றும் கைகளில் சிறிய கொப்புளங்கள் ஏற்படலாம்.

இந்த நோயின் தாக்கம் மேல் மாகாணத்திலேயே அதிக அளவில் அவதானிக்கப்பட்டுள்ளதாகவும் நோய்த் தாக்கத்திற்கு உள்ளான சிறுவர்களுக்கு உணவில் சுவை உணர முடியாத நிலை காணப்படலாம் எனவும், அவர்கள் தொடர்ச்சியாக அழக்கூடும்.

குறித்த வைரஸ் நோய்க்கான அறிகுறிகளைக் கொண்டுள்ள சிறுவர்களை மூன்று அல்லது நான்கு நாட்கள் வீட்டிலேயே தங்க வைக்க வேண்டும்.

இந்த வைரஸ் நோய்த் தாக்கத்திற்கு உள்ளான சிறுவர்களை பாடசாலைக்கு அனுப்ப வேண்டாமெனவும், அவர்களை சுத்தமாக வைத்திருக்குமாறும் அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் சிறுவர்களிடையே பரவும் வைரஸ் காய்ச்சல் - விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை  12 வயதிற்கு குறைந்த சிறுவர்களிடையே பரவும் வைரஸ் காய்ச்சல் தொடர்பில் சுகாதார தரப்பினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.குறித்த தகவல் கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.அவர் தெரிவிக்கையில், இந்த நோய்த் தாக்கத்திற்கு உள்ளான சிறுவர்களின் முகம் மற்றும் கைகளில் சிறிய கொப்புளங்கள் ஏற்படலாம்.இந்த நோயின் தாக்கம் மேல் மாகாணத்திலேயே அதிக அளவில் அவதானிக்கப்பட்டுள்ளதாகவும் நோய்த் தாக்கத்திற்கு உள்ளான சிறுவர்களுக்கு உணவில் சுவை உணர முடியாத நிலை காணப்படலாம் எனவும், அவர்கள் தொடர்ச்சியாக அழக்கூடும்.குறித்த வைரஸ் நோய்க்கான அறிகுறிகளைக் கொண்டுள்ள சிறுவர்களை மூன்று அல்லது நான்கு நாட்கள் வீட்டிலேயே தங்க வைக்க வேண்டும்.இந்த வைரஸ் நோய்த் தாக்கத்திற்கு உள்ளான சிறுவர்களை பாடசாலைக்கு அனுப்ப வேண்டாமெனவும், அவர்களை சுத்தமாக வைத்திருக்குமாறும் அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement