மலையகப் பிரதேசங்களில் தொடர்ந்து பெய்த அடைமழை காரணமாக உள்ளூர் ஏற்றுமதி உற்பத்திகளான கிராம்பு, சாதிக்காய் போன்றவற்றின் அறுவடையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
மாத்தளை, ஹாரிஸ்பத்துவ, வத்தேகம, உக்குவலை, அளவத்துகொடை, முருதலாவை, கடுகண்ணாவை, கம்பளை, இரத்தோட்டை போன்ற பிரதேசங்களில் அதிகளவில் கிராம்பு மற்றும் சாதிக்காய் உற்பத்தி செய்யப்படுகின்றன.
அப்பிரதேசங்களில் தொடர்ந்து பல நாட்கள் பெய்த மழை காரணமாக பயிர்களில் ஒருவகை வைரஸ் தாக்கம் ஏற்பட்டுள்ளன.
பொதுவாக பெப்ரவரி மாதமளவில் அறுவடை மேற்கொள்வதாகவும் ஆனால் இம்முறை அறுவடையில் வீழ்ச்சி ஏற்பட இடமிருப்பதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இது தெடர்பாக ஏற்றுமதி விளைபொருட்கள் திணைக்கள அதிகாரி ஒருவர், 4 அல்லது 5 நாட்களில் கிராம்பின் பிஞ்சுக் காய்கள் கழன்று சென்றுவிடுவதாகவும் கடும் மழை பெய்வதால் இம்முறை கிராம்பு விளைச்சலில் பாதிப்பு ஏற்படக்கூடும் எனவும் தெரிவித்தார்.
பயிர்களில் ஒருவகை வைரஸ் தாக்கம் - கிராம்பு, சாதிக்காய் அறுவடையில் வீழ்ச்சி மலையகப் பிரதேசங்களில் தொடர்ந்து பெய்த அடைமழை காரணமாக உள்ளூர் ஏற்றுமதி உற்பத்திகளான கிராம்பு, சாதிக்காய் போன்றவற்றின் அறுவடையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர். மாத்தளை, ஹாரிஸ்பத்துவ, வத்தேகம, உக்குவலை, அளவத்துகொடை, முருதலாவை, கடுகண்ணாவை, கம்பளை, இரத்தோட்டை போன்ற பிரதேசங்களில் அதிகளவில் கிராம்பு மற்றும் சாதிக்காய் உற்பத்தி செய்யப்படுகின்றன.அப்பிரதேசங்களில் தொடர்ந்து பல நாட்கள் பெய்த மழை காரணமாக பயிர்களில் ஒருவகை வைரஸ் தாக்கம் ஏற்பட்டுள்ளன. பொதுவாக பெப்ரவரி மாதமளவில் அறுவடை மேற்கொள்வதாகவும் ஆனால் இம்முறை அறுவடையில் வீழ்ச்சி ஏற்பட இடமிருப்பதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.இது தெடர்பாக ஏற்றுமதி விளைபொருட்கள் திணைக்கள அதிகாரி ஒருவர், 4 அல்லது 5 நாட்களில் கிராம்பின் பிஞ்சுக் காய்கள் கழன்று சென்றுவிடுவதாகவும் கடும் மழை பெய்வதால் இம்முறை கிராம்பு விளைச்சலில் பாதிப்பு ஏற்படக்கூடும் எனவும் தெரிவித்தார்.