• Jul 05 2025

மேடையில் காதலை உறுதி செய்த விஷால் - தன்ஷிகா..! கல்யாண தேதி அறிவிப்பு

Chithra / May 20th 2025, 10:42 am
image

 

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஷால் முன்பு பல வெற்றி படங்களை ரசிகர்களுக்கு வழங்கியவர். இன்றும் பல பெண்களின் மனதில் கனவு நாயகனாக வாழ்ந்து வருகின்றார். 

இவருக்கு ஆண் ரசிகர்களை விட பெண் ரசிகர்களே அதிகம் சமீபத்தில் இவர் 12 ஆண்டுகளுக்கு முன்பு நடித்த "மதகஜ ராஜா " திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஷால் கை நடுக்கத்துடன் வந்து பலரால் அனுதாபத்துக்கு உள்ளாகினார். ஒரு சிலர் இவர் போதைக்கு அடிமையாகி இருப்பதாக விமர்சித்தனர். 

இதனால் பெரிதும் உடைந்தார். அண்மையில் திருநங்கையர்களுக்கு இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் மயங்கி விழுந்தார். 

மேலும் நடிகை தன்ஷிகா பேசும்போது விஷால் உடன் தனது திருமணம் வருகின்ற ஆகஸ்ட் 29 ஆம் தேதி நடைபெற இருப்பதாக அறிவித்தார். விஷால் பிறந்தநாள் அது என்பதால் தான் நாங்கள் அந்த தேதியை தேர்வு செய்து இருப்பதாக கூறி இருக்கின்றனர். 

அதன்போது தன்ஷிகா கூறியதாவது, “எங்களுடைய லவ் நியூஸ் வெளியான உடனே, ‘இதயாரு லீக் பண்ணாங்கன்னு நாங்க சிந்திச்சுக்கிட்டு இருக்கோம். ஏன்னா... ஆகஸ்ட் 29 தான் நாங்க முடிவு பண்ணோம் ‘ஓகே, இது உண்மையான உணர்வு, காதலிக்கலாம் என்று. ஆனா, அந்த முடிவுக்குப் பிறகு, இவ்வளவு வேகமா  இது பப்ளிக் ஆகும் என்று எதிர்பாக்கல.." எனக் கூறியிருந்தார். 


அது ஒரு திடீர் திருப்பம் போல இருந்தது என்றும் பகிர்ந்துள்ளார். மேலும், “ஒரு ரெண்டு மாசமாவது சுகந்திரமா, யாருக்கும் தெரியாம திரிவோம்னு நினைச்சோம். ஆனா அதுக்கு வாய்ப்பே இல்ல...!” என்றும் தெரிவித்திருந்தார்.

அத்துடன் தன்ஷிகாவிடம் செய்தியாளர் ஒருவர், “அவரை எப்படி லவ் பண்ண ஆரம்பிச்சீங்க..!" என்று கேட்டிருந்தார். அதுக்கு தன்ஷிகா, "இதெல்லாம் வேற ஒரு இண்டர்வியூவில் சொல்லுறேன். இப்போ இவ்வளவும் காணும்..!” என்று கூறியிருந்தார்.

தன்ஷிகா – விஷால் காதல் விவகாரம், தமிழ் சினிமா உலகில் தற்போது பேசப்படும் ஹாட் டாபிக். அவர்கள் இருவரும் இது குறித்து மேலும் வெளிப்படையாகப் பேசும் வரை, ரசிகர்கள் இது பற்றி வெளியாகும் கருத்துக்களுக்காக எதிர்பார்த்துக் காத்திருப்பார்கள்.

மேடையில் காதலை உறுதி செய்த விஷால் - தன்ஷிகா. கல்யாண தேதி அறிவிப்பு  தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஷால் முன்பு பல வெற்றி படங்களை ரசிகர்களுக்கு வழங்கியவர். இன்றும் பல பெண்களின் மனதில் கனவு நாயகனாக வாழ்ந்து வருகின்றார். இவருக்கு ஆண் ரசிகர்களை விட பெண் ரசிகர்களே அதிகம் சமீபத்தில் இவர் 12 ஆண்டுகளுக்கு முன்பு நடித்த "மதகஜ ராஜா " திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஷால் கை நடுக்கத்துடன் வந்து பலரால் அனுதாபத்துக்கு உள்ளாகினார். ஒரு சிலர் இவர் போதைக்கு அடிமையாகி இருப்பதாக விமர்சித்தனர். இதனால் பெரிதும் உடைந்தார். அண்மையில் திருநங்கையர்களுக்கு இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் மயங்கி விழுந்தார். மேலும் நடிகை தன்ஷிகா பேசும்போது விஷால் உடன் தனது திருமணம் வருகின்ற ஆகஸ்ட் 29 ஆம் தேதி நடைபெற இருப்பதாக அறிவித்தார். விஷால் பிறந்தநாள் அது என்பதால் தான் நாங்கள் அந்த தேதியை தேர்வு செய்து இருப்பதாக கூறி இருக்கின்றனர். அதன்போது தன்ஷிகா கூறியதாவது, “எங்களுடைய லவ் நியூஸ் வெளியான உடனே, ‘இதயாரு லீக் பண்ணாங்கன்னு நாங்க சிந்திச்சுக்கிட்டு இருக்கோம். ஏன்னா. ஆகஸ்ட் 29 தான் நாங்க முடிவு பண்ணோம் ‘ஓகே, இது உண்மையான உணர்வு, காதலிக்கலாம் என்று. ஆனா, அந்த முடிவுக்குப் பிறகு, இவ்வளவு வேகமா  இது பப்ளிக் ஆகும் என்று எதிர்பாக்கல." எனக் கூறியிருந்தார். அது ஒரு திடீர் திருப்பம் போல இருந்தது என்றும் பகிர்ந்துள்ளார். மேலும், “ஒரு ரெண்டு மாசமாவது சுகந்திரமா, யாருக்கும் தெரியாம திரிவோம்னு நினைச்சோம். ஆனா அதுக்கு வாய்ப்பே இல்ல.” என்றும் தெரிவித்திருந்தார்.அத்துடன் தன்ஷிகாவிடம் செய்தியாளர் ஒருவர், “அவரை எப்படி லவ் பண்ண ஆரம்பிச்சீங்க." என்று கேட்டிருந்தார். அதுக்கு தன்ஷிகா, "இதெல்லாம் வேற ஒரு இண்டர்வியூவில் சொல்லுறேன். இப்போ இவ்வளவும் காணும்.” என்று கூறியிருந்தார்.தன்ஷிகா – விஷால் காதல் விவகாரம், தமிழ் சினிமா உலகில் தற்போது பேசப்படும் ஹாட் டாபிக். அவர்கள் இருவரும் இது குறித்து மேலும் வெளிப்படையாகப் பேசும் வரை, ரசிகர்கள் இது பற்றி வெளியாகும் கருத்துக்களுக்காக எதிர்பார்த்துக் காத்திருப்பார்கள்.

Advertisement

Advertisement

Advertisement