தமிழ் பொதுவேட்பாளர் என்பது எமது இனத்தின் அடையாளம். ஜனாதிபதி தேர்தலின் போது இரண்டாவது வாக்காக சஜித்துக்கு இடவேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் உமாச்சந்திர பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
Coalion for Incisive Impact அமைப்பின் ஏற்பாட்டில், பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் பிரதிநிதிகள் மற்றும் இளையோர் இடையே கேள்வி பதில் நிகழ்வொன்று யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் விடுதியில் நேற்றையதினம் (27) இடம்பெற்றது.
இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
பல சந்தர்ப்பங்களில் வடக்கு கிழக்குக்கு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச விஜயம் செய்யும் போது கடந்த 5 வருடங்களாக எதிர்க்கட்சி தலைவரோடு பயணிக்கவுள்ள வகையில் நாட்டில் அதிகமாக உள்ள இடங்களில் நாட்டின் எதிர்க்கட்சி தலைவரை கொண்டு சென்று மக்களோடு சம்பந்தப்படுத்தியுள்ள வகையில் பல இடங்களில் அவர் சொல்கின்ற விடயம் 13 ஐ முழுமையாக தருவேன் என்று சொல்லியிருக்கின்றார்.
அதற்கு மேலதிகமாக எங்களுடைய மக்களுக்காக சஜித் பிரேமதாசா ஒவ்வொரு இடங்களிலும் சொல்லுகின்ற விடயம் இலங்கையர்களாக வாழுகின்ற வாய்ப்பு என்று சொல்லியிருக்கின்றார். எங்களுடைய விஞ்ஞாபனம் வியாழக்கிழமை வெளிவர இருக்கிறது.
இதனை கடந்து பொது வேட்பாளர் தொடர்பான விடயத்தையும் நாங்கள் சொல்ல வேண்டும் ஏனெனில் நான் ஒரு தேசிய கட்சி உறுப்பினராக நான் இருந்தாலும் நானும் இந்த மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழச்சி.
அதுமட்டுமல்லாமல் யுத்தத்தால் காலங்கடந்துதான் என்னுடைய அரசியல் பயணம் ஒரு தமிழ் பிரதிநிதித்துவம் , அதாவது வடக்கு கிழக்கை சார்ந்து தான் கட்சிகளினுடைய பிரசன்னம் கொழும்பிலே இல்லாத காரணத்தினால் என்னுடைய வாக்குகளை ஒரு தேசிய கட்சிக்கு வழங்கிய காரணத்தினால் பழக்கப்பட்டு என்னுடைய அரசியல் பயணம் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஆரம்பமானது.
ஆனால் கட்சி சார்ந்து கோட்டபாஜ ராஜபக்ஷவுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என்ற தீர்மானம் எடுத்த போது நான் சஜித் பிரேமதாசாவோடு பயணிக்கிறேன். எனவே பொது வேட்பாளர் என்பது எங்களினுடைய இலக்கினுடைய அடையாளம். அந்த பொது வேட்பாளரை தெரிவு செய்கின்ற உரிமையை நான் மதிக்கின்றேன். அது சர்வதேச ரீதியாக உங்களினுடைய இருப்பை காட்டுகின்ற ஒரு முயற்சி என்று தான் சொல்கிறார்கள். அதே நேரத்தில் இரண்டாவது வாக்காக சஜித் பிரேமதாசாவுக்கு கொடுத்து இந்த நாட்டின் ஜனாதிபதியாக, நாட்டின் மாற்றத்துக்காக, நீங்கள் வாக்கை பயன்படுத்தவேண்டும் என்பது எங்களினுடைய வேண்டுகோள் என அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ் பொது வேட்பாளருக்கு வாக்களியுங்கள் - சஜித் அணியின் யாழ் அமைப்பாளர் தெரிவிப்பு தமிழ் பொதுவேட்பாளர் என்பது எமது இனத்தின் அடையாளம். ஜனாதிபதி தேர்தலின் போது இரண்டாவது வாக்காக சஜித்துக்கு இடவேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் உமாச்சந்திர பிரகாஷ் தெரிவித்துள்ளார்.Coalion for Incisive Impact அமைப்பின் ஏற்பாட்டில், பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் பிரதிநிதிகள் மற்றும் இளையோர் இடையே கேள்வி பதில் நிகழ்வொன்று யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் விடுதியில் நேற்றையதினம் (27) இடம்பெற்றது.இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், பல சந்தர்ப்பங்களில் வடக்கு கிழக்குக்கு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச விஜயம் செய்யும் போது கடந்த 5 வருடங்களாக எதிர்க்கட்சி தலைவரோடு பயணிக்கவுள்ள வகையில் நாட்டில் அதிகமாக உள்ள இடங்களில் நாட்டின் எதிர்க்கட்சி தலைவரை கொண்டு சென்று மக்களோடு சம்பந்தப்படுத்தியுள்ள வகையில் பல இடங்களில் அவர் சொல்கின்ற விடயம் 13 ஐ முழுமையாக தருவேன் என்று சொல்லியிருக்கின்றார். அதற்கு மேலதிகமாக எங்களுடைய மக்களுக்காக சஜித் பிரேமதாசா ஒவ்வொரு இடங்களிலும் சொல்லுகின்ற விடயம் இலங்கையர்களாக வாழுகின்ற வாய்ப்பு என்று சொல்லியிருக்கின்றார். எங்களுடைய விஞ்ஞாபனம் வியாழக்கிழமை வெளிவர இருக்கிறது. இதனை கடந்து பொது வேட்பாளர் தொடர்பான விடயத்தையும் நாங்கள் சொல்ல வேண்டும் ஏனெனில் நான் ஒரு தேசிய கட்சி உறுப்பினராக நான் இருந்தாலும் நானும் இந்த மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழச்சி. அதுமட்டுமல்லாமல் யுத்தத்தால் காலங்கடந்துதான் என்னுடைய அரசியல் பயணம் ஒரு தமிழ் பிரதிநிதித்துவம் , அதாவது வடக்கு கிழக்கை சார்ந்து தான் கட்சிகளினுடைய பிரசன்னம் கொழும்பிலே இல்லாத காரணத்தினால் என்னுடைய வாக்குகளை ஒரு தேசிய கட்சிக்கு வழங்கிய காரணத்தினால் பழக்கப்பட்டு என்னுடைய அரசியல் பயணம் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஆரம்பமானது. ஆனால் கட்சி சார்ந்து கோட்டபாஜ ராஜபக்ஷவுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என்ற தீர்மானம் எடுத்த போது நான் சஜித் பிரேமதாசாவோடு பயணிக்கிறேன். எனவே பொது வேட்பாளர் என்பது எங்களினுடைய இலக்கினுடைய அடையாளம். அந்த பொது வேட்பாளரை தெரிவு செய்கின்ற உரிமையை நான் மதிக்கின்றேன். அது சர்வதேச ரீதியாக உங்களினுடைய இருப்பை காட்டுகின்ற ஒரு முயற்சி என்று தான் சொல்கிறார்கள். அதே நேரத்தில் இரண்டாவது வாக்காக சஜித் பிரேமதாசாவுக்கு கொடுத்து இந்த நாட்டின் ஜனாதிபதியாக, நாட்டின் மாற்றத்துக்காக, நீங்கள் வாக்கை பயன்படுத்தவேண்டும் என்பது எங்களினுடைய வேண்டுகோள் என அவர் தெரிவித்துள்ளார்.