• Nov 25 2024

தமிழ்ப் பிரதிநிதித்துவத்தை பாதுகாக்கும் வகையில் வாக்களியுங்கள்- வடிவேல் சுரேஷ் வேண்டுகோள்..!

Sharmi / Oct 21st 2024, 8:31 am
image

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் தமிழ்ப் பிரதிநிதித்துவத்தை பாதுகாக்கும் வகையில் வாக்களிக்குமாறு முன்னாள் இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஷ்  வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இம்முறை தேர்தலில் போட்டியிட பயந்து பலரும் ஒதுங்கிக் கொண்டுள்ள நிலையில், நான் நமது பிரதிநிதித்துவத்தைக் காப்பதற்காக துணிந்து போட்டியிட முன்வந்துள்ளேன்.

இம்முறை நாடாளுமன்றத்தில் நமது பிரதிநிதித்துவத்தைக் குறைப்பதற்கான சதி முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

அதனைத் தடுப்பதற்காகவே ஐக்கிய மக்கள் குரல் கட்சியின் ஊடாக போட்டியிடுகின்றேன்.

இம்முறை நமக்கான நாடாளுமன்றப் பிரதிநிதித்துவம் இல்லாது போனால், எதிர்வரும் காலங்களில் நடைபெறவுள்ள உளளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகளுக்கான தேர்தல்களின் போது அது எதிரொலிக்கும்.

எனவே நமது தமிழ்ப் பிரதிநிதித்துவத்தை பாதுகாக்கும் வகையில் வாக்களியுங்கள். அது வடிவேல் சுரேஷ் ஆகத் தான் இருக்க வேண்டுமென்பதில்லை. பொருத்தமான எவருக்கேனும் வாக்களியுங்கள் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


தமிழ்ப் பிரதிநிதித்துவத்தை பாதுகாக்கும் வகையில் வாக்களியுங்கள்- வடிவேல் சுரேஷ் வேண்டுகோள். எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் தமிழ்ப் பிரதிநிதித்துவத்தை பாதுகாக்கும் வகையில் வாக்களிக்குமாறு முன்னாள் இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஷ்  வேண்டுகோள் விடுத்துள்ளார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,இம்முறை தேர்தலில் போட்டியிட பயந்து பலரும் ஒதுங்கிக் கொண்டுள்ள நிலையில், நான் நமது பிரதிநிதித்துவத்தைக் காப்பதற்காக துணிந்து போட்டியிட முன்வந்துள்ளேன்.இம்முறை நாடாளுமன்றத்தில் நமது பிரதிநிதித்துவத்தைக் குறைப்பதற்கான சதி முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதனைத் தடுப்பதற்காகவே ஐக்கிய மக்கள் குரல் கட்சியின் ஊடாக போட்டியிடுகின்றேன்.இம்முறை நமக்கான நாடாளுமன்றப் பிரதிநிதித்துவம் இல்லாது போனால், எதிர்வரும் காலங்களில் நடைபெறவுள்ள உளளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகளுக்கான தேர்தல்களின் போது அது எதிரொலிக்கும்.எனவே நமது தமிழ்ப் பிரதிநிதித்துவத்தை பாதுகாக்கும் வகையில் வாக்களியுங்கள். அது வடிவேல் சுரேஷ் ஆகத் தான் இருக்க வேண்டுமென்பதில்லை. பொருத்தமான எவருக்கேனும் வாக்களியுங்கள் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement