• Nov 17 2024

இலங்கையின் ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்களிப்பு நாடளாவிய ரீதியில் ஆரம்பம்!

Tamil nila / Sep 21st 2024, 9:31 am
image

இலங்கையின் 9வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான ஜனாதிபதி தேர்தலானது இன்று காலை 7 மணியளவில் நாடளாவிய ரீதியில் ஆரம்பமாகியது.


யாழ்ப்பாணத்தில் 492,280 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதுடன், 511 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் வட்டுக்கோட்டை தேர்தல் தொகுதியில், வள்ளியம்மை வித்தியசாலை, முருகமூர்த்தி வித்தியாசாலை, அராலி சரஸ்வதி கல்லூரி மற்றும் வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரி ஆகிய பாடசாலைகளில் அமைக்கப்பட்டுள்ள வாக்களிப்பு நிலையங்களில் மக்கள் வாக்களிப்பதை படத்தில் காணலாம்.


அத்துடன் மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா,மட்டக்களப்பு,பட்டிருப்பு ஆகிய தேர்தல் தொகுதிகளில் சுமார் 442 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிக்கும் பணிகள் அமைதியான முறையில் நடைபெற்றுவருகின்றது.


திகாமடுல்ல தேர்தல்  மாவட்டத்தில்  அம்பாறை ,பொத்துவில் , சம்மாந்துறை  ,கல்முனை,ஆகிய தேர்தல் தொகுதிகளில் உள்ள வாக்களிப்பு நிலையங்களில் வாக்காளர்கள்    வாக்களிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.



வன்னி மாவட்டம் மன்னார் தேர்தல் தொகுதியில் 98 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்புகள் இடம்பெற்று வருகின்றது.



கிளிநொச்சி மாவட்டத்தில் 108 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன், இம்முறை 100 907 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

இலங்கையின் ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்களிப்பு நாடளாவிய ரீதியில் ஆரம்பம் இலங்கையின் 9வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான ஜனாதிபதி தேர்தலானது இன்று காலை 7 மணியளவில் நாடளாவிய ரீதியில் ஆரம்பமாகியது.யாழ்ப்பாணத்தில் 492,280 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதுடன், 511 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.இந்நிலையில் வட்டுக்கோட்டை தேர்தல் தொகுதியில், வள்ளியம்மை வித்தியசாலை, முருகமூர்த்தி வித்தியாசாலை, அராலி சரஸ்வதி கல்லூரி மற்றும் வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரி ஆகிய பாடசாலைகளில் அமைக்கப்பட்டுள்ள வாக்களிப்பு நிலையங்களில் மக்கள் வாக்களிப்பதை படத்தில் காணலாம்.அத்துடன் மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா,மட்டக்களப்பு,பட்டிருப்பு ஆகிய தேர்தல் தொகுதிகளில் சுமார் 442 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிக்கும் பணிகள் அமைதியான முறையில் நடைபெற்றுவருகின்றது.திகாமடுல்ல தேர்தல்  மாவட்டத்தில்  அம்பாறை ,பொத்துவில் , சம்மாந்துறை  ,கல்முனை,ஆகிய தேர்தல் தொகுதிகளில் உள்ள வாக்களிப்பு நிலையங்களில் வாக்காளர்கள்    வாக்களிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.வன்னி மாவட்டம் மன்னார் தேர்தல் தொகுதியில் 98 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்புகள் இடம்பெற்று வருகின்றது.கிளிநொச்சி மாவட்டத்தில் 108 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன், இம்முறை 100 907 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement