• Nov 28 2024

மக்களின் வரிப்பணத்தில் நடுக்கடலில் பார்ட்டி கேட்குதா? - சஜித் எம்.பி கடுந்தாக்கு...!samugammedia

Sharmi / Jan 12th 2024, 4:06 pm
image

பாடசாலை மாணவர்களுக்கு உணவு வேளை இல்லாமல் அவர்கள் மயக்கம் போட்டு விழுகின்றனர். கர்ப்பிணி தாய்மார்கள் போசாக்கு இன்றி நிர்க்கதி நிலையில் உள்ளனர். ஆனால் அரச வளங்களை பயன்படுத்தி மஹிந்த ராஜபக்ச குழுவினர் கடலுக்கு மத்தியில் விருந்துபசாரத்தை நடத்தியிருப்பது வெறுக்கத்தக்க செயல் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கடுமையாக சாடியுள்ளார்.

இன்றைய பாராளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

"நேற்றைய தினம் நான் மிகவும் தெளிவாக பொறுப்புடன் கூறி இருந்தேன். இரண்டு கப்பல்களில்  பெயரிட்டு கூறியிருந்தேன். இரண்டு  கப்பல்களை பயன்படுத்தி அரச தரப்பில் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் அல்லர்,  மிகவும் சிறிய தொகையினர் அந்தப் புகைப்படங்களை உங்களுக்கு பார்க்க முடியும், யார் வந்தது யார் வரவில்லை என்று தெரியும். முன்னாள் ஜனாதிபதி அதில் சமூகமளித்திருந்தார். 

துறைமுகத்தினுடைய வளங்களை பயன்படுத்தி தான் கடலுக்கு மத்தியில் போய் இவர்கள் அந்த விருந்துபசார நிகழ்ச்சியை நடத்தி உள்ளார்கள். அதை அவதானிக்கும் போது இது ஒரு கள விஜயம் தானா? என்று உண்மையில் புரிந்துகொள்ள முடியும்.

புதுவருசத்துக்கான ஒரு விருந்துபசாரமாக தான் நான் இதைப் பார்க்கிறேன். எமக்கு பிரச்சினை இல்லை, தமது சொந்த செலவில் தனியாக படகு மூலம் அவர்கள் இந்திய - பசுபிக் சமுத்திரத்தில் போய் வேறு ஏதாவது ஒரு விடயத்தில் கலந்து கொள்ள முடியும். அது அவர்களின் தனிப்பட்ட உரிமை.

துறைமுக அதிகார சபையில் பணியாற்றுகின்ற ஊழியர்களின் பிள்ளைகள் பார்வையிட அனுமதி கோரிய கடிதத்தை நீங்கள் பார்வையிட முடியும். அதிகார சபையின் எந்த ஒரு உபகரணங்களும் படகுகளும் பாவிப்பதற்கு குடும்ப அங்கத்தவர்களுக்கு தடை செய்யப்பட்டுள்ளது.

துறைமுக அதிகார சபையில் பணியாற்றுகின்ற அங்கத்தவர்களுக்கு இல்லாத சிறப்புரிமைகள் எவ்வாறு மக்கள் பிரதிநிதிகளுக்கு கிடைக்கப் பெறுகின்றது? இந்த நாட்டினுடைய பணம். வரி செலுத்துகின்ற மக்களினுடைய பணம் வீணடிக்கப்பட்டிருக்கிறது. கப்பல் இரண்டுக்கும் எண்ணெய் நிரப்பப்பட்டது துறைமுக அதிகாரசபையின் பிரதி அமைச்சரால். 

விஸ்கி மதுபானங்களுடன் உணவு வழங்கப்பட்டுள்ளது. அதிகாரசபையால் ஆசீர்வாதம்  நிதி அனுசரணை வழங்கப்பட்டுள்ளது.  பொய்யை சொல்லி என் வாயைக் கிளற வேண்டாம். நான் சாட்சி ஆதாரத்துடன் தெளிவாக சொல்கின்றேன்.

 வங்குரோத்து அடைந்த நாட்டில் உங்களுடைய பணத்தில் உங்களிடம் படகு இருந்தால், கப்பல் இருந்தால் அவற்றில் எவ்வளவு தூரம் என்றாலும் போய் சமுத்திரத்தில் கலந்துரையாடல், விருந்துபசாரத்தை நடத்த முடியும்.  

அரச வளங்களை பயன்படுத்தி கடலுக்கு மத்தியில் மேற்கொண்டுள்ளீர்கள். வெட்கமாக இருக்கின்றது. வெறுக்கத்தக்க செயலாக இருக்கின்றது. பாடசாலை பிள்ளைகளுக்கு உணவு வேளை இல்லாமல் அவர்கள் மயக்கம் போட்டு விழுகின்றார்கள்.

கர்ப்பிணி தாய்மார்கள் நிர்க்கதி நிலையில் உள்ளனர். முதியோர்கள், இளம் தாய்மார்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் பார்ட்டி போடுவதற்கும் நாடகம் ஆடுவதற்கும் இவர்கள் யாருக்கும் ஒரு பண்பாடு ஒழுக்க விழுமியம் இல்லை. என்று தெரிவித்தார்.


மக்களின் வரிப்பணத்தில் நடுக்கடலில் பார்ட்டி கேட்குதா - சஜித் எம்.பி கடுந்தாக்கு.samugammedia பாடசாலை மாணவர்களுக்கு உணவு வேளை இல்லாமல் அவர்கள் மயக்கம் போட்டு விழுகின்றனர். கர்ப்பிணி தாய்மார்கள் போசாக்கு இன்றி நிர்க்கதி நிலையில் உள்ளனர். ஆனால் அரச வளங்களை பயன்படுத்தி மஹிந்த ராஜபக்ச குழுவினர் கடலுக்கு மத்தியில் விருந்துபசாரத்தை நடத்தியிருப்பது வெறுக்கத்தக்க செயல் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கடுமையாக சாடியுள்ளார்.இன்றைய பாராளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,"நேற்றைய தினம் நான் மிகவும் தெளிவாக பொறுப்புடன் கூறி இருந்தேன். இரண்டு கப்பல்களில்  பெயரிட்டு கூறியிருந்தேன். இரண்டு  கப்பல்களை பயன்படுத்தி அரச தரப்பில் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் அல்லர்,  மிகவும் சிறிய தொகையினர் அந்தப் புகைப்படங்களை உங்களுக்கு பார்க்க முடியும், யார் வந்தது யார் வரவில்லை என்று தெரியும். முன்னாள் ஜனாதிபதி அதில் சமூகமளித்திருந்தார். துறைமுகத்தினுடைய வளங்களை பயன்படுத்தி தான் கடலுக்கு மத்தியில் போய் இவர்கள் அந்த விருந்துபசார நிகழ்ச்சியை நடத்தி உள்ளார்கள். அதை அவதானிக்கும் போது இது ஒரு கள விஜயம் தானா என்று உண்மையில் புரிந்துகொள்ள முடியும்.புதுவருசத்துக்கான ஒரு விருந்துபசாரமாக தான் நான் இதைப் பார்க்கிறேன். எமக்கு பிரச்சினை இல்லை, தமது சொந்த செலவில் தனியாக படகு மூலம் அவர்கள் இந்திய - பசுபிக் சமுத்திரத்தில் போய் வேறு ஏதாவது ஒரு விடயத்தில் கலந்து கொள்ள முடியும். அது அவர்களின் தனிப்பட்ட உரிமை.துறைமுக அதிகார சபையில் பணியாற்றுகின்ற ஊழியர்களின் பிள்ளைகள் பார்வையிட அனுமதி கோரிய கடிதத்தை நீங்கள் பார்வையிட முடியும். அதிகார சபையின் எந்த ஒரு உபகரணங்களும் படகுகளும் பாவிப்பதற்கு குடும்ப அங்கத்தவர்களுக்கு தடை செய்யப்பட்டுள்ளது.துறைமுக அதிகார சபையில் பணியாற்றுகின்ற அங்கத்தவர்களுக்கு இல்லாத சிறப்புரிமைகள் எவ்வாறு மக்கள் பிரதிநிதிகளுக்கு கிடைக்கப் பெறுகின்றது இந்த நாட்டினுடைய பணம். வரி செலுத்துகின்ற மக்களினுடைய பணம் வீணடிக்கப்பட்டிருக்கிறது. கப்பல் இரண்டுக்கும் எண்ணெய் நிரப்பப்பட்டது துறைமுக அதிகாரசபையின் பிரதி அமைச்சரால். விஸ்கி மதுபானங்களுடன் உணவு வழங்கப்பட்டுள்ளது. அதிகாரசபையால் ஆசீர்வாதம்  நிதி அனுசரணை வழங்கப்பட்டுள்ளது.  பொய்யை சொல்லி என் வாயைக் கிளற வேண்டாம். நான் சாட்சி ஆதாரத்துடன் தெளிவாக சொல்கின்றேன். வங்குரோத்து அடைந்த நாட்டில் உங்களுடைய பணத்தில் உங்களிடம் படகு இருந்தால், கப்பல் இருந்தால் அவற்றில் எவ்வளவு தூரம் என்றாலும் போய் சமுத்திரத்தில் கலந்துரையாடல், விருந்துபசாரத்தை நடத்த முடியும்.  அரச வளங்களை பயன்படுத்தி கடலுக்கு மத்தியில் மேற்கொண்டுள்ளீர்கள். வெட்கமாக இருக்கின்றது. வெறுக்கத்தக்க செயலாக இருக்கின்றது. பாடசாலை பிள்ளைகளுக்கு உணவு வேளை இல்லாமல் அவர்கள் மயக்கம் போட்டு விழுகின்றார்கள்.கர்ப்பிணி தாய்மார்கள் நிர்க்கதி நிலையில் உள்ளனர். முதியோர்கள், இளம் தாய்மார்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் பார்ட்டி போடுவதற்கும் நாடகம் ஆடுவதற்கும் இவர்கள் யாருக்கும் ஒரு பண்பாடு ஒழுக்க விழுமியம் இல்லை. என்று தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement