எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்யும் வர்த்தகர்களைத் தேடி மேற்கொள்ளும் சுற்றிவளைப்புகளை அதிகரிக்கவுள்ளதாக பாவனையாளர்கள் அலுவல்கள் அதிகார சபை தெரிவித்துள்ளது.
பல்வேறு விலைகளில் சில போலி வர்த்தகர்களும், ஆலை உரிமையாளர்களும் அரிசி விற்பனை செய்து வருவதோடு, அரிசியை மறைத்து வைத்துள்ளமை தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாக அந்த அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.
பச்சை அரிசி, நாட்டரிசி, சம்பா, கீரி சம்பா அரிசி ஆகியவற்றுக்காக இப்போது உச்சபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த வருடத்தின் கடந்த மாதங்களில் அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்த 500 பேருக்கு மேற்பட்ட வர்த்தகர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பாவனையாளர்கள் அலுவல்கள் அதிகார சபை தெரிவித்துள்ளது.
அரிசி விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்யும் வர்த்தகர்களைத் தேடி மேற்கொள்ளும் சுற்றிவளைப்புகளை அதிகரிக்கவுள்ளதாக பாவனையாளர்கள் அலுவல்கள் அதிகார சபை தெரிவித்துள்ளது.பல்வேறு விலைகளில் சில போலி வர்த்தகர்களும், ஆலை உரிமையாளர்களும் அரிசி விற்பனை செய்து வருவதோடு, அரிசியை மறைத்து வைத்துள்ளமை தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாக அந்த அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.பச்சை அரிசி, நாட்டரிசி, சம்பா, கீரி சம்பா அரிசி ஆகியவற்றுக்காக இப்போது உச்சபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இந்த வருடத்தின் கடந்த மாதங்களில் அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்த 500 பேருக்கு மேற்பட்ட வர்த்தகர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பாவனையாளர்கள் அலுவல்கள் அதிகார சபை தெரிவித்துள்ளது.