அமெரிக்காவில் வசிக்கும் 14 வயது NRI மாணவர் சித்தார்த் நந்தியாலா உருவாக்கிய செயற்கை நுண்ணறிவு சாதனம் மருத்துவத் துறையில் புரட்சியை ஏற்படுத்த தயாராக உள்ளது.
நந்தியாலா உருவாக்கிய 'சர்க்காடியாவ்' என்ற செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான அப்ளிகேஷன் மூலம் வெறும் 7 நொடிகளில் இதய நோயை கண்டறிய முடியும்.
நந்தியாலா உருவாக்கிய இந்த செயலிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
ஆந்திரப் பிரதேச முதல்வர் என். சந்திரபாபு நாயுடு, சிறுவனை சந்தித்து பாராட்டியுள்ளார்.
சித்தார்த்தின் குடும்பம் ஆந்திரப் பிரதேசத்தின் அனந்தபூரை சேர்ந்தவர்கள். தற்போது அமெரிக்காவின் டல்லாஸில் (Dallas, USA) வசித்து வருகின்றனர்.
சித்தார்த் உருவாக்கிய செயலி ஆந்திரப் பிரதேச அரசால் சோதனை செய்யப்பட்டு வருகிறது.
சித்தார்த் தனது அதிநவீன மருத்துவ AI செயலியை குண்டூர் அரச பொது மருத்துவமனையில் (Guntur Government General Hospital) நோயாளிகளிடம் வெற்றிகரமாக சோதனை செய்துள்ளார்.
இந்த செயலியின் துல்லிய விகிதம் 96% க்கும் அதிகமாக உள்ளது. இதுவரை அமெரிக்காவில் 15,000 க்கும் மேற்பட்ட நோயாளிகளிடமும், இந்தியாவில் 700 க்கும் மேற்பட்ட நோயாளிகளிடமும் சோதனை செய்யப்பட்டுள்ளது.
சித்தார்த்தின் இந்த அற்புதமான கண்டுபிடிப்பை அறிந்த ஆந்திரப் பிரதேச முதல்வர் என். சந்திரபாபு நாயுடு, அவரை தலைமைச் செயலகத்திற்கு அழைத்து சிறப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும் அவரது எதிர்காலத்திற்கு வாழ்த்து தெரிவித்தார்.
நாயுடு சித்தார்த்தின் முழு விவரங்களையும் கேட்டறிந்து, செயற்கை நுண்ணறிவு துறையில் அவர் செய்த பங்களிப்பை பாராட்டினார்.
மேலும், 14 வயது சிறுவன் இதய நோய்களை கண்டுபிடிப்பதை எளிதாக்குகிறான். சித்தார்த் நந்தியாலா ஒரு இளம் AI கண்டுபிடிப்பாளர் ஆவார்.
Oracle மற்றும் ARM சான்றிதழ்களைப் பெற்ற உலகின் மிகக் குறைந்த வயது AI சான்றிதழ் பெற்ற நிபுணர்களில் ஒருவர். அவரது CircadiaV செயலி மருத்துவத் துறையில் ஒரு பெரிய புரட்சியை ஏற்படுத்தும் என்று முதல்வர் நாயுடு கூறினார்.
நான் சித்தார்த்தின் அற்புதமான திறமையையும், மனித குலத்தின் நலனுக்கான அவரது தொழில்நுட்ப சிந்தனையையும் கண்டு மிகவும் ஈர்க்கப்பட்டேன். இந்த இளம் விஞ்ஞானி அனைவருக்கும் ஒரு உத்வேகம். அவரது சுகாதார தொழில்நுட்ப கனவுகளை நனவாக்க ஆந்திரப் பிரதேச அரசு முழு ஆதரவு அளிக்கும் என்றும் அவர் கூறினார்.
7 நொடியில் இதய நோயை கண்டுபிடிக்கும் செயலி மருத்துவத் துறையில் புரட்சியை ஏற்படுத்திய 14 வயது சிறுவன் அமெரிக்காவில் வசிக்கும் 14 வயது NRI மாணவர் சித்தார்த் நந்தியாலா உருவாக்கிய செயற்கை நுண்ணறிவு சாதனம் மருத்துவத் துறையில் புரட்சியை ஏற்படுத்த தயாராக உள்ளது. நந்தியாலா உருவாக்கிய 'சர்க்காடியாவ்' என்ற செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான அப்ளிகேஷன் மூலம் வெறும் 7 நொடிகளில் இதய நோயை கண்டறிய முடியும். நந்தியாலா உருவாக்கிய இந்த செயலிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. ஆந்திரப் பிரதேச முதல்வர் என். சந்திரபாபு நாயுடு, சிறுவனை சந்தித்து பாராட்டியுள்ளார். சித்தார்த்தின் குடும்பம் ஆந்திரப் பிரதேசத்தின் அனந்தபூரை சேர்ந்தவர்கள். தற்போது அமெரிக்காவின் டல்லாஸில் (Dallas, USA) வசித்து வருகின்றனர். சித்தார்த் உருவாக்கிய செயலி ஆந்திரப் பிரதேச அரசால் சோதனை செய்யப்பட்டு வருகிறது.சித்தார்த் தனது அதிநவீன மருத்துவ AI செயலியை குண்டூர் அரச பொது மருத்துவமனையில் (Guntur Government General Hospital) நோயாளிகளிடம் வெற்றிகரமாக சோதனை செய்துள்ளார். இந்த செயலியின் துல்லிய விகிதம் 96% க்கும் அதிகமாக உள்ளது. இதுவரை அமெரிக்காவில் 15,000 க்கும் மேற்பட்ட நோயாளிகளிடமும், இந்தியாவில் 700 க்கும் மேற்பட்ட நோயாளிகளிடமும் சோதனை செய்யப்பட்டுள்ளது.சித்தார்த்தின் இந்த அற்புதமான கண்டுபிடிப்பை அறிந்த ஆந்திரப் பிரதேச முதல்வர் என். சந்திரபாபு நாயுடு, அவரை தலைமைச் செயலகத்திற்கு அழைத்து சிறப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும் அவரது எதிர்காலத்திற்கு வாழ்த்து தெரிவித்தார். நாயுடு சித்தார்த்தின் முழு விவரங்களையும் கேட்டறிந்து, செயற்கை நுண்ணறிவு துறையில் அவர் செய்த பங்களிப்பை பாராட்டினார். மேலும், 14 வயது சிறுவன் இதய நோய்களை கண்டுபிடிப்பதை எளிதாக்குகிறான். சித்தார்த் நந்தியாலா ஒரு இளம் AI கண்டுபிடிப்பாளர் ஆவார்.Oracle மற்றும் ARM சான்றிதழ்களைப் பெற்ற உலகின் மிகக் குறைந்த வயது AI சான்றிதழ் பெற்ற நிபுணர்களில் ஒருவர். அவரது CircadiaV செயலி மருத்துவத் துறையில் ஒரு பெரிய புரட்சியை ஏற்படுத்தும் என்று முதல்வர் நாயுடு கூறினார். நான் சித்தார்த்தின் அற்புதமான திறமையையும், மனித குலத்தின் நலனுக்கான அவரது தொழில்நுட்ப சிந்தனையையும் கண்டு மிகவும் ஈர்க்கப்பட்டேன். இந்த இளம் விஞ்ஞானி அனைவருக்கும் ஒரு உத்வேகம். அவரது சுகாதார தொழில்நுட்ப கனவுகளை நனவாக்க ஆந்திரப் பிரதேச அரசு முழு ஆதரவு அளிக்கும் என்றும் அவர் கூறினார்.