• Nov 22 2024

புற்று நோய் மருந்து குறித்து அதிர்ச்சித் தகவல் - இலங்கையர்களுக்கு எச்சரிக்கை..!

Chithra / Mar 1st 2024, 12:59 pm
image


பதிவு செய்யப்படாத நிறுவனங்களிடமிருந்தே அதிகளவு புற்று நோய் மருந்து வகைகள் இறக்குமதி செய்யப்படுவதாகஅகில இலங்கை மருந்தக உரிமையாளர் சங்கத்தின் தலைவர் சந்திக்க கன்கந்த  குற்றம் சுமத்தியுள்ளார்.

புற்று நோயாளிகளுக்காக இலங்கையில் இறக்குமதி செய்யப்படும் 60 வீதமான மருந்து வகைகள் பதிவு செய்யப்படாத நிறுவனங்களிடமிருந்து தருவிக்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.

புற்று நோய்க்கான மருந்து கொள்வனவு செய்யும் போது அவை ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவில் பதிவு செய்பய்பட்டவையா என்பதனை கவனத்திற்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உரிய தரத்தில் மருந்து வகைகள் காணப்படுகின்றனவா என்பதை கண்டறிவதற்கு இலங்கையில் ஆய்வுகூட பரிசோதனை வசதிகள் கிடையாது.

சட்டவிரோதமான முறையில் மருந்து வகைகள் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யும் நடவடிக்கைகளும் இடம்பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

புற்று நோய் போன்ற நோய்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சரியான தரமான மருந்து வகைகள் வழங்கப்பட வேண்டியது அவசியமானது என சுட்டிக்காட்டியுள்ளார். 

புற்று நோய் மருந்து குறித்து அதிர்ச்சித் தகவல் - இலங்கையர்களுக்கு எச்சரிக்கை. பதிவு செய்யப்படாத நிறுவனங்களிடமிருந்தே அதிகளவு புற்று நோய் மருந்து வகைகள் இறக்குமதி செய்யப்படுவதாகஅகில இலங்கை மருந்தக உரிமையாளர் சங்கத்தின் தலைவர் சந்திக்க கன்கந்த  குற்றம் சுமத்தியுள்ளார்.புற்று நோயாளிகளுக்காக இலங்கையில் இறக்குமதி செய்யப்படும் 60 வீதமான மருந்து வகைகள் பதிவு செய்யப்படாத நிறுவனங்களிடமிருந்து தருவிக்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.புற்று நோய்க்கான மருந்து கொள்வனவு செய்யும் போது அவை ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவில் பதிவு செய்பய்பட்டவையா என்பதனை கவனத்திற்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.உரிய தரத்தில் மருந்து வகைகள் காணப்படுகின்றனவா என்பதை கண்டறிவதற்கு இலங்கையில் ஆய்வுகூட பரிசோதனை வசதிகள் கிடையாது.சட்டவிரோதமான முறையில் மருந்து வகைகள் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யும் நடவடிக்கைகளும் இடம்பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்.புற்று நோய் போன்ற நோய்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சரியான தரமான மருந்து வகைகள் வழங்கப்பட வேண்டியது அவசியமானது என சுட்டிக்காட்டியுள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement