• Nov 23 2024

வெளிநாட்டவர்களுக்கு வீடுகளை வாடகைக்கு வழங்கும் இலங்கையர்களுக்கு கடும் எச்சரிக்கை!

Chithra / Oct 16th 2024, 10:59 am
image

  

வெளிநாட்டவர்களுக்கு வீடுகளை வாடகைக்கு வழங்கும் போதும், ஹோட்டல்களில் அறைகளை வாடகைக்கு வழங்கும் போதும் உரிமையாளர்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என பொலிஸ் பேச்சாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்துவ   எச்சரித்துள்ளார்.

நேற்று  அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்தார்.   

இது தொடர்பில் அவர் மேலும் தெளிவுபடுத்துகையில்,

இணையதளங்களை அடிப்படையாகக் கொண்ட மோசடிகளில் இலங்கையர்கள் சிக்கிக் கொள்ளல் அதிகரித்துள்ளது. 

இலங்கையர்களை அவற்றில் சிக்க வைப்பதும் மோசடிக்காரர்களுக்கு இலகுவாகவுள்ளது. எனவே தான் இங்கு அவ்வாறான குற்றச்செயல்கள் அதிகளவில் இடம்பெறுவதாக தெரிவித்தார்.  

கண்டியில் 140 க்கும் அதிகமானோரும், பாணந்துரையில் 22க்கும் அதிகமானோரும், இராஜகிரியவில் 15 பேரும், கண்டியில் 16 பேரும் என கடந்த சில தினங்களுக்குள் மாத்திரம் 200க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.   

அது மாத்திரமின்றி 500க்கும் மேற்பட்ட கையடக்க தொலைபேசிகள், 200க்கும் மேற்பட்ட கனணிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. 

இந்த சம்பவங்கள் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணகளில் இவ்வாறானவர்களுக்கு வீடுகளை வாடகைக்கு வழங்கும் வீட்டு உரிமையாளர்களும் இவர்களுக்கு உடந்தையாகவுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.  

அதாவது இவர்கள் எவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர் என்பதை அறிந்தே தமது வீடுகளை வாடகைக்கு வழங்குகின்றனர். 

கண்டியில் 77 அறைகள் உள்ள ஒரு ஹோட்டலில் 47 அறைகளை வாடகைக்கு பெற்று அங்கு சகல வசதிகளுடனும் மோசடிகளில் ஈடுபட்டு வந்திருக்கின்றனர்.   

எனவே ஹோட்டல் உரிமையாளர்களும் இது தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும். அவ்வாறில்லை எனில்  கோடிக்கணக்கான பணத்தை இழக்க நேரிடும். என்றார்.   

வெளிநாட்டவர்களுக்கு வீடுகளை வாடகைக்கு வழங்கும் இலங்கையர்களுக்கு கடும் எச்சரிக்கை   வெளிநாட்டவர்களுக்கு வீடுகளை வாடகைக்கு வழங்கும் போதும், ஹோட்டல்களில் அறைகளை வாடகைக்கு வழங்கும் போதும் உரிமையாளர்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என பொலிஸ் பேச்சாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்துவ   எச்சரித்துள்ளார்.நேற்று  அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்தார்.   இது தொடர்பில் அவர் மேலும் தெளிவுபடுத்துகையில்,இணையதளங்களை அடிப்படையாகக் கொண்ட மோசடிகளில் இலங்கையர்கள் சிக்கிக் கொள்ளல் அதிகரித்துள்ளது. இலங்கையர்களை அவற்றில் சிக்க வைப்பதும் மோசடிக்காரர்களுக்கு இலகுவாகவுள்ளது. எனவே தான் இங்கு அவ்வாறான குற்றச்செயல்கள் அதிகளவில் இடம்பெறுவதாக தெரிவித்தார்.  கண்டியில் 140 க்கும் அதிகமானோரும், பாணந்துரையில் 22க்கும் அதிகமானோரும், இராஜகிரியவில் 15 பேரும், கண்டியில் 16 பேரும் என கடந்த சில தினங்களுக்குள் மாத்திரம் 200க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.   அது மாத்திரமின்றி 500க்கும் மேற்பட்ட கையடக்க தொலைபேசிகள், 200க்கும் மேற்பட்ட கனணிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த சம்பவங்கள் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணகளில் இவ்வாறானவர்களுக்கு வீடுகளை வாடகைக்கு வழங்கும் வீட்டு உரிமையாளர்களும் இவர்களுக்கு உடந்தையாகவுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.  அதாவது இவர்கள் எவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர் என்பதை அறிந்தே தமது வீடுகளை வாடகைக்கு வழங்குகின்றனர். கண்டியில் 77 அறைகள் உள்ள ஒரு ஹோட்டலில் 47 அறைகளை வாடகைக்கு பெற்று அங்கு சகல வசதிகளுடனும் மோசடிகளில் ஈடுபட்டு வந்திருக்கின்றனர்.   எனவே ஹோட்டல் உரிமையாளர்களும் இது தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும். அவ்வாறில்லை எனில்  கோடிக்கணக்கான பணத்தை இழக்க நேரிடும். என்றார்.   

Advertisement

Advertisement

Advertisement