• Sep 20 2024

உயிரிழந்த ராஜகுமாரி வீதியில் வீழ்ந்து கிடந்தவரா? நீதிமன்றில் பொலிஸார் தெரிவித்தது என்ன? samugammedia

Chithra / Jun 3rd 2023, 1:04 pm
image

Advertisement

வெலிக்கடை காவல்துறை தடுப்பில் இருந்த போது, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்த பெண், வீதியில் விழுந்து கிடந்தவர் என்ற அடிப்படையிலேயே கொழும்பு தேசிய வைத்தியசாலையில் காவல்துறையால் அனுமதிக்கப்பட்டதாக நீதிமன்றத்தில் தெரியவந்துள்ளது.

வெலிக்கடை காவல்துறை தடுப்பில் இருந்தபோது, உடநலக்குறைவுக்கு உள்ளான நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பதுளையைச் சேர்ந்த வீட்டுப் பணிப்பெண்ணான 42 வயதுடைய ராஜகுமாரி மரணித்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை நேற்று இடம்பெற்றது.

கொழும்பு மேலதிக நீதவான் பண்டார இலங்கசிங்க முன்னிலையில் இந்த வழக்கு நேற்று (02) அழைக்கப்பட்டது.

இதன்போது குற்றப் புலனாய்வு திணைக்களமும், உயிரிழந்த பெண்ணின் சார்பில் முன்னிலையான சட்டத்தரணியும் நீதிமன்றில் இந்த விடயத்தை தெரியப்படுத்தியுள்ளனர்.

அவ்வாறாக வீதியில் வீழ்ந்து கிடந்த பெண் என வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தால், அதற்காக காவல்துறையின் ஒழுங்கு விதிகளின் அடிப்படையில் பின்பற்ற வேண்டிய பல நடைமுறைகள் உள்ளதாக உயிரிழந்த பெண்ணின் சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணி சுட்டிக்காட்டியுள்ளார்.

குறித்த பெண் வீழ்ந்து கிடந்த இடத்தில் பதிவான சாட்சிகளை, அந்தப் பெண்ணை வைத்தியசாலையில் அனுமதித்த காவல்துறை அதிகாரி பதிவு செய்திருக்க வேண்டும் என்றும் சட்டத்தரணி குறிப்பிட்டுள்ளார்.

எனவே, இந்தச் சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெளிவான விசாரணைகளை முன்னெடுக்கும் என தாம் எதிர்பார்ப்பதாகவும் சட்டத்தரணி மன்றில் தெரிவித்துள்ளார்.


இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் உடனடியாக விசாரணை நடத்தி எதிர்வரும் 21ஆம் திகதி நீதிமன்றத்தில் அறிக்கையிடுமாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

வெலிக்கடை காவல்துறை தடுப்பில் இருந்த நிலையில், உயிரிழந்த 42 வயதான பெண் மரணித்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

பதுளை தெமோதரை பகுதியைச் சேர்ந்த குறித்த பெண், கொழும்பில் வசிக்கும் நடிகை ஒருவரின் வீட்டில் பணிப்பெண்ணாக சேவையாற்றிய நிலையில், தங்க நகை திருட்டு சம்பவம் ஒன்று தொடர்பாக கடந்த மாதம் 11ஆம் திகதி வெலிக்கடை காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.

இதனையடுத்து அவர், வெலிக்கடை காவல்துறை நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டார்.

இதன்போது, அவர் உடல்நலக் குறைவுக்கு உள்ளானதால், அவரை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்க காவல்துறை நடவடிக்கை எடுத்திருந்தாக தெரிவிக்கப்பட்டது.

எனினும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில், அவர் மரணித்திருந்ததாக, வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவித்திருந்தன.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் முன்னெடுத்து வருகின்றது.

உயிரிழந்த ராஜகுமாரி வீதியில் வீழ்ந்து கிடந்தவரா நீதிமன்றில் பொலிஸார் தெரிவித்தது என்ன samugammedia வெலிக்கடை காவல்துறை தடுப்பில் இருந்த போது, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்த பெண், வீதியில் விழுந்து கிடந்தவர் என்ற அடிப்படையிலேயே கொழும்பு தேசிய வைத்தியசாலையில் காவல்துறையால் அனுமதிக்கப்பட்டதாக நீதிமன்றத்தில் தெரியவந்துள்ளது.வெலிக்கடை காவல்துறை தடுப்பில் இருந்தபோது, உடநலக்குறைவுக்கு உள்ளான நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பதுளையைச் சேர்ந்த வீட்டுப் பணிப்பெண்ணான 42 வயதுடைய ராஜகுமாரி மரணித்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை நேற்று இடம்பெற்றது.கொழும்பு மேலதிக நீதவான் பண்டார இலங்கசிங்க முன்னிலையில் இந்த வழக்கு நேற்று (02) அழைக்கப்பட்டது.இதன்போது குற்றப் புலனாய்வு திணைக்களமும், உயிரிழந்த பெண்ணின் சார்பில் முன்னிலையான சட்டத்தரணியும் நீதிமன்றில் இந்த விடயத்தை தெரியப்படுத்தியுள்ளனர்.அவ்வாறாக வீதியில் வீழ்ந்து கிடந்த பெண் என வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தால், அதற்காக காவல்துறையின் ஒழுங்கு விதிகளின் அடிப்படையில் பின்பற்ற வேண்டிய பல நடைமுறைகள் உள்ளதாக உயிரிழந்த பெண்ணின் சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணி சுட்டிக்காட்டியுள்ளார்.குறித்த பெண் வீழ்ந்து கிடந்த இடத்தில் பதிவான சாட்சிகளை, அந்தப் பெண்ணை வைத்தியசாலையில் அனுமதித்த காவல்துறை அதிகாரி பதிவு செய்திருக்க வேண்டும் என்றும் சட்டத்தரணி குறிப்பிட்டுள்ளார்.எனவே, இந்தச் சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெளிவான விசாரணைகளை முன்னெடுக்கும் என தாம் எதிர்பார்ப்பதாகவும் சட்டத்தரணி மன்றில் தெரிவித்துள்ளார்.இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் உடனடியாக விசாரணை நடத்தி எதிர்வரும் 21ஆம் திகதி நீதிமன்றத்தில் அறிக்கையிடுமாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.வெலிக்கடை காவல்துறை தடுப்பில் இருந்த நிலையில், உயிரிழந்த 42 வயதான பெண் மரணித்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.பதுளை தெமோதரை பகுதியைச் சேர்ந்த குறித்த பெண், கொழும்பில் வசிக்கும் நடிகை ஒருவரின் வீட்டில் பணிப்பெண்ணாக சேவையாற்றிய நிலையில், தங்க நகை திருட்டு சம்பவம் ஒன்று தொடர்பாக கடந்த மாதம் 11ஆம் திகதி வெலிக்கடை காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.இதனையடுத்து அவர், வெலிக்கடை காவல்துறை நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டார்.இதன்போது, அவர் உடல்நலக் குறைவுக்கு உள்ளானதால், அவரை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்க காவல்துறை நடவடிக்கை எடுத்திருந்தாக தெரிவிக்கப்பட்டது.எனினும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில், அவர் மரணித்திருந்ததாக, வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவித்திருந்தன.இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் முன்னெடுத்து வருகின்றது.

Advertisement

Advertisement

Advertisement