• Nov 24 2024

வவுனிக்குளம் குளத்தின் நீர்மட்டம் இரண்டு வருடங்களின் பின்னர் அதிகரிப்பு..! பொங்கல் பொங்கி படைத்த விவசாயிகள்! samugammedia

Tamil nila / Dec 12th 2023, 6:58 pm
image

முல்லைத்தீவு மாவட்டத்தின் பாரிய நீர்ப்பாசன குளங்களில் ஒன்றான  வவுனிக்குளம் குளத்தின் நீர்மட்டம்  நேற்று (11) அதிகாலை அதன் உச்ச எல்லையான  26 அடியை கடந்துள்ள நிலையில்  குளத்தின் வான்  பாய்ந்து வருகின்றது.

இந்த நிலையில் கடந்த இரு வருடங்களாக குளம் நிறைந்து வான் பாயாமல் நீர்மட்டம் குறைவான  நிலையில் காணப்பட்தால் விவசாய செய்கையில் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தனர்.

  

முல்லைத்தீவு மாவட்டத்தில்  இவ்வருடம் கொட்டித்தீர்த்த மழை மற்றும் ஏனைய பகுதிகளில் இருந்து வவுனிக்குளத்திற்கு வரும் நீர் வரத்து என்பவற்றால் குளம் நிறைந்து வான் பாய்கின்றது.



வான் பாய ஆரம்பிதித்துள்ள  இந் நிலையில்  நீர் மகளை  வரவேற்கும் முகமாக கிராம அமைப்புக்கள் மற்றும் வவுனிக்குள நீர்பாசன திணைக்களத்தினர் நீருக்கு பொங்கல்  படையல் வைத்து தமிழர் பாரம்பரிய முறைப்படி வழிபட்டு நீர் பாய்வதை வரவேற்றனர்

இதேவேளை குறித்த நிகழ்வுக்கு மாகாண நீர்ப்பாசன பணிப்பாளர் என் .சுதாகரன் ,பிரதி நீர்ப்பாசன பணிப்பாளர் விகிர்தன் ,பிரதி நீர்ப்பாசன பணிப்பாளர் பணிமனை சிரேஸ்ட நீர்ப்பாசன பொறியியலாளர் சிவகரன் வவுனிக்குள நீர்ப்பாசன பொறியியலாளர்  பிரகாஸ் , வடமாகாண நீர்ப்பாசன திணைக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் பணிப்பாளர் பணிமனை உத்தியியோகத்தர்கள் ,  மாங்குளம் பிராந்திய அலுவலகக உத்தியோகத்தர்கள் ,வவுனிக்குள நீர்ப்பாசன திணைக்கள உத்தியோகத்தர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

வான் பாயும் காட்சியை காண்பதற்காக பல மக்கள் குறித்த பகுதிக்கு சென்று வருவதை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது. இவ்வாறு வான் பாய்கின்ற காட்சிகளை பார்வையிடுவதற்காக வருகை தந்து ஏற்படுகின்ற அநியாய உயிரிழப்புகளைக் கருத்தில் கொண்டு குறித்த பகுதிகளுக்கு மக்கள் அனாவசியமாக வருகை தருகின்ற நடவடிக்கைகளை தவிர்த்துக் கொள்ளுமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறித்த பகுதி வான் பாய்கின்ற நேரத்தில் மிக அழகாக காட்சி அளிக்கின்ற போதும் குறித்த குளத்தின் பகுதிகள் மற்றும் துருசு பகுதிகளில் வருகை தந்து நீர் ஆடுகின்ற மற்றும் புகைப்படங்கள் எடுக்கும் செயல்பாடுகளில் அநியாய உயிரிழப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் இவ்வாறான நடவடிக்கைகளை முற்றுமுழுதாக தடுத்து நிறுத்திக் கொள்ளுமாறு மக்களை சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


வவுனிக்குளம் குளத்தின் நீர்மட்டம் இரண்டு வருடங்களின் பின்னர் அதிகரிப்பு. பொங்கல் பொங்கி படைத்த விவசாயிகள் samugammedia முல்லைத்தீவு மாவட்டத்தின் பாரிய நீர்ப்பாசன குளங்களில் ஒன்றான  வவுனிக்குளம் குளத்தின் நீர்மட்டம்  நேற்று (11) அதிகாலை அதன் உச்ச எல்லையான  26 அடியை கடந்துள்ள நிலையில்  குளத்தின் வான்  பாய்ந்து வருகின்றது.இந்த நிலையில் கடந்த இரு வருடங்களாக குளம் நிறைந்து வான் பாயாமல் நீர்மட்டம் குறைவான  நிலையில் காணப்பட்தால் விவசாய செய்கையில் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தனர்.  முல்லைத்தீவு மாவட்டத்தில்  இவ்வருடம் கொட்டித்தீர்த்த மழை மற்றும் ஏனைய பகுதிகளில் இருந்து வவுனிக்குளத்திற்கு வரும் நீர் வரத்து என்பவற்றால் குளம் நிறைந்து வான் பாய்கின்றது.வான் பாய ஆரம்பிதித்துள்ள  இந் நிலையில்  நீர் மகளை  வரவேற்கும் முகமாக கிராம அமைப்புக்கள் மற்றும் வவுனிக்குள நீர்பாசன திணைக்களத்தினர் நீருக்கு பொங்கல்  படையல் வைத்து தமிழர் பாரம்பரிய முறைப்படி வழிபட்டு நீர் பாய்வதை வரவேற்றனர்இதேவேளை குறித்த நிகழ்வுக்கு மாகாண நீர்ப்பாசன பணிப்பாளர் என் .சுதாகரன் ,பிரதி நீர்ப்பாசன பணிப்பாளர் விகிர்தன் ,பிரதி நீர்ப்பாசன பணிப்பாளர் பணிமனை சிரேஸ்ட நீர்ப்பாசன பொறியியலாளர் சிவகரன் வவுனிக்குள நீர்ப்பாசன பொறியியலாளர்  பிரகாஸ் , வடமாகாண நீர்ப்பாசன திணைக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் பணிப்பாளர் பணிமனை உத்தியியோகத்தர்கள் ,  மாங்குளம் பிராந்திய அலுவலகக உத்தியோகத்தர்கள் ,வவுனிக்குள நீர்ப்பாசன திணைக்கள உத்தியோகத்தர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.வான் பாயும் காட்சியை காண்பதற்காக பல மக்கள் குறித்த பகுதிக்கு சென்று வருவதை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது. இவ்வாறு வான் பாய்கின்ற காட்சிகளை பார்வையிடுவதற்காக வருகை தந்து ஏற்படுகின்ற அநியாய உயிரிழப்புகளைக் கருத்தில் கொண்டு குறித்த பகுதிகளுக்கு மக்கள் அனாவசியமாக வருகை தருகின்ற நடவடிக்கைகளை தவிர்த்துக் கொள்ளுமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.குறித்த பகுதி வான் பாய்கின்ற நேரத்தில் மிக அழகாக காட்சி அளிக்கின்ற போதும் குறித்த குளத்தின் பகுதிகள் மற்றும் துருசு பகுதிகளில் வருகை தந்து நீர் ஆடுகின்ற மற்றும் புகைப்படங்கள் எடுக்கும் செயல்பாடுகளில் அநியாய உயிரிழப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் இவ்வாறான நடவடிக்கைகளை முற்றுமுழுதாக தடுத்து நிறுத்திக் கொள்ளுமாறு மக்களை சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement