• Mar 26 2025

நாட்டின் சில பகுதிகளில் நீண்ட நேரம் துண்டிக்கப்படவுள்ள நீர் விநியோகம்

Chithra / Mar 25th 2025, 11:41 am
image


 

கம்பஹாவின் சில பகுதிகளில் நீர் விநியோகம் துண்டிக்கப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது. 

பியகம நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் உள்ள மின்சார வாரியத்திற்கு சொந்தமான அமைப்பில் அவசியமான பராமரிப்பு பணிகள் காரணமாக இந்த நீர் வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

அதன்படி எதிர்வரும் 27ஆம் திகதி காலை 8:30 மணி முதல் மாலை 5 மணி வரை இவ்வாறு நீர் துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.

அதன்படி, பேலியகொட, வத்தளை, ஜா-எல, கட்டுநாயக்க, சீதுவை நகர சபை பகுதிகள், களனி, பியகம, மஹர, தோம்பே, கடான, மினுவாங்கொட மற்றும் கம்பஹா பிரதேச சபை பகுதிகளுக்கு நீர் வழங்கல் நிறுத்தப்பட வேண்டியிருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

நாட்டின் சில பகுதிகளில் நீண்ட நேரம் துண்டிக்கப்படவுள்ள நீர் விநியோகம்  கம்பஹாவின் சில பகுதிகளில் நீர் விநியோகம் துண்டிக்கப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது. பியகம நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் உள்ள மின்சார வாரியத்திற்கு சொந்தமான அமைப்பில் அவசியமான பராமரிப்பு பணிகள் காரணமாக இந்த நீர் வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.அதன்படி எதிர்வரும் 27ஆம் திகதி காலை 8:30 மணி முதல் மாலை 5 மணி வரை இவ்வாறு நீர் துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.அதன்படி, பேலியகொட, வத்தளை, ஜா-எல, கட்டுநாயக்க, சீதுவை நகர சபை பகுதிகள், களனி, பியகம, மஹர, தோம்பே, கடான, மினுவாங்கொட மற்றும் கம்பஹா பிரதேச சபை பகுதிகளுக்கு நீர் வழங்கல் நிறுத்தப்பட வேண்டியிருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement