• Dec 13 2024

எமது எதிர்கால சந்ததியினருக்கு கல்வியைக் கற்பதில் அச்சநிலையேற்பட்டுள்ளது..! வேலையற்ற பட்டதாரிகள் ஆதங்கம்

Chithra / Jul 10th 2024, 4:04 pm
image

 

நாங்கள் போராடுவதை பார்த்தும் எங்களது நிலையினைக் கண்டும் எமது எதிர்கால சந்ததியினருக்கு கல்வியைக் கற்பதில் அச்சநிலையேற்பட்டு வருவதாக மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் தெரிவிக்கின்றனர்.

தமது தொழில் உரிமையினை வலியுறுத்தி மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் முன்னெடுக்கும் போராட்டம் 09வது நாளாகவும் இன்றும் நடைபெற்றது.

மட்டக்களப்பு காந்திபூங்காவில் ஒன்றுகூடிய பட்டதாரிகள் காந்திபூங்கா முன்பாகவுள்ள படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் நினைவுத்தூபிக்கு முன்பாக இந்த போராட்டத்தினை முன்னெடுத்தனர்.

அழிக்காதே அழிக்காதே எதிர்காலத்தினை அழிக்காதே, பட்டதாரிகள் வீதிகளில் நின்றால் நாடு முன்னேறுவது எவ்வாறு?, பட்டதாரிகள் எப்போதும் வீதிக்கு வருவது ஏன்? போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது தமது தொழில் உரிமையினை வலியுறுத்தும் வகையிலான கோசங்கள் எழுப்பப்பட்டதுடன் தமது போராட்டம் தொடர்பிலான பல்வேறு கருத்துகளும் முன்வைக்கப்பட்டன.

எமது போராட்டம் தொடர்பில் இதுவரையில்  எந்த அதிகாரிகளும் கவனத்தில் கொள்ளவில்லை.

நாங்கள் மிகவும் கஸ்டங்களுக்கு மத்தியில் எமது பட்டக்கல்வியை பூர்த்திசெய்தது வீதிகளில் போராடுவதற்காகவா என பட்டதாரிகள் இதன்போது கேள்வியெழுப்பினார்கள்.


எமது எதிர்கால சந்ததியினருக்கு கல்வியைக் கற்பதில் அச்சநிலையேற்பட்டுள்ளது. வேலையற்ற பட்டதாரிகள் ஆதங்கம்  நாங்கள் போராடுவதை பார்த்தும் எங்களது நிலையினைக் கண்டும் எமது எதிர்கால சந்ததியினருக்கு கல்வியைக் கற்பதில் அச்சநிலையேற்பட்டு வருவதாக மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் தெரிவிக்கின்றனர்.தமது தொழில் உரிமையினை வலியுறுத்தி மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் முன்னெடுக்கும் போராட்டம் 09வது நாளாகவும் இன்றும் நடைபெற்றது.மட்டக்களப்பு காந்திபூங்காவில் ஒன்றுகூடிய பட்டதாரிகள் காந்திபூங்கா முன்பாகவுள்ள படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் நினைவுத்தூபிக்கு முன்பாக இந்த போராட்டத்தினை முன்னெடுத்தனர்.அழிக்காதே அழிக்காதே எதிர்காலத்தினை அழிக்காதே, பட்டதாரிகள் வீதிகளில் நின்றால் நாடு முன்னேறுவது எவ்வாறு, பட்டதாரிகள் எப்போதும் வீதிக்கு வருவது ஏன் போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.இதன்போது தமது தொழில் உரிமையினை வலியுறுத்தும் வகையிலான கோசங்கள் எழுப்பப்பட்டதுடன் தமது போராட்டம் தொடர்பிலான பல்வேறு கருத்துகளும் முன்வைக்கப்பட்டன.எமது போராட்டம் தொடர்பில் இதுவரையில்  எந்த அதிகாரிகளும் கவனத்தில் கொள்ளவில்லை.நாங்கள் மிகவும் கஸ்டங்களுக்கு மத்தியில் எமது பட்டக்கல்வியை பூர்த்திசெய்தது வீதிகளில் போராடுவதற்காகவா என பட்டதாரிகள் இதன்போது கேள்வியெழுப்பினார்கள்.

Advertisement

Advertisement

Advertisement