• Jan 21 2025

நாமலுக்கு எந்தத் தகுதியும் இல்லை; இனி ராஜபக்ஷக்கள் மீண்டெழவே முடியாது! - அடித்துக் கூறுகிறது அநுர அணி

Chithra / Jan 20th 2025, 7:08 am
image


ராஜபக்ஷக்கள் இனிமேல் மீண்டெழ முடியாது என்று விவசாயம் மற்றும் கால்நடை பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

ராஜபக்ஷக்கள் அரசியலில் இருந்து தோற்கடிக்கப்பட்டு விட்டார்கள். அவர்களின் மொட்டுக் கட்சியை மக்கள் அடியோடு சிதைத்துவிட்டார்கள். 

அவர்களின் குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. அவர்கள் இனிமேல் மீண்டெழ முடியாது.

ஜனாதிபதி, பிரதமர் பதவிகளுக்கு ஆசைப்பட்ட நாமல் ராஜபக்ஷ இறுதியில் தேசியப்பட்டியல் ஊடாகவே நாடாளுமன்றம் வந்தார். அவர் இன்று வெட்கம் இல்லாமல் வீரவசனம் பேசுகின்றார்.

சீனாவுக்குச் சென்று வந்த ஜனாதிபதி அநுரகுமாரவை விமர்சிப்பதற்கு நாமல் ராஜபக்ஷவுக்கு எந்தத் தகுதியும் கிடையாது.

தனது தந்தை மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து கொலைகளை, ஊழல், மோசடிகளைச் செய்த நாமல் ராஜபக்ஷ இன்று நல்ல மனிதர் போல் வேடம் போட முயல்கின்றார். என்ன வேடம் போட்டாலும் ராஜபக்ஷ குடும்பத்தினரால் இனிமேல் மீண்டெழ முடியாது." - என்றார்.

நாமலுக்கு எந்தத் தகுதியும் இல்லை; இனி ராஜபக்ஷக்கள் மீண்டெழவே முடியாது - அடித்துக் கூறுகிறது அநுர அணி ராஜபக்ஷக்கள் இனிமேல் மீண்டெழ முடியாது என்று விவசாயம் மற்றும் கால்நடை பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,ராஜபக்ஷக்கள் அரசியலில் இருந்து தோற்கடிக்கப்பட்டு விட்டார்கள். அவர்களின் மொட்டுக் கட்சியை மக்கள் அடியோடு சிதைத்துவிட்டார்கள். அவர்களின் குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. அவர்கள் இனிமேல் மீண்டெழ முடியாது.ஜனாதிபதி, பிரதமர் பதவிகளுக்கு ஆசைப்பட்ட நாமல் ராஜபக்ஷ இறுதியில் தேசியப்பட்டியல் ஊடாகவே நாடாளுமன்றம் வந்தார். அவர் இன்று வெட்கம் இல்லாமல் வீரவசனம் பேசுகின்றார்.சீனாவுக்குச் சென்று வந்த ஜனாதிபதி அநுரகுமாரவை விமர்சிப்பதற்கு நாமல் ராஜபக்ஷவுக்கு எந்தத் தகுதியும் கிடையாது.தனது தந்தை மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து கொலைகளை, ஊழல், மோசடிகளைச் செய்த நாமல் ராஜபக்ஷ இன்று நல்ல மனிதர் போல் வேடம் போட முயல்கின்றார். என்ன வேடம் போட்டாலும் ராஜபக்ஷ குடும்பத்தினரால் இனிமேல் மீண்டெழ முடியாது." - என்றார்.

Advertisement

Advertisement

Advertisement