• Feb 04 2025

நாட்டின் டொலர் கையிருப்பை அதிகரிக்கும் அணி எம்மிடம்! சவால் விடும் சஜித்

Chithra / Oct 8th 2024, 1:12 pm
image

 

நாட்டின் டொலர் கையிருப்பை அதிகரிக்கக்கூடிய வல்லமை கொண்ட அணி தம்மிடம் உள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின்  தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

கெஸ்பெவ பகுதியில் நேற்று (07) இடம்பெற்ற கட்சியின் ஆதரவாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலினூடாக தமக்கு அதிகாரத்தை வழங்குவது மிகவும் பொருத்தமானதாகும்

நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்லும் நிபுணத்துவம் வாய்ந்த தரப்பினர் எமது அணியில் உள்ளனர்.

2028ஆம் ஆண்டிலிருந்து இலங்கை கடன் செலுத்த வேண்டியுள்ளது. இதற்கு நீண்ட கால எல்லையில்லை இன்னும் 4 ஆண்டுகள் மாத்திரமே உள்ளன.

சர்வதேச நாணய நிதியம் வழங்கியுள்ள இந்த சிறிய இடைவெளியில், போதுமான அளவு அந்நிய செலாவணி கையிருப்பு இருக்க வேண்டும். அதற்குச் சிறந்த பொருளாதார கொள்கையிருக்க வேண்டும்.

எனவே ஐக்கிய மக்கள் சக்தியே அதனைச் சிறந்த வகையில் நிர்வகிக்கும் என சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

நாட்டின் டொலர் கையிருப்பை அதிகரிக்கும் அணி எம்மிடம் சவால் விடும் சஜித்  நாட்டின் டொலர் கையிருப்பை அதிகரிக்கக்கூடிய வல்லமை கொண்ட அணி தம்மிடம் உள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின்  தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.கெஸ்பெவ பகுதியில் நேற்று (07) இடம்பெற்ற கட்சியின் ஆதரவாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.நாடாளுமன்றத் தேர்தலினூடாக தமக்கு அதிகாரத்தை வழங்குவது மிகவும் பொருத்தமானதாகும்நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்லும் நிபுணத்துவம் வாய்ந்த தரப்பினர் எமது அணியில் உள்ளனர்.2028ஆம் ஆண்டிலிருந்து இலங்கை கடன் செலுத்த வேண்டியுள்ளது. இதற்கு நீண்ட கால எல்லையில்லை இன்னும் 4 ஆண்டுகள் மாத்திரமே உள்ளன.சர்வதேச நாணய நிதியம் வழங்கியுள்ள இந்த சிறிய இடைவெளியில், போதுமான அளவு அந்நிய செலாவணி கையிருப்பு இருக்க வேண்டும். அதற்குச் சிறந்த பொருளாதார கொள்கையிருக்க வேண்டும்.எனவே ஐக்கிய மக்கள் சக்தியே அதனைச் சிறந்த வகையில் நிர்வகிக்கும் என சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement