• Nov 14 2024

பாய்வதற்காகவே பதுங்கி வருகின்றோம்; பாய வேண்டிய நேரத்தில் மக்களுக்காக நிச்சயம் பாய்வோம்! - இராதா எம்.பி

Chithra / Jul 28th 2024, 3:46 pm
image

 

“மலையக மக்களின் உரிமைசார் விடயங்களில் தமிழ் முற்போக்கு கூட்டணி ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது. பாய்வதற்காகவே நாம் பதுங்கி வருகின்றோம். பாய வேண்டிய நேரத்தில் மக்களுக்காக நிச்சயம் பாய்வோம்.”  - என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வீ. இராதாகிருஸ்ணன் தெரிவித்தார்.

மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு மற்றும் மலையக மக்களுக்கான காணி உரிமை உள்ளிட்ட விடயங்களை வலியுறுத்தி ஹட்டனில் இன்று நடைபெற்ற போராட்டத்தில் போராட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

கூட்டத்தில் உரையாற்றிய இராதாகிருஸ்ணன் மேலும் கூறியைவை வருமாறு,

கோட்டாபய ராஜபக்சவை நீதிமன்றம் விரட்டவில்லை, மக்கள் சக்தியே விரட்டியடித்தது. எனவே, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நீதிமன்ற தீர்ப்பின் பிரகாரம் செயற்படாவிட்டால் மக்கள் அவருக்கு பதிலை வழங்குவார்கள். ஜனாதிபதி யாரென்பதை மக்களே தீர்மானிப்பார்கள்.

மக்கள் சக்தி முதன்மையானது. பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்படும் எனக்கூறி ஜனாதிபதி ஏமாற்றியுள்ளார். ஆளுங்கட்சி பக்கம் உள்ளவர்களும் ஏமாற்றியுள்ளனர்.

இதனை ஏற்கமுடியாது.எமது ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியில் இப்பிரச்சினைக்கு நிச்சயம் தீர்வு காணப்படும். எமது மக்களுக்கு காணி உரிமை வழங்கப்படும். தமிழ் முற்போக்கு கூட்டணி பாய்வதற்காகவே பதுங்குகின்றது. பாய வேண்டிய நேரத்தில் நிச்சயம் நாம் பாய்வோம் - என்றார்.


பாய்வதற்காகவே பதுங்கி வருகின்றோம்; பாய வேண்டிய நேரத்தில் மக்களுக்காக நிச்சயம் பாய்வோம் - இராதா எம்.பி  “மலையக மக்களின் உரிமைசார் விடயங்களில் தமிழ் முற்போக்கு கூட்டணி ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது. பாய்வதற்காகவே நாம் பதுங்கி வருகின்றோம். பாய வேண்டிய நேரத்தில் மக்களுக்காக நிச்சயம் பாய்வோம்.”  - என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வீ. இராதாகிருஸ்ணன் தெரிவித்தார்.மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு மற்றும் மலையக மக்களுக்கான காணி உரிமை உள்ளிட்ட விடயங்களை வலியுறுத்தி ஹட்டனில் இன்று நடைபெற்ற போராட்டத்தில் போராட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.கூட்டத்தில் உரையாற்றிய இராதாகிருஸ்ணன் மேலும் கூறியைவை வருமாறு,கோட்டாபய ராஜபக்சவை நீதிமன்றம் விரட்டவில்லை, மக்கள் சக்தியே விரட்டியடித்தது. எனவே, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நீதிமன்ற தீர்ப்பின் பிரகாரம் செயற்படாவிட்டால் மக்கள் அவருக்கு பதிலை வழங்குவார்கள். ஜனாதிபதி யாரென்பதை மக்களே தீர்மானிப்பார்கள்.மக்கள் சக்தி முதன்மையானது. பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்படும் எனக்கூறி ஜனாதிபதி ஏமாற்றியுள்ளார். ஆளுங்கட்சி பக்கம் உள்ளவர்களும் ஏமாற்றியுள்ளனர்.இதனை ஏற்கமுடியாது.எமது ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியில் இப்பிரச்சினைக்கு நிச்சயம் தீர்வு காணப்படும். எமது மக்களுக்கு காணி உரிமை வழங்கப்படும். தமிழ் முற்போக்கு கூட்டணி பாய்வதற்காகவே பதுங்குகின்றது. பாய வேண்டிய நேரத்தில் நிச்சயம் நாம் பாய்வோம் - என்றார்.

Advertisement

Advertisement

Advertisement