• Jan 26 2025

அரிசி தட்டுப்பாட்டுக்கான காரணத்தை கேட்டு ஆச்சரியமடைந்தோம்! - சபையில் ஹர்ஷ வெளிப்படுத்திய தகவல்

Chithra / Jan 24th 2025, 9:35 am
image

 

2024 ஆம் ஆண்டு ஒருமெற்றிக்தொன் நெல் இல்லாமல் போயுள்ளது. அதனால் தான்  தற்போது அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என விவசாயத்துறை அமைச்சு மற்றும் விவசாயத்துறை திணைக்களம் குறிப்பிட்டதை கேட்டு ஆச்சரியமடைந்தோம் என  அரச நிதி தொடர்பான குழுவின் தலைவர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில்  நடைபெற்ற அமர்வின் போது அரசாங்க நிதி தொடர்பான குழுவின் அறிக்கையை சபைக்கு சமர்ப்பித்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

சந்தையில் நிலவும் அரிசித் தட்டுப்பாட்டுக்குத் தீர்வாக அரிசி இறக்குமதிக்கு கடந்த மாதம் அனுமதி வழங்கப்பட்டு, இம்மாதம் 10 ஆம் திகதி வரை அரிசி இறக்குமதிக்கு காலவகாசம் வழங்கப்பட்டது.  

நெல் மற்றும் அரிசி உற்பத்தி தொடர்பில் சரியான தரவுகளில் சிக்கல்கள் காணப்படுவதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தனியார் ஊடகத்துக்கு வழங்கிய நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்க நிதி தொடர்பான குழுவுக்கு  விவசாயத்துறை அமைச்சு மற்றும் விவசாயத்துறை திணைக்களத்தின் அதிகாரிகளை அண்மையில் அழைத்திருந்தோம். அவர்கள் குறிப்பிட்ட விடயங்களை கேட்டு ஆச்சரியடைந்தோம்.

2024 ஆம் ஆண்டு பெரும்போக விவசாயத்தில் 4.39 மில்லியன் மெற்றிக் தொன் அரிசி உற்பத்தி செய்யப்பட்டதாக விவசாயத்துறை அமைச்சின் அதிகாரிகள் குறிப்பிட்டார்கள். அக்காலப்பகுதியில் 2.9 மில்லியன் மெற்றிக்தொன் அரிசி உற்பத்தி செய்யப்பட்டதாக நாங்கள் குறிப்பிட்டோம்.

2000 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் உற்பத்தி செய்யப்பட்ட நெல் மற்றும் அரிசியின் மொத்த தொகை தொடர்பில்  தரவுகளை கோரியுள்ளேன். 

அதிகாரிகள் பொய்யான தரவுகளை குறிப்பிடுகிறார்களா அல்லது வர்த்தகர்கள் பொய் குறிப்பிடுகிறார்களா என்பதை அறிந்துக் கொள்ள முடியும். 

தரவுகள் பொய்யாயின் தீர்மானங்களும் தவறானதாக அமையும். ஆகவே இவ்விடயம் குறித்து ஆராயுமாறு  விவசாயத்துறை அமைச்சுக்கு பரிந்துரைக்கிறோம்.

2024 ஆம் ஆண்டு 1 மெற்றிக்தொன் நெல் இல்லாமல் போயுள்ளது.அதனால் தான்  தற்போது அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என விவசாயத்துறை அமைச்சு மற்றும் விவசாயத்துறை திணைக்களம் குறிப்பிட்டதை கேட்டு ஆச்சரியமடைந்தோம். ஆகவே இவ்விடயம் தொடர்பிலும்  விசேட கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

அரிசி தட்டுப்பாட்டுக்கான காரணத்தை கேட்டு ஆச்சரியமடைந்தோம் - சபையில் ஹர்ஷ வெளிப்படுத்திய தகவல்  2024 ஆம் ஆண்டு ஒருமெற்றிக்தொன் நெல் இல்லாமல் போயுள்ளது. அதனால் தான்  தற்போது அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என விவசாயத்துறை அமைச்சு மற்றும் விவசாயத்துறை திணைக்களம் குறிப்பிட்டதை கேட்டு ஆச்சரியமடைந்தோம் என  அரச நிதி தொடர்பான குழுவின் தலைவர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.பாராளுமன்றத்தில்  நடைபெற்ற அமர்வின் போது அரசாங்க நிதி தொடர்பான குழுவின் அறிக்கையை சபைக்கு சமர்ப்பித்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.சந்தையில் நிலவும் அரிசித் தட்டுப்பாட்டுக்குத் தீர்வாக அரிசி இறக்குமதிக்கு கடந்த மாதம் அனுமதி வழங்கப்பட்டு, இம்மாதம் 10 ஆம் திகதி வரை அரிசி இறக்குமதிக்கு காலவகாசம் வழங்கப்பட்டது.  நெல் மற்றும் அரிசி உற்பத்தி தொடர்பில் சரியான தரவுகளில் சிக்கல்கள் காணப்படுவதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தனியார் ஊடகத்துக்கு வழங்கிய நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார்.அரசாங்க நிதி தொடர்பான குழுவுக்கு  விவசாயத்துறை அமைச்சு மற்றும் விவசாயத்துறை திணைக்களத்தின் அதிகாரிகளை அண்மையில் அழைத்திருந்தோம். அவர்கள் குறிப்பிட்ட விடயங்களை கேட்டு ஆச்சரியடைந்தோம்.2024 ஆம் ஆண்டு பெரும்போக விவசாயத்தில் 4.39 மில்லியன் மெற்றிக் தொன் அரிசி உற்பத்தி செய்யப்பட்டதாக விவசாயத்துறை அமைச்சின் அதிகாரிகள் குறிப்பிட்டார்கள். அக்காலப்பகுதியில் 2.9 மில்லியன் மெற்றிக்தொன் அரிசி உற்பத்தி செய்யப்பட்டதாக நாங்கள் குறிப்பிட்டோம்.2000 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் உற்பத்தி செய்யப்பட்ட நெல் மற்றும் அரிசியின் மொத்த தொகை தொடர்பில்  தரவுகளை கோரியுள்ளேன். அதிகாரிகள் பொய்யான தரவுகளை குறிப்பிடுகிறார்களா அல்லது வர்த்தகர்கள் பொய் குறிப்பிடுகிறார்களா என்பதை அறிந்துக் கொள்ள முடியும். தரவுகள் பொய்யாயின் தீர்மானங்களும் தவறானதாக அமையும். ஆகவே இவ்விடயம் குறித்து ஆராயுமாறு  விவசாயத்துறை அமைச்சுக்கு பரிந்துரைக்கிறோம்.2024 ஆம் ஆண்டு 1 மெற்றிக்தொன் நெல் இல்லாமல் போயுள்ளது.அதனால் தான்  தற்போது அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என விவசாயத்துறை அமைச்சு மற்றும் விவசாயத்துறை திணைக்களம் குறிப்பிட்டதை கேட்டு ஆச்சரியமடைந்தோம். ஆகவே இவ்விடயம் தொடர்பிலும்  விசேட கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

Advertisement

Advertisement

Advertisement