• Nov 26 2024

கைவிடப்பட்ட மொழிகள் தொகுதிக்குள் சிங்கள மொழியையும் தள்ளிவிடும் முயற்சியை தவிர்ப்போம்- தினேஷ் குணவர்தன..!!

Tamil nila / Feb 22nd 2024, 6:59 pm
image

பொது நிர்வாக அமைச்சின் தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம், அரச கரும மொழிகள் ஆணைக்குழு, அரச கரும மொழிகள் திணைக்களம் மற்றும் ருஹுனு பல்கலைக்கழக சிங்கள கற்கைகள் பிரிவு இணைந்து ஏற்பாடு செய்த சர்வதேச தாய்மொழி தின நிகழ்வு பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் கொழும்பு இலங்கை மன்றத்தில் நேற்று (21) இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர்-

கடந்த காலங்களில் சிங்கள மொழியை கற்பிப்பதற்கும் பௌத்தத்தை கற்பிப்பதற்கும் பெரிய கட்டிடங்கள் எங்களிடம் இருக்கவில்லை. இன்று பாடசாலை பற்றி பேசும் போது, அடிக்கடி கட்டிடங்களைத் தான் கேட்கிறார்கள். ஆனால் டி.பி. ஜயதிலக போன்ற தலைவர்கள் நாடு முழுவதும் கிராமம் கிராமமாக தென்னை ஓலைகளிலான சிறிய மண்டபங்களில் சிங்கள மொழியையும் கல்வியையும் வளர்த்தனர். அன்றும் மழை வெய்யில் போன்ற நிலைமைகள் இருக்கவே செய்தன. 

எமது பிள்ளைகளுக்கு பல சவால்கள் இருந்தன. அப்போது ஆங்கிலேய அரசிடம் இருந்து எங்களுக்கு உதவி கிடைக்கவில்லை. ஆனால் எங்கள் கிராமியத் தலைவர்கள் நிலத்தை நன்கொடையாக கொடுத்தனர். பாடசாலைகள் நிறுவப்பட்டன. சிங்கள மொழியை வளப்படுத்தினர்.

ஒரு தேசத்தின் இருப்பு புள்ளி விவரங்களால் மட்டும் நிலைத்து நிற்காது. சுருங்கச் சொன்னால், எமது மொழியையும், தாய்மொழிகளையும் அவ்வாறே வளர்த்து பாதுகாத்து, தொடர் ஆராய்ச்சியில் ஈடுபட்டு ஆபத்தான அச்சுறுத்தல்களிலிருந்து விடுபட வேண்டும்.

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கிராம மக்களின் முறைப்பாடுகளை பொலிஸார் ஆங்கிலத்திலேயே எழுதினர். முறைப்பாடுகள் அவர்களின் சொந்த மொழியில் எழுதப்படவில்லை.

சிங்களவர்களும் தமிழர்களும் அந்தந்த மொழிகளில் முறைப்பாடு செய்தனர். அப்போது மலாயர்களும் இருந்தனர். முறைப்பாடுகள் ஆங்கிலத்திலேயே எழுதப்பட்டன. அது எப்படி இருந்திருக்கும் என்பதை நீங்கள் கற்பனை செய்யலாம். நீதியைப் பற்றிப் பேசும் பல சமூகங்களில் எமக்கு உரிய நீதியை வழங்காமல் நாட்டை ஆட்சி செய்தார்கள்.

இரண்டு வாரங்களுக்கு ஒரு மொழி அழிவடைகிறது என்ற முடிவுக்கு ஐக்கிய நாடுகள் சபை இப்போது வந்துள்ளது. எனவே, தாய்மொழிகளைப் பாதுகாக்க ஐக்கிய நாடுகள் சபை  விசேட தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கான முன்மொழிவு  கொண்டுவரப்பட்டது. ரவீந்திரநாத் தாகூர் வங்காள மொழி மூலம் இந்தியா முழுவதையும் எழுச்சிபெறச் செய்தார். இசையுடன் முன்வைக்கப்பட்டது. 

சட்டங்கள் இலக்கியங்களின் ஊடாக வலுப்படுத்தப்பட்டது. சில காலம் கழித்து பங்களாதேஷ் என்று ஒரு நாடு பிறந்தது.

எமது தாய்மொழி கைவிடப்படும் மொழிக் குவியலுக்குத் தள்ளப்படும் முயற்சியில் இருந்து எமது தாய்மொழியைப் பாதுகாப்பது அரசாங்கத்தால் மட்டும் செய்ய முடியாத ஒன்று. ஆனால், தமது நாட்டு மக்களின் அடையாளத்தைப் பாதுகாக்க வேண்டிய கட்டாயப் பொறுப்பும் கடமையும் அரசுக்கு உண்டு. அடையாளத்தைக் காக்க தாய்மொழி காக்கப்பட வேண்டும். தாய்மொழியைச் சுற்றி எழுந்துள்ள பல்வேறு வகையான துறைகள் பாதுகாக்கப்பட வேண்டும்.

தாய்மொழி தாய் பாலுக்கு நிகரானது என்று  நாம் கேள்விப்பட்டுள்ளோம். மொழி என்பது வாழ்க்கைக்கு மதிப்பு சேர்க்கும் ஒரு காரணி என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. அதை ஒரு தன்னார்வ செயல்முறையாக மாற்றுவதற்காக  பல்வேறு விதிகளை உருவாக்குகிறோம். அவற்றை  நடைமுறைப்படுத்தும் விருப்பத்திற்கான தேசிய எழுச்சியும், செயல்முறையும் தேவை. இந்த விடயத்தில்பல்கலைக்கழகத் துறை, உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி மையங்களாக இன்னும் ஆர்வத்துடன் தலையிட்டால் அது பாராட்டப்பட வேண்டியதாகும்.

இன்று பொதுநிர்வாக அமைச்சில் பல விடயங்கள் குறித்து கலந்துரையாட சம்பந்தப்பட்ட திணைக்கள அதிகாரிகள் அழைக்கப்பட்டனர்.  அரச கரும மொழித் திணைக்கள அதிகாரிகளையும், தொலைதூர கிராமியத் திணைக்களத் தலைவர்களையும் தொடர்பு கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். 

இவ்வாறான நடவடிக்கைகளை நாம் ஒன்றன் பின் ஒன்றாக எடுக்கவில்லையென்றால், நம் தாய்மொழி மக்களிடம் இருந்து தனிமைப்படுத்தப்பட்டு, தொலைந்து போக வாய்ப்புள்ளது. அந்த நிலைமையை மாற்றுவோம். இதற்காக நீண்ட காலமாக தங்களை அர்ப்பணித்த அனைவருக்கும் எனது பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

உயர்நீதிமன்றத்திலிருந்து நாடாளுமன்றத்திற்கு வரும் தீர்ப்புகளை சபாநாயகர் இன்னும் ஆங்கிலத்திலேயே வாசிக்கிறார். உயர் நீதிமன்ற தீர்ப்பு சிங்கள மொழியில் வெளியிடப்படவில்லை என்றே நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவிக்கின்றர். தமிழ் மொழியில் வெளியிடப்படவில்லை என மற்றும் சில உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர். நாம் அடைய வேண்டிய வெற்றிகள் இன்னும் எவ்வளவு உள்ளன? இன்னும் செல்ல வேண்டிய தூரம் அதிகம். அதை அடைவதற்கான பணியில் இன்னும் அதிகமாக எம்மை அர்ப்பணிக்க வேண்டும் என்பதை இந்த நேரத்தில் குறிப்பிட விரும்புகிறேன். 

மேலும், மொழிபெயர்ப்பு ஆய்வகங்களை உருவாக்குவதும், பல்கலைக்கழகங்கள் மற்றும் தொடர்புடைய துறைகளிலிருந்து மொழிபெயர்ப்பிற்கான ஒரு தலைமுறையை உருவாக்குவதும் முக்கிய தேவையாக உள்ளது. இன்று மொழிபெயர்ப்பாளர்கள் இல்லை. மொழிபெயர்ப்பாளர்கள் இல்லாததால், ஓய்வு பெற்றவர்களுக்கு சேவை நீடிப்பு வழங்க வேண்டியுள்ளது. பொது நிர்வாக சுற்றறிக்கையின்படி, ஓய்வுக்குப் பின்னர் சேவை நீடிப்பு வழங்குவது மிகவும் கடினமான பணி.

தாய்மொழியைப் பாதுகாப்பது தொடர்பான ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் தீர்மானத்தின் மூலமும் எமது நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தின் மூலமும் அதைப் பாதுகாக்க முடியும். அதிலும், எமது சொந்த தாய்மொழியைப் பாதுகாப்பதற்கான செயன்முறையை ஒரு பெரிய பலமாகவும் தைரியமாகவும் மாற்றுவதற்கு இந்த செயன்முறை மிகப்பெரிய பலமாக இருக்கும்.

இந்நிகழ்வில் ருஹுனு பல்கலைக்கழகத்தின் வேந்தர் கலாநிதி அக்குரட்டியே நந்த தேரர், பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் தாரிக் ஆரிபுல் இஸ்லாம், பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்ன, தூதரக அதிகாரிகள், பல்கலைக்கழக பீடாதிபதிகள், பேராசிரியர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், பல்வேறு அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் இனங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

கைவிடப்பட்ட மொழிகள் தொகுதிக்குள் சிங்கள மொழியையும் தள்ளிவிடும் முயற்சியை தவிர்ப்போம்- தினேஷ் குணவர்தன. பொது நிர்வாக அமைச்சின் தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம், அரச கரும மொழிகள் ஆணைக்குழு, அரச கரும மொழிகள் திணைக்களம் மற்றும் ருஹுனு பல்கலைக்கழக சிங்கள கற்கைகள் பிரிவு இணைந்து ஏற்பாடு செய்த சர்வதேச தாய்மொழி தின நிகழ்வு பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் கொழும்பு இலங்கை மன்றத்தில் நேற்று (21) இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டார்.இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர்-கடந்த காலங்களில் சிங்கள மொழியை கற்பிப்பதற்கும் பௌத்தத்தை கற்பிப்பதற்கும் பெரிய கட்டிடங்கள் எங்களிடம் இருக்கவில்லை. இன்று பாடசாலை பற்றி பேசும் போது, அடிக்கடி கட்டிடங்களைத் தான் கேட்கிறார்கள். ஆனால் டி.பி. ஜயதிலக போன்ற தலைவர்கள் நாடு முழுவதும் கிராமம் கிராமமாக தென்னை ஓலைகளிலான சிறிய மண்டபங்களில் சிங்கள மொழியையும் கல்வியையும் வளர்த்தனர். அன்றும் மழை வெய்யில் போன்ற நிலைமைகள் இருக்கவே செய்தன. எமது பிள்ளைகளுக்கு பல சவால்கள் இருந்தன. அப்போது ஆங்கிலேய அரசிடம் இருந்து எங்களுக்கு உதவி கிடைக்கவில்லை. ஆனால் எங்கள் கிராமியத் தலைவர்கள் நிலத்தை நன்கொடையாக கொடுத்தனர். பாடசாலைகள் நிறுவப்பட்டன. சிங்கள மொழியை வளப்படுத்தினர்.ஒரு தேசத்தின் இருப்பு புள்ளி விவரங்களால் மட்டும் நிலைத்து நிற்காது. சுருங்கச் சொன்னால், எமது மொழியையும், தாய்மொழிகளையும் அவ்வாறே வளர்த்து பாதுகாத்து, தொடர் ஆராய்ச்சியில் ஈடுபட்டு ஆபத்தான அச்சுறுத்தல்களிலிருந்து விடுபட வேண்டும்.ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கிராம மக்களின் முறைப்பாடுகளை பொலிஸார் ஆங்கிலத்திலேயே எழுதினர். முறைப்பாடுகள் அவர்களின் சொந்த மொழியில் எழுதப்படவில்லை.சிங்களவர்களும் தமிழர்களும் அந்தந்த மொழிகளில் முறைப்பாடு செய்தனர். அப்போது மலாயர்களும் இருந்தனர். முறைப்பாடுகள் ஆங்கிலத்திலேயே எழுதப்பட்டன. அது எப்படி இருந்திருக்கும் என்பதை நீங்கள் கற்பனை செய்யலாம். நீதியைப் பற்றிப் பேசும் பல சமூகங்களில் எமக்கு உரிய நீதியை வழங்காமல் நாட்டை ஆட்சி செய்தார்கள்.இரண்டு வாரங்களுக்கு ஒரு மொழி அழிவடைகிறது என்ற முடிவுக்கு ஐக்கிய நாடுகள் சபை இப்போது வந்துள்ளது. எனவே, தாய்மொழிகளைப் பாதுகாக்க ஐக்கிய நாடுகள் சபை  விசேட தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கான முன்மொழிவு  கொண்டுவரப்பட்டது. ரவீந்திரநாத் தாகூர் வங்காள மொழி மூலம் இந்தியா முழுவதையும் எழுச்சிபெறச் செய்தார். இசையுடன் முன்வைக்கப்பட்டது. சட்டங்கள் இலக்கியங்களின் ஊடாக வலுப்படுத்தப்பட்டது. சில காலம் கழித்து பங்களாதேஷ் என்று ஒரு நாடு பிறந்தது.எமது தாய்மொழி கைவிடப்படும் மொழிக் குவியலுக்குத் தள்ளப்படும் முயற்சியில் இருந்து எமது தாய்மொழியைப் பாதுகாப்பது அரசாங்கத்தால் மட்டும் செய்ய முடியாத ஒன்று. ஆனால், தமது நாட்டு மக்களின் அடையாளத்தைப் பாதுகாக்க வேண்டிய கட்டாயப் பொறுப்பும் கடமையும் அரசுக்கு உண்டு. அடையாளத்தைக் காக்க தாய்மொழி காக்கப்பட வேண்டும். தாய்மொழியைச் சுற்றி எழுந்துள்ள பல்வேறு வகையான துறைகள் பாதுகாக்கப்பட வேண்டும்.தாய்மொழி தாய் பாலுக்கு நிகரானது என்று  நாம் கேள்விப்பட்டுள்ளோம். மொழி என்பது வாழ்க்கைக்கு மதிப்பு சேர்க்கும் ஒரு காரணி என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. அதை ஒரு தன்னார்வ செயல்முறையாக மாற்றுவதற்காக  பல்வேறு விதிகளை உருவாக்குகிறோம். அவற்றை  நடைமுறைப்படுத்தும் விருப்பத்திற்கான தேசிய எழுச்சியும், செயல்முறையும் தேவை. இந்த விடயத்தில்பல்கலைக்கழகத் துறை, உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி மையங்களாக இன்னும் ஆர்வத்துடன் தலையிட்டால் அது பாராட்டப்பட வேண்டியதாகும்.இன்று பொதுநிர்வாக அமைச்சில் பல விடயங்கள் குறித்து கலந்துரையாட சம்பந்தப்பட்ட திணைக்கள அதிகாரிகள் அழைக்கப்பட்டனர்.  அரச கரும மொழித் திணைக்கள அதிகாரிகளையும், தொலைதூர கிராமியத் திணைக்களத் தலைவர்களையும் தொடர்பு கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறான நடவடிக்கைகளை நாம் ஒன்றன் பின் ஒன்றாக எடுக்கவில்லையென்றால், நம் தாய்மொழி மக்களிடம் இருந்து தனிமைப்படுத்தப்பட்டு, தொலைந்து போக வாய்ப்புள்ளது. அந்த நிலைமையை மாற்றுவோம். இதற்காக நீண்ட காலமாக தங்களை அர்ப்பணித்த அனைவருக்கும் எனது பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.உயர்நீதிமன்றத்திலிருந்து நாடாளுமன்றத்திற்கு வரும் தீர்ப்புகளை சபாநாயகர் இன்னும் ஆங்கிலத்திலேயே வாசிக்கிறார். உயர் நீதிமன்ற தீர்ப்பு சிங்கள மொழியில் வெளியிடப்படவில்லை என்றே நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவிக்கின்றர். தமிழ் மொழியில் வெளியிடப்படவில்லை என மற்றும் சில உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர். நாம் அடைய வேண்டிய வெற்றிகள் இன்னும் எவ்வளவு உள்ளன இன்னும் செல்ல வேண்டிய தூரம் அதிகம். அதை அடைவதற்கான பணியில் இன்னும் அதிகமாக எம்மை அர்ப்பணிக்க வேண்டும் என்பதை இந்த நேரத்தில் குறிப்பிட விரும்புகிறேன். மேலும், மொழிபெயர்ப்பு ஆய்வகங்களை உருவாக்குவதும், பல்கலைக்கழகங்கள் மற்றும் தொடர்புடைய துறைகளிலிருந்து மொழிபெயர்ப்பிற்கான ஒரு தலைமுறையை உருவாக்குவதும் முக்கிய தேவையாக உள்ளது. இன்று மொழிபெயர்ப்பாளர்கள் இல்லை. மொழிபெயர்ப்பாளர்கள் இல்லாததால், ஓய்வு பெற்றவர்களுக்கு சேவை நீடிப்பு வழங்க வேண்டியுள்ளது. பொது நிர்வாக சுற்றறிக்கையின்படி, ஓய்வுக்குப் பின்னர் சேவை நீடிப்பு வழங்குவது மிகவும் கடினமான பணி.தாய்மொழியைப் பாதுகாப்பது தொடர்பான ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் தீர்மானத்தின் மூலமும் எமது நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தின் மூலமும் அதைப் பாதுகாக்க முடியும். அதிலும், எமது சொந்த தாய்மொழியைப் பாதுகாப்பதற்கான செயன்முறையை ஒரு பெரிய பலமாகவும் தைரியமாகவும் மாற்றுவதற்கு இந்த செயன்முறை மிகப்பெரிய பலமாக இருக்கும்.இந்நிகழ்வில் ருஹுனு பல்கலைக்கழகத்தின் வேந்தர் கலாநிதி அக்குரட்டியே நந்த தேரர், பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் தாரிக் ஆரிபுல் இஸ்லாம், பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்ன, தூதரக அதிகாரிகள், பல்கலைக்கழக பீடாதிபதிகள், பேராசிரியர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், பல்வேறு அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் இனங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement