• Jan 17 2025

எதிர்வரும் தேர்தலில் அநுர அரசைத் தோற்கடிப்போம்- சஜித் சூளுரை..!

Sharmi / Jan 17th 2025, 11:08 am
image

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத்  தேர்தலில் அநுர அரசைத் தோற்கடிப்போம் என எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச சூளுரைத்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழுக் கூட்டம் நேற்று மாலை கட்சித் தலைமையகத்தில் நடைபெற்றது. 

இதனைத் தொடர்ந்து ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

'நாட்டின் ஜனாதிபதி அநுரகுமார சகல நாடுகளுடனும் இராஜதந்திர உறவுகளைப் பேண வேண்டும். மக்களுக்கு நிவாரணம் வழங்கும் திட்டத்துக்கு எதிர்க்கட்சியும் ஆதரவளிக்கும். 

ஆனால், தற்போதைய அரசு கூறியதற்கும் செய்வதற்கும் இடையில் கடுமையான முரண்பாடுகள் காணப்படுகின்றன.

மின்சாரக் கட்டணம், எண்ணெய் விலைக் குறைப்பு, எரிபொருள் விலை குறைப்பு, உர மானியம் போன்றவற்றைச் செய்ததாகக் கூறினாலும் அவை இன்னும் நிறைவேற்றப்படவில்லை.

பெரும் மக்கள் ஆணையைப் பெற்று ஆட்சிக்கு வந்த இந்த அரசு, அந்த ஆணையை மதித்து, மக்கள் எதிர்பார்க்கும் சலுகைகளை வழங்கி மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும்.

அரசு மக்களுக்கு இந்த பணியை ஆற்றாவிட்டால் எதிர்க்கட்சி மக்களுக்காக முன்நின்று, ஜனநாயக கட்டமைப்பில் குரல் எழுப்பும்.

ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழு கூடியபோது, மக்கள் மீதான அரசின் அடக்குமுறைக்கு எதிராக நாம் முன்நிற்கவேண்டும் என ஆலோசிக்கப்பட்டது.

அதுமட்டுமின்றி எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலை எதிர்கொள்வது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு ஐக்கிய மக்கள் சக்தி தயார். இதனை எதிர்கொள்வதற்கு எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சகல அரசியல் கட்சிகளுடனும் கலந்துரையாடல்களை முன்னெடுப்போம். 

இந்தத் தேர்தலில் அநுர அரசைத் தோல்வியடையச் செய்வோம் எனவும் தெரிவித்தார்.

எதிர்வரும் தேர்தலில் அநுர அரசைத் தோற்கடிப்போம்- சஜித் சூளுரை. எதிர்வரும் உள்ளூராட்சி சபைத்  தேர்தலில் அநுர அரசைத் தோற்கடிப்போம் என எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச சூளுரைத்துள்ளார்.ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழுக் கூட்டம் நேற்று மாலை கட்சித் தலைமையகத்தில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.'நாட்டின் ஜனாதிபதி அநுரகுமார சகல நாடுகளுடனும் இராஜதந்திர உறவுகளைப் பேண வேண்டும். மக்களுக்கு நிவாரணம் வழங்கும் திட்டத்துக்கு எதிர்க்கட்சியும் ஆதரவளிக்கும். ஆனால், தற்போதைய அரசு கூறியதற்கும் செய்வதற்கும் இடையில் கடுமையான முரண்பாடுகள் காணப்படுகின்றன.மின்சாரக் கட்டணம், எண்ணெய் விலைக் குறைப்பு, எரிபொருள் விலை குறைப்பு, உர மானியம் போன்றவற்றைச் செய்ததாகக் கூறினாலும் அவை இன்னும் நிறைவேற்றப்படவில்லை.பெரும் மக்கள் ஆணையைப் பெற்று ஆட்சிக்கு வந்த இந்த அரசு, அந்த ஆணையை மதித்து, மக்கள் எதிர்பார்க்கும் சலுகைகளை வழங்கி மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும்.அரசு மக்களுக்கு இந்த பணியை ஆற்றாவிட்டால் எதிர்க்கட்சி மக்களுக்காக முன்நின்று, ஜனநாயக கட்டமைப்பில் குரல் எழுப்பும்.ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழு கூடியபோது, மக்கள் மீதான அரசின் அடக்குமுறைக்கு எதிராக நாம் முன்நிற்கவேண்டும் என ஆலோசிக்கப்பட்டது.அதுமட்டுமின்றி எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலை எதிர்கொள்வது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு ஐக்கிய மக்கள் சக்தி தயார். இதனை எதிர்கொள்வதற்கு எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சகல அரசியல் கட்சிகளுடனும் கலந்துரையாடல்களை முன்னெடுப்போம். இந்தத் தேர்தலில் அநுர அரசைத் தோல்வியடையச் செய்வோம் எனவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement