• Oct 24 2024

அரசியல் நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக நியமிக்கப்பட்ட அல்விஸ் குழுவின் அறிக்கையை ஏற்கமாட்டோம் - விஜித ஹேரத்

Tharmini / Oct 23rd 2024, 7:57 am
image

Advertisement

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு எதிராகக் குற்றப் பிரேரணை கொண்டு வருவதற்கு முன்னர் பாராளுமன்றத்தேர்தலில் வென்றுகாட்டுங்கள் என்று முன்னாள் எம்.பி. உதய கம்மன்பிலவுக்குச் சவால் விடுத்துள்ளார் அமைச்சர் விஜித ஹேரத்.

அத்துடன், அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட அல்விஸ் குழுவின் அறிக்கையைத் தாம் ஏற்கமாட்டோம் என்றும் அவர் கூறியுள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பு அரச தகவல்திணைக்களத்தில் நேற்று (22) நடைபெற்றது.

இதன்போதே அமைச்சர் விஜித ஹேரத் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அதேவேளை, உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளைக் குழப்புவதற்காகவே ரவி செனவிரத்ன மற்றும் ஷானி அபேசேகர போன்றவர்களை உதய கம்மன்பில குழுவினர் குறிவைத்துள்ளனர் என்றும் அமைச்சர் விஜித ஹேரத் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசியல் நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக நியமிக்கப்பட்ட அல்விஸ் குழுவின் அறிக்கையை ஏற்கமாட்டோம் - விஜித ஹேரத் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு எதிராகக் குற்றப் பிரேரணை கொண்டு வருவதற்கு முன்னர் பாராளுமன்றத்தேர்தலில் வென்றுகாட்டுங்கள் என்று முன்னாள் எம்.பி. உதய கம்மன்பிலவுக்குச் சவால் விடுத்துள்ளார் அமைச்சர் விஜித ஹேரத்.அத்துடன், அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட அல்விஸ் குழுவின் அறிக்கையைத் தாம் ஏற்கமாட்டோம் என்றும் அவர் கூறியுள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பு அரச தகவல்திணைக்களத்தில் நேற்று (22) நடைபெற்றது. இதன்போதே அமைச்சர் விஜித ஹேரத் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அதேவேளை, உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளைக் குழப்புவதற்காகவே ரவி செனவிரத்ன மற்றும் ஷானி அபேசேகர போன்றவர்களை உதய கம்மன்பில குழுவினர் குறிவைத்துள்ளனர் என்றும் அமைச்சர் விஜித ஹேரத் சுட்டிக்காட்டியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement