• Nov 25 2024

எந்தவொரு சட்டவிரோத செயற்பாடுகளுக்கும் இடமளியோம்! – இராஜாங்க அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

Chithra / May 3rd 2024, 8:48 am
image

 

மகாவலி அதிகார சபைக்கு சொந்தமான காணியில் எந்தவொரு சட்டவிரோத செயற்பாடுகளுக்கும் இடமளிக்கப்பட மாட்டாது என பெருந்தோட்ட கைத்தொழில் மற்றும் மகாவலி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தெரிவித்துள்ளார்.

நிலையான நாட்டிற்கு ஒரு வழி என்ற தொனிப்பொருளில் நேற்று ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட இராஜாங்க அமைச்சர் இதனை தெரிவித்தார்.

மேலும், மகாவலி அதிகார சபைக்கு சொந்தமான காணிகள் தொடர்பான பிரச்சினைகளுக்கு மரபுரிமை வேலைத்திட்டத்தை அமுல்படுத்துவதுடன் ஒரே நேரத்தில் தீர்வு காண்பதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இலங்கை ஒரு விவசாய நாடு. மேலும், மகாவலி அதிகார சபையும் விவசாயத் துறைக்கு பெரும் பங்களிப்பை வழங்கி வருகின்றது. 

இதனால், தேயிலை, இறப்பர், தென்னை மற்றும் சிறு ஏற்றுமதி பயிர்கள் தொடர்பான விவசாய உற்பத்திகள் எமது அமைச்சின் கீழ் வருகின்றன.

மகாவலி அபிவிருத்தி அதிகார சபைக்கு எமது நாட்டில் 10 பெரிய அணைகள் உள்ளன. 

நாட்டிற்குத் தேவையான மின்சார உற்பத்திக்கும் பெரும் பங்களிப்பை வழங்கும் என்றே கூற வேண்டும். எனவே இவ்விரு அமைச்சுக்களையும் சரியாகப் பயன்படுத்தினால் விவசாயத்தில் நம் நாடு தன்னிறைவு அடையலாம்.

 இது இந்நாட்டின் விவசாயத் துறையை உயர்த்தும் திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதை எளிதாக்கியுள்ளது. விவசாய நவீனமயமாக்கல் திட்டம் ஏற்கனவே தொடங்கிவிட்டது என்றும் அவர் குறிப்பிட்டார்.

எந்தவொரு சட்டவிரோத செயற்பாடுகளுக்கும் இடமளியோம் – இராஜாங்க அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு  மகாவலி அதிகார சபைக்கு சொந்தமான காணியில் எந்தவொரு சட்டவிரோத செயற்பாடுகளுக்கும் இடமளிக்கப்பட மாட்டாது என பெருந்தோட்ட கைத்தொழில் மற்றும் மகாவலி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தெரிவித்துள்ளார்.நிலையான நாட்டிற்கு ஒரு வழி என்ற தொனிப்பொருளில் நேற்று ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட இராஜாங்க அமைச்சர் இதனை தெரிவித்தார்.மேலும், மகாவலி அதிகார சபைக்கு சொந்தமான காணிகள் தொடர்பான பிரச்சினைகளுக்கு மரபுரிமை வேலைத்திட்டத்தை அமுல்படுத்துவதுடன் ஒரே நேரத்தில் தீர்வு காண்பதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.இலங்கை ஒரு விவசாய நாடு. மேலும், மகாவலி அதிகார சபையும் விவசாயத் துறைக்கு பெரும் பங்களிப்பை வழங்கி வருகின்றது. இதனால், தேயிலை, இறப்பர், தென்னை மற்றும் சிறு ஏற்றுமதி பயிர்கள் தொடர்பான விவசாய உற்பத்திகள் எமது அமைச்சின் கீழ் வருகின்றன.மகாவலி அபிவிருத்தி அதிகார சபைக்கு எமது நாட்டில் 10 பெரிய அணைகள் உள்ளன. நாட்டிற்குத் தேவையான மின்சார உற்பத்திக்கும் பெரும் பங்களிப்பை வழங்கும் என்றே கூற வேண்டும். எனவே இவ்விரு அமைச்சுக்களையும் சரியாகப் பயன்படுத்தினால் விவசாயத்தில் நம் நாடு தன்னிறைவு அடையலாம். இது இந்நாட்டின் விவசாயத் துறையை உயர்த்தும் திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதை எளிதாக்கியுள்ளது. விவசாய நவீனமயமாக்கல் திட்டம் ஏற்கனவே தொடங்கிவிட்டது என்றும் அவர் குறிப்பிட்டார்.

Advertisement

Advertisement

Advertisement