• Feb 14 2026

வெலிகம பிரதேச சபை தலைவர் மீது துப்பாக்கிச்சூடு; துப்பாக்கிதாரிகள் தப்பிச்செல்லும் சிசிரிவி காட்சிகள்!

shanuja / Oct 22nd 2025, 2:40 pm
image

துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகர  மீது துப்பாக்கிச்சூட்டை மேற்கொண்டு சந்தேகநபர்கள் தப்பிச் செல்லும் காட்சி சிசிரிவியில் பதிவாகி வெளிவந்துள்ளது. 


சற்று நேரத்துக்கு முன்னர் வெலிகம பிரதேச சபையின்  தலைவர் லசந்த விக்ரமசேகர சபைக்குள் தனது கடமைகளை முன்னெடுத்து வரும் வேளையில், அவர் மீது துப்பாக்கிச் சூடு நடந்தப்பட்டுள்ளது. 


தனது கடமைகளைச் செய்து கொண்டிருந்தபோது நடத்தப்பட்ட இந்த துப்பாக்கிச் சூட்டில் பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்  உயிரிழந்துள்ளார். 


துப்பாக்கிச்சூடு தொடர்பான பொலிஸ்பிரிவின்  கூற்றுப்படி, உள்ளூர் சபைக்குள் நுழைந்த துப்பாக்கிதாரி, சபைக்குள் இருந்தபோது வெலிகம பிரதேச சபைத் தலைவரை சுட்டுக்  கொலை செய்துள்ளார். 


இன்று காலை துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்குப் பிறகு சந்தேக நபர்கள் அப்பகுதியை விட்டு தப்பிச் சென்றுள்ளனர். 


குறித்த சந்தேகநபர்கள் தப்பிச் செல்லும் காட்சி அருகிலிருந்த சிசிரிவி காணொளியில் பதிவாகி வெளிவந்துள்ளது. 


வெள்ளை நிற உடை மற்றும் கருப்பு நிற முகக்கவசத்துடன் சாதாரண நபரைப் போல உடையணிந்து வந்த துப்பாக்கிதாரி மக்களுடன் காத்திருந்துள்ளார். 


இதன்போது, பெண் ஒருவர் தலைவரின் அலுவலகத்திற்கு சென்று கடிதம் ஒன்றில் கையெழுத்தைப் பெற்று வௌியில் வந்த வேளை, துப்பாக்கிதாரி அலுவலகத்திற்குள் நுழைந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். 


தலைவரின் அலுவலகத்திற்குள் நுழைந்த அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரி ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தி தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 


துப்பாக்கிச் சூட்டுக்குப் பிறகு, துப்பாக்கிதாரி மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பிச் சென்றுள்ள காணொளி தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


இதற்கிடையே தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள 'ஹரக் கட்டா' என்ற நதுன் சிந்தகவின் நெருங்கிய கூட்டாளியாக குறித்த சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகக் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


வெலிகம பிரதேச சபை தலைவர் மீது துப்பாக்கிச்சூடு; துப்பாக்கிதாரிகள் தப்பிச்செல்லும் சிசிரிவி காட்சிகள் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகர  மீது துப்பாக்கிச்சூட்டை மேற்கொண்டு சந்தேகநபர்கள் தப்பிச் செல்லும் காட்சி சிசிரிவியில் பதிவாகி வெளிவந்துள்ளது. சற்று நேரத்துக்கு முன்னர் வெலிகம பிரதேச சபையின்  தலைவர் லசந்த விக்ரமசேகர சபைக்குள் தனது கடமைகளை முன்னெடுத்து வரும் வேளையில், அவர் மீது துப்பாக்கிச் சூடு நடந்தப்பட்டுள்ளது. தனது கடமைகளைச் செய்து கொண்டிருந்தபோது நடத்தப்பட்ட இந்த துப்பாக்கிச் சூட்டில் பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்  உயிரிழந்துள்ளார். துப்பாக்கிச்சூடு தொடர்பான பொலிஸ்பிரிவின்  கூற்றுப்படி, உள்ளூர் சபைக்குள் நுழைந்த துப்பாக்கிதாரி, சபைக்குள் இருந்தபோது வெலிகம பிரதேச சபைத் தலைவரை சுட்டுக்  கொலை செய்துள்ளார். இன்று காலை துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்குப் பிறகு சந்தேக நபர்கள் அப்பகுதியை விட்டு தப்பிச் சென்றுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள் தப்பிச் செல்லும் காட்சி அருகிலிருந்த சிசிரிவி காணொளியில் பதிவாகி வெளிவந்துள்ளது. வெள்ளை நிற உடை மற்றும் கருப்பு நிற முகக்கவசத்துடன் சாதாரண நபரைப் போல உடையணிந்து வந்த துப்பாக்கிதாரி மக்களுடன் காத்திருந்துள்ளார். இதன்போது, பெண் ஒருவர் தலைவரின் அலுவலகத்திற்கு சென்று கடிதம் ஒன்றில் கையெழுத்தைப் பெற்று வௌியில் வந்த வேளை, துப்பாக்கிதாரி அலுவலகத்திற்குள் நுழைந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். தலைவரின் அலுவலகத்திற்குள் நுழைந்த அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரி ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தி தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். துப்பாக்கிச் சூட்டுக்குப் பிறகு, துப்பாக்கிதாரி மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பிச் சென்றுள்ள காணொளி தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள 'ஹரக் கட்டா' என்ற நதுன் சிந்தகவின் நெருங்கிய கூட்டாளியாக குறித்த சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகக் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement