• Mar 22 2025

வெலிகம துப்பாக்கிச் சூடு: மேலும் 06 சந்தேக நபர்கள் நீதிமன்றில் சரண்..!

Sharmi / Mar 21st 2025, 12:26 pm
image

வெலிகம துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக மேலும் ஆறு சந்தேக நபர்கள் மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் மேலும் ஆறு சந்தேக நபர்கள் இன்றையதினம்(21) காலை மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை தேசபந்து தென்னகோன் அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் இருந்து பலத்த பாதுகாப்புடன் ஏப்ரல் மாதம் 03ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.





வெலிகம துப்பாக்கிச் சூடு: மேலும் 06 சந்தேக நபர்கள் நீதிமன்றில் சரண். வெலிகம துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக மேலும் ஆறு சந்தேக நபர்கள் மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர்.இந்த சம்பவம் தொடர்பாக இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.இந்நிலையில் மேலும் ஆறு சந்தேக நபர்கள் இன்றையதினம்(21) காலை மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இதேவேளை தேசபந்து தென்னகோன் அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் இருந்து பலத்த பாதுகாப்புடன் ஏப்ரல் மாதம் 03ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement