• Jan 26 2025

முன்னாள் ஜனாதிபதிகள் வசிக்கும் ஆடம்பர வீடுகளின் பெறுமதி என்ன? அம்பலப்படுத்திய அநுர

Chithra / Jan 22nd 2025, 1:31 pm
image


இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள ஆடம்பர உத்தியோகபூர்வ வாசல்ஸ்தலங்களினால் அரசாங்கத்திற்கு ஏற்படும் இழப்புகள் குறித்து ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மீண்டும் கருத்து வெளியிட்டுள்ளார்.

தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்ட போதே ஜனாதிபதி இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க  அரசாங்கம் வழங்கிய வீட்டிலேயே வசிக்கின்றார். அந்த வீட்டின் மாதாந்த வாடகை பெறுமதி 2 மில்லியன் ரூபா என சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேபோன்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும்  0.9 மில்லியன் ரூபா வாடகை பெறுமதியுடைய இல்லத்தில் வசிக்கின்றார். 

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வசிக்கும் வீட்டின் வாடகை பெறுமதி மாதம் 4.6 மில்லியன் என குறிப்பிட்டுள்ளார்.

எனினும் சில தலைவர்கள் தங்களிற்கு வழங்கப்பட்ட விசேட சலுகைகளை மீள ஒப்படைத்துள்ளனர் எனவும் அரசாங்கம் வழங்கிய இல்லத்தினை ஏற்க மறுத்தமைக்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு  நன்றியை தெரிவித்துள்ளார்.

அத்துடன் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது உத்தியோகபூர்வ இல்லத்தை சமீபத்தில் மீள கையளித்துள்ளதுடன் முன்னாள் முதல் பெண்மணி ஹேமா பிரேமதாசவும்  தனக்கு வழங்கப்பட்ட வீட்டை சில காலத்திற்கு முன்னர் திருப்பி ஒப்படைத்துள்ளார் என குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதிகள் வசிக்கும் ஆடம்பர வீடுகளின் பெறுமதி என்ன அம்பலப்படுத்திய அநுர இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள ஆடம்பர உத்தியோகபூர்வ வாசல்ஸ்தலங்களினால் அரசாங்கத்திற்கு ஏற்படும் இழப்புகள் குறித்து ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மீண்டும் கருத்து வெளியிட்டுள்ளார்.தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்ட போதே ஜனாதிபதி இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க  அரசாங்கம் வழங்கிய வீட்டிலேயே வசிக்கின்றார். அந்த வீட்டின் மாதாந்த வாடகை பெறுமதி 2 மில்லியன் ரூபா என சுட்டிக்காட்டியுள்ளார்.அதேபோன்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும்  0.9 மில்லியன் ரூபா வாடகை பெறுமதியுடைய இல்லத்தில் வசிக்கின்றார். முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வசிக்கும் வீட்டின் வாடகை பெறுமதி மாதம் 4.6 மில்லியன் என குறிப்பிட்டுள்ளார்.எனினும் சில தலைவர்கள் தங்களிற்கு வழங்கப்பட்ட விசேட சலுகைகளை மீள ஒப்படைத்துள்ளனர் எனவும் அரசாங்கம் வழங்கிய இல்லத்தினை ஏற்க மறுத்தமைக்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு  நன்றியை தெரிவித்துள்ளார்.அத்துடன் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது உத்தியோகபூர்வ இல்லத்தை சமீபத்தில் மீள கையளித்துள்ளதுடன் முன்னாள் முதல் பெண்மணி ஹேமா பிரேமதாசவும்  தனக்கு வழங்கப்பட்ட வீட்டை சில காலத்திற்கு முன்னர் திருப்பி ஒப்படைத்துள்ளார் என குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement