• Nov 06 2024

இலங்கையில் அடிக்கடி நில அதிர்வு ஏற்படுவதற்கான காரணம் என்ன? பேராசிரியர் விளக்கம்

Chithra / Jul 17th 2024, 11:00 am
image

Advertisement

 

இலங்கையில் அடிக்கடி ஏற்படும் நிலநடுக்கங்கள் தொடர்பில் பேராதனை பல்கலைக்கழக புவியியல் துறையின் சிரேஷ்ட பேராசிரியர் அதுல சேனாரத்ன தகவல் வெளியிட்டுள்ளார்.

பூமியின் உட்பகுதியில் ஏற்படும் விரிசல்களின் சிறு அசைவுகளே  இதற்குக் காரணம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பூமிக்குள் இலங்கையின் மையப்பகுதி, வருடத்திற்கு ஒன்று அல்லது இரண்டு மில்லிமீட்டர்கள் என்ற விகிதத்தில் மிக மெதுவாக உயர்ந்து வருகிறது. 

இதன் காரணமாகவே அதிர்வுகள் ஏற்படுகின்றன. உயரும் அளவு இடத்திற்கு இடம் மாறுபடும் எனவும் பேராசிரியர் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக பூமியின் மேலோட்டத்தில் உள்ள கனிம வளங்கள் மூலம் அந்த இடங்களை அடையாளம் காண்பது மிகவும் எளிதானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

அனுராதபுரத்திற்கும் கந்தளாய் பகுதிக்கு இடைப்பட்ட பகுதியில் நேற்று மாலை நிலநடுக்கம் ஏற்பட்டது.

இது ரிக்டர் அளவுகோலில் 2.7 ஆக பதிவாகியுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் அடிக்கடி நில அதிர்வு ஏற்படுவதற்கான காரணம் என்ன பேராசிரியர் விளக்கம்  இலங்கையில் அடிக்கடி ஏற்படும் நிலநடுக்கங்கள் தொடர்பில் பேராதனை பல்கலைக்கழக புவியியல் துறையின் சிரேஷ்ட பேராசிரியர் அதுல சேனாரத்ன தகவல் வெளியிட்டுள்ளார்.பூமியின் உட்பகுதியில் ஏற்படும் விரிசல்களின் சிறு அசைவுகளே  இதற்குக் காரணம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.பூமிக்குள் இலங்கையின் மையப்பகுதி, வருடத்திற்கு ஒன்று அல்லது இரண்டு மில்லிமீட்டர்கள் என்ற விகிதத்தில் மிக மெதுவாக உயர்ந்து வருகிறது. இதன் காரணமாகவே அதிர்வுகள் ஏற்படுகின்றன. உயரும் அளவு இடத்திற்கு இடம் மாறுபடும் எனவும் பேராசிரியர் குறிப்பிட்டுள்ளார்.குறிப்பாக பூமியின் மேலோட்டத்தில் உள்ள கனிம வளங்கள் மூலம் அந்த இடங்களை அடையாளம் காண்பது மிகவும் எளிதானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அனுராதபுரத்திற்கும் கந்தளாய் பகுதிக்கு இடைப்பட்ட பகுதியில் நேற்று மாலை நிலநடுக்கம் ஏற்பட்டது.இது ரிக்டர் அளவுகோலில் 2.7 ஆக பதிவாகியுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement