• May 17 2024

நண்பர் மீது லொரியை ஏற்றி இழுத்து சென்ற தமிழருக்கு நேர்ந்த கதி! samugammedia

Tamil nila / Aug 19th 2023, 7:55 am
image

Advertisement

சிங்கப்பூரில் கார் நிறுத்தும் இடத்தில் நண்பர் மீது லொரியை ஏற்றி இழுத்து சென்ற நபருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பிரதீப் ராமு என்பவருக்கு 21 மாதங்கள் 2 வாரச் சிறைத்தண்டனையும் 5,000 வெள்ளி அபராதமும் விதிக்கப்பட்டது.

அவர் 10 ஆண்டுகளுக்கு வாகனம் ஓட்டத் தடையும் விதிக்கப்பட்டது. சம்பவம் 2020ஆம் ஆண்டு மே 23ஆம் திகதி நடந்தது.

அப்போது அதிரடித் திட்டம் நடப்பில் இருந்தது. அவசியமற்ற காரணங்களுக்காக வீட்டை விட்டு வெளியே செல்லக்கூடாது என்ற விதி நடப்பில் இருந்தது.

பிரதீப்பும் பிரவின் குமார் சுப்ரமணியம் என்ற நபரின் நண்பரின் வீட்டில் ஒன்றுகூடி மது அருந்தினர். வீடு திரும்ப முடிவெடுத்த அவர்கள் கார் நிறுத்தும் இடத்திற்குச் சென்றனர்.

இருவரும் மதுபோதையில் கைகலப்பில் ஈடுபட்டனர். பிரவின் தரையில் கிடந்தபோது பிரதீப் லாரியை அவர் மீது ஏற்றினார்.

பிரவினின் ஆடைகள் சக்கரத்தில் சிக்கிக்கொண்டதால் லொரி சென்ற இடத்துக்கு எல்லாம் அவர் இழுத்துச் செல்லப்பட்டார்.

குறித்த சம்பவ இடத்தில் இருந்த பொதுமக்கள் பொலிஸஸாரிடம் தகவல் அளித்தனர்.

நண்பர் மீது லொரியை ஏற்றி இழுத்து சென்ற தமிழருக்கு நேர்ந்த கதி samugammedia சிங்கப்பூரில் கார் நிறுத்தும் இடத்தில் நண்பர் மீது லொரியை ஏற்றி இழுத்து சென்ற நபருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.பிரதீப் ராமு என்பவருக்கு 21 மாதங்கள் 2 வாரச் சிறைத்தண்டனையும் 5,000 வெள்ளி அபராதமும் விதிக்கப்பட்டது.அவர் 10 ஆண்டுகளுக்கு வாகனம் ஓட்டத் தடையும் விதிக்கப்பட்டது. சம்பவம் 2020ஆம் ஆண்டு மே 23ஆம் திகதி நடந்தது.அப்போது அதிரடித் திட்டம் நடப்பில் இருந்தது. அவசியமற்ற காரணங்களுக்காக வீட்டை விட்டு வெளியே செல்லக்கூடாது என்ற விதி நடப்பில் இருந்தது.பிரதீப்பும் பிரவின் குமார் சுப்ரமணியம் என்ற நபரின் நண்பரின் வீட்டில் ஒன்றுகூடி மது அருந்தினர். வீடு திரும்ப முடிவெடுத்த அவர்கள் கார் நிறுத்தும் இடத்திற்குச் சென்றனர்.இருவரும் மதுபோதையில் கைகலப்பில் ஈடுபட்டனர். பிரவின் தரையில் கிடந்தபோது பிரதீப் லாரியை அவர் மீது ஏற்றினார்.பிரவினின் ஆடைகள் சக்கரத்தில் சிக்கிக்கொண்டதால் லொரி சென்ற இடத்துக்கு எல்லாம் அவர் இழுத்துச் செல்லப்பட்டார்.குறித்த சம்பவ இடத்தில் இருந்த பொதுமக்கள் பொலிஸஸாரிடம் தகவல் அளித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement