• Nov 26 2024

முல்லைத்தீவில் புதையல் வேட்டையில் ஈடுபட்ட குழுவினருக்கு ஏற்பட்ட நிலை...!

Sharmi / Feb 23rd 2024, 12:36 pm
image

முல்லைத்தீவு புதுமாத்தளன் பகுதியில் நேற்றையதினம்(22)  வீதி திருத்த பணிக்கு மண் அகழ்வதாக கூறி புதையல் தோண்டிய 4 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

நேற்றையதினம் (22) இரவு புதுமாத்தளன் பகுதியிலுள்ள வீட்டுக்காணி ஒன்றில் 4பேரடங்கிய குழுவினர் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் முல்லைத்தீவு பொலிஸ் குழுவினர், புதையல் தோண்டிய 4 பேரையும் சம்பவ இடத்தில் வைத்து கைது செய்துள்ளதுடன் அவர்களிடமிருந்து,  புதையல் தோண்ட பயன்படுத்திய  இயந்திரம், டிப்பர் ரக வாகனம் என்பனவற்றையும் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள்,புதுமாத்தளன், ஒட்டுசுட்டான்,  கைவேலி பகுதிகளை  சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைகளின் பின்னர் இன்று முல்லைத்தீவு நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.


முல்லைத்தீவில் புதையல் வேட்டையில் ஈடுபட்ட குழுவினருக்கு ஏற்பட்ட நிலை. முல்லைத்தீவு புதுமாத்தளன் பகுதியில் நேற்றையதினம்(22)  வீதி திருத்த பணிக்கு மண் அகழ்வதாக கூறி புதையல் தோண்டிய 4 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,நேற்றையதினம் (22) இரவு புதுமாத்தளன் பகுதியிலுள்ள வீட்டுக்காணி ஒன்றில் 4பேரடங்கிய குழுவினர் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் முல்லைத்தீவு பொலிஸ் குழுவினர், புதையல் தோண்டிய 4 பேரையும் சம்பவ இடத்தில் வைத்து கைது செய்துள்ளதுடன் அவர்களிடமிருந்து,  புதையல் தோண்ட பயன்படுத்திய  இயந்திரம், டிப்பர் ரக வாகனம் என்பனவற்றையும் கைப்பற்றியுள்ளனர்.கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள்,புதுமாத்தளன், ஒட்டுசுட்டான்,  கைவேலி பகுதிகளை  சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.குறித்த சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைகளின் பின்னர் இன்று முல்லைத்தீவு நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement