• Nov 05 2026

எரிவாயுவைப் பதுக்கினால் என்ன நடக்கும்? லிட்ரோ முகவர்களுக்கு கடும் எச்சரிக்கை!

Chithra / Nov 2nd 2026, 10:16 am
image


லிட்ரோ எரிவாயு நிறுவனம், தனது அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் அனைவருக்கும் கடுமையான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.


எரிவாயுவைப் பதுக்குதல், விற்பனையைக் கட்டுப்படுத்துதல், நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்தல் மற்றும் அங்கீகரிக்கப்படாத மேலதிக கட்டணங்களை அறவிடுதல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என அனைத்து லிட்ரோ எரிவாயு முகவர்களுக்கும் கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


குறித்த அறிவுறுத்தல்கள் மற்றும் உத்தரவுகளைப் புறக்கணிக்கும் அல்லது மீறும் முகவர்களுக்கு எதிராகக் கடுமையான ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.


மேலும், விதிமீறல்களில் ஈடுபடும் முகவர்களின் லிட்ரோ முகவர் உரிமம் (Agency) தேவையேற்படின் முழுமையாக ரத்து செய்யப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.


நுகர்வோருக்கு லிட்ரோ எரிவாயுவைத் தடையின்றியும், அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட விலையிலும் விநியோகிப்பதை உறுதி செய்யும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

எரிவாயுவைப் பதுக்கினால் என்ன நடக்கும் லிட்ரோ முகவர்களுக்கு கடும் எச்சரிக்கை லிட்ரோ எரிவாயு நிறுவனம், தனது அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் அனைவருக்கும் கடுமையான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.எரிவாயுவைப் பதுக்குதல், விற்பனையைக் கட்டுப்படுத்துதல், நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்தல் மற்றும் அங்கீகரிக்கப்படாத மேலதிக கட்டணங்களை அறவிடுதல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என அனைத்து லிட்ரோ எரிவாயு முகவர்களுக்கும் கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.குறித்த அறிவுறுத்தல்கள் மற்றும் உத்தரவுகளைப் புறக்கணிக்கும் அல்லது மீறும் முகவர்களுக்கு எதிராகக் கடுமையான ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.மேலும், விதிமீறல்களில் ஈடுபடும் முகவர்களின் லிட்ரோ முகவர் உரிமம் (Agency) தேவையேற்படின் முழுமையாக ரத்து செய்யப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.நுகர்வோருக்கு லிட்ரோ எரிவாயுவைத் தடையின்றியும், அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட விலையிலும் விநியோகிப்பதை உறுதி செய்யும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement