கொத்மலை ரம்பொடை - கெரண்டிஎல்ல பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற பல பேரை காவுகொண்ட பேருந்து விபத்துக்கான காரணம் சாரதியின் கவனயீனமா அல்லது பேருந்தின் தொழில்நுட்பக் கோளாறா என்பது தொட்ரபாக விசாரணைகள் நடைபெற்று வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்
விபத்து குறித்து கொத்மலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும், இந்த விபத்தில் இதுவரை 16 ஆண்கள் மற்றும் 5 பெண்கள் உட்பட 21 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், 35இற்கும் மேற்பட்டோர் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் குறிப்பிட்டார்.
கொத்மலை பேருந்து விபத்துக்கு காரணம் என்ன தீவிர விசாரணையில் பொலிஸார் கொத்மலை ரம்பொடை - கெரண்டிஎல்ல பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற பல பேரை காவுகொண்ட பேருந்து விபத்துக்கான காரணம் சாரதியின் கவனயீனமா அல்லது பேருந்தின் தொழில்நுட்பக் கோளாறா என்பது தொட்ரபாக விசாரணைகள் நடைபெற்று வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்விபத்து குறித்து கொத்மலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும், இந்த விபத்தில் இதுவரை 16 ஆண்கள் மற்றும் 5 பெண்கள் உட்பட 21 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 35இற்கும் மேற்பட்டோர் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் குறிப்பிட்டார்.