• Sep 29 2026

கொழும்பில் இன்று முதல் மாறப்போகும் போக்குவரத்து விதி என்ன? மீறினால் கடும் நடவடிக்கை

Chithra / Sep 29th 2026, 10:55 am
image


கொழும்பு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இன்று முதல் மீண்டும் ஒரு முக்கிய போக்குவரத்து மாற்றம் அமலுக்கு வருகிறது.


பஸ் முன்னுரிமைப் பாதை விதிமுறைகள் காலை 6 மணி முதல் 9 மணி வரையும், மாலை 4 மணி முதல் 7 மணி வரையும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.


இந்தத் திட்டம் இன்று முதல் முன்னோடித் திட்டமாக அறிமுகப்படுத்தப்படுவதாக போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.


ஆனால்… விதிகளை மீறுபவர்களுக்கு எதிராகவும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.


பஸ் முன்னுரிமைப் பாதை சட்டத்தை மீறுபவர்களுக்கு எதிராக சட்டத்தை அமல்படுத்துமாறு அனைத்து பொலிஸ் அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


இதற்கு இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கமும் முழுமையான ஆதரவை தெரிவித்துள்ளது.


இதற்கிடையில், இன்று முதல் மேலும் 5 பாதைகளில் மெட்ரோ பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


இதற்காக 122 மெட்ரோ பஸ்களை சேவையில் ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக மெட்ரோ பஸ் நிறுவனத்தின் தலைவர் யு.பி. திலகரத்ன தெரிவித்துள்ளார்.


கொழும்பில் இன்று முதல் மாறப்போகும் போக்குவரத்து விதி என்ன மீறினால் கடும் நடவடிக்கை கொழும்பு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இன்று முதல் மீண்டும் ஒரு முக்கிய போக்குவரத்து மாற்றம் அமலுக்கு வருகிறது.பஸ் முன்னுரிமைப் பாதை விதிமுறைகள் காலை 6 மணி முதல் 9 மணி வரையும், மாலை 4 மணி முதல் 7 மணி வரையும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.இந்தத் திட்டம் இன்று முதல் முன்னோடித் திட்டமாக அறிமுகப்படுத்தப்படுவதாக போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.ஆனால்… விதிகளை மீறுபவர்களுக்கு எதிராகவும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.பஸ் முன்னுரிமைப் பாதை சட்டத்தை மீறுபவர்களுக்கு எதிராக சட்டத்தை அமல்படுத்துமாறு அனைத்து பொலிஸ் அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.இதற்கு இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கமும் முழுமையான ஆதரவை தெரிவித்துள்ளது.இதற்கிடையில், இன்று முதல் மேலும் 5 பாதைகளில் மெட்ரோ பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இதற்காக 122 மெட்ரோ பஸ்களை சேவையில் ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக மெட்ரோ பஸ் நிறுவனத்தின் தலைவர் யு.பி. திலகரத்ன தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement