• Sep 19 2024

நாட்டில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் அதிகரிக்க காரணம் என்ன? – சபையில் சஜித் கேள்வி

Chithra / Jul 11th 2024, 12:05 pm
image

Advertisement

 

நாட்டில் இன்று துப்பாக்கிச் சூட்டுச்சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார்.

இன்றைய நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும் போது அவர் இவ்வாறு குற்றம் சுமத்தியிருந்தார்.

அதிகரித்துள்ள துப்பாக்கிச் சூட்டுச் சம்வங்கள் காரணமாக இன்று நாட்டு மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளதாக சபையில் தெரிவித்திருந்தார்.

நாட்டில் சட்டம் ஒழுங்கு முறையாக பேணப்படுகின்றதா என்ற சந்தேகம் மக்களுக்கு எழுந்துள்ளது. நாட்டு மக்கள் இன்று அச்சத்துடனேயே வாழ்கின்றனர்.

துப்பாக்கி சூட்டுச் சம்பவங்கள், கொலை சம்பவங்கள் நாட்டில் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன.

நாட்டு மக்களை பாதுகாப்பதற்கு அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை என்னவென்று நான் கேள்வி எழுப்புகின்றேன்.

நாட்டின் சட்டம் ஒழுங்கை பேணி, பொதுமக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவது அரசாங்கத்தின் பொறுப்பாகும். அரசியல் நோக்கங்களுக்கான இதனை கூறவில்லை என்றும் சஜித் பிரேமாதாச சபையில் குறிப்பிட்டிருந்தார்.

நாட்டில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் அதிகரிக்க காரணம் என்ன – சபையில் சஜித் கேள்வி  நாட்டில் இன்று துப்பாக்கிச் சூட்டுச்சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார்.இன்றைய நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும் போது அவர் இவ்வாறு குற்றம் சுமத்தியிருந்தார்.அதிகரித்துள்ள துப்பாக்கிச் சூட்டுச் சம்வங்கள் காரணமாக இன்று நாட்டு மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளதாக சபையில் தெரிவித்திருந்தார்.நாட்டில் சட்டம் ஒழுங்கு முறையாக பேணப்படுகின்றதா என்ற சந்தேகம் மக்களுக்கு எழுந்துள்ளது. நாட்டு மக்கள் இன்று அச்சத்துடனேயே வாழ்கின்றனர்.துப்பாக்கி சூட்டுச் சம்பவங்கள், கொலை சம்பவங்கள் நாட்டில் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன.நாட்டு மக்களை பாதுகாப்பதற்கு அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை என்னவென்று நான் கேள்வி எழுப்புகின்றேன்.நாட்டின் சட்டம் ஒழுங்கை பேணி, பொதுமக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவது அரசாங்கத்தின் பொறுப்பாகும். அரசியல் நோக்கங்களுக்கான இதனை கூறவில்லை என்றும் சஜித் பிரேமாதாச சபையில் குறிப்பிட்டிருந்தார்.

Advertisement

Advertisement

Advertisement