செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பாகச் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இடைக்கால அறிக்கையின் அடிப்படையில், நீதிமன்ற உத்தரவுகளுக்கு அமைவாகவே அடுத்தகட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (27) நடைபெற்ற வாராந்த அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பாகப் பேராசிரியர் ராஜ் சோமதேவவினால் தயாரிக்கப்பட்ட இடைக்கால அறிக்கை, கடந்த 19ஆம் திகதி யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையின் பிரதிகளை இந்த விவகாரத்துடன் தொடர்புடைய அனைத்துத் தரப்பினருக்கும் வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதற்கமைய, சம்பந்தப்பட்ட தரப்பினர் அறிக்கையை ஆராய்ந்து தங்களது கருத்துகளையும் அவதானிப்புகளையும் நீதிமன்றத்தில் முன்வைக்கவுள்ளனர்.
மேலும், செம்மணி மனிதப் புதைகுழியில் கண்டெடுக்கப்பட்ட மாதிரிகளின் காலத்தை அறிவியல் ரீதியாகக் கண்டறியும் வகையில், கார்பன் கால நிர்ணயச் சோதனையை மேற்கொள்வதற்கான அனுமதியை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்திடம் கோரியுள்ளது.
இந்தக் கோரிக்கை தொடர்பான முக்கிய தீர்மானத்தை எதிர்வரும் நவம்பர் 19ஆம் திகதி நீதிமன்றம் அறிவிக்கவுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இதனிடையே, பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரரை விடுதலை செய்யுமாறு பௌத்த பீடங்களிடமிருந்து இதுவரை உத்தியோகபூர்வ கோரிக்கைகள் எவையும் முன்வைக்கப்படவில்லை என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
எதிர்காலத்தில் அவ்வாறான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டாலும், சட்டத்திற்கு அப்பாற்பட்டு அரசாங்கம் செயற்படாது என அவர் வலியுறுத்தினார்.
ஞானசார தேரர் தொடர்பில் முப்பீட மகாநாயக்க தேரர்களினால் சிறைச்சாலைகள் ஆணையாளருக்கு அனுப்பப்பட்ட கடிதத்தின் அடிப்படையில், ஜனாதிபதியின் தலைமையில் மகாநாயக்க தேரர்களின் பிரதிநிதிகள் மற்றும் அநுநாயக்க தேரர்களுடன் விசேட கலந்துரையாடல் நடத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
அந்தக் கலந்துரையாடலின் அடிப்படையில் சிறைச்சாலை நிலையான உத்தரவுகளில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், எதிர்கால நடவடிக்கைகள் அந்தத் திருத்தங்களுக்கு அமைவாகவே முன்னெடுக்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
செம்மணி புதைகுழி விசாரணையில் அடுத்து என்ன அமைச்சர் நளிந்த விளக்கம் செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பாகச் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இடைக்கால அறிக்கையின் அடிப்படையில், நீதிமன்ற உத்தரவுகளுக்கு அமைவாகவே அடுத்தகட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (27) நடைபெற்ற வாராந்த அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பாகப் பேராசிரியர் ராஜ் சோமதேவவினால் தயாரிக்கப்பட்ட இடைக்கால அறிக்கை, கடந்த 19ஆம் திகதி யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.குறித்த அறிக்கையின் பிரதிகளை இந்த விவகாரத்துடன் தொடர்புடைய அனைத்துத் தரப்பினருக்கும் வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.அதற்கமைய, சம்பந்தப்பட்ட தரப்பினர் அறிக்கையை ஆராய்ந்து தங்களது கருத்துகளையும் அவதானிப்புகளையும் நீதிமன்றத்தில் முன்வைக்கவுள்ளனர்.மேலும், செம்மணி மனிதப் புதைகுழியில் கண்டெடுக்கப்பட்ட மாதிரிகளின் காலத்தை அறிவியல் ரீதியாகக் கண்டறியும் வகையில், கார்பன் கால நிர்ணயச் சோதனையை மேற்கொள்வதற்கான அனுமதியை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்திடம் கோரியுள்ளது.இந்தக் கோரிக்கை தொடர்பான முக்கிய தீர்மானத்தை எதிர்வரும் நவம்பர் 19ஆம் திகதி நீதிமன்றம் அறிவிக்கவுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.இதனிடையே, பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரரை விடுதலை செய்யுமாறு பௌத்த பீடங்களிடமிருந்து இதுவரை உத்தியோகபூர்வ கோரிக்கைகள் எவையும் முன்வைக்கப்படவில்லை என்றும் அமைச்சர் தெரிவித்தார்.எதிர்காலத்தில் அவ்வாறான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டாலும், சட்டத்திற்கு அப்பாற்பட்டு அரசாங்கம் செயற்படாது என அவர் வலியுறுத்தினார்.ஞானசார தேரர் தொடர்பில் முப்பீட மகாநாயக்க தேரர்களினால் சிறைச்சாலைகள் ஆணையாளருக்கு அனுப்பப்பட்ட கடிதத்தின் அடிப்படையில், ஜனாதிபதியின் தலைமையில் மகாநாயக்க தேரர்களின் பிரதிநிதிகள் மற்றும் அநுநாயக்க தேரர்களுடன் விசேட கலந்துரையாடல் நடத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.அந்தக் கலந்துரையாடலின் அடிப்படையில் சிறைச்சாலை நிலையான உத்தரவுகளில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், எதிர்கால நடவடிக்கைகள் அந்தத் திருத்தங்களுக்கு அமைவாகவே முன்னெடுக்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.