• Nov 24 2024

'பார்த்ததும் ஆசை வந்தது திருடிவிட்டேன்'..! யாழில் மோட்டார் சைக்கிள் திருடனின் அதிர்ச்சி வாக்குமூலம்...!

Sharmi / Jul 6th 2024, 2:57 pm
image

யாழில் மோட்டார் சைக்கிள் திருட்டு சம்பவம் தொடர்பில் சாவகச்சேரியில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கடந்த மாதம் 26ம் திகதி யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றுக்கு அருகில் மோட்டார் சைக்கிள் திருடப்பட்டதாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டது.

குறித்த முறைப்பாட்டிற்கமைய விசாரணைகளை மேற்கொண்ட யாழ் பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி பிரேமதிலக தலைமையிலான பொலிஸார், சாவகச்சேரி பகுதியில் வைத்து 24 வயதான சந்தேகநபரை கைது செய்தனர்.

சந்தேகநபரிடம் இருந்து திருடப்பட்ட மோட்டார் சைக்கிளையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்றத்தில் வழக்கொன்றுக்கு வருகை தந்தபோது "வெளியே நின்ற மோட்டார் சைக்கிளை பார்க்க ஆசையாக இருந்தது, அதனால் அதனை திருடிச் சென்றேன்" என சந்தேக நபர் பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இந்நிலையில் விசாரணைகளுக்கு பின்னர் சந்தேகநபரை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.


'பார்த்ததும் ஆசை வந்தது திருடிவிட்டேன்'. யாழில் மோட்டார் சைக்கிள் திருடனின் அதிர்ச்சி வாக்குமூலம். யாழில் மோட்டார் சைக்கிள் திருட்டு சம்பவம் தொடர்பில் சாவகச்சேரியில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,கடந்த மாதம் 26ம் திகதி யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றுக்கு அருகில் மோட்டார் சைக்கிள் திருடப்பட்டதாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டது.குறித்த முறைப்பாட்டிற்கமைய விசாரணைகளை மேற்கொண்ட யாழ் பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி பிரேமதிலக தலைமையிலான பொலிஸார், சாவகச்சேரி பகுதியில் வைத்து 24 வயதான சந்தேகநபரை கைது செய்தனர்.சந்தேகநபரிடம் இருந்து திருடப்பட்ட மோட்டார் சைக்கிளையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்றத்தில் வழக்கொன்றுக்கு வருகை தந்தபோது "வெளியே நின்ற மோட்டார் சைக்கிளை பார்க்க ஆசையாக இருந்தது, அதனால் அதனை திருடிச் சென்றேன்" என சந்தேக நபர் பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.இந்நிலையில் விசாரணைகளுக்கு பின்னர் சந்தேகநபரை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement