• May 03 2026

நீதிமன்ற விசாரணைக்கு முன்னரே தீர்ப்புச் சொல்ல அமைச்சர்கள் யார்? - அநுர அரசு மீது பாயும் எதிர்க்கட்சிகள்

Chithra / May 3rd 2026, 1:44 pm
image

முன்னாள் அமைச்சர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்களுக்கு எதிரான நீதிமன்ற வழக்குகள் குறித்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க வெளியிட்ட கருத்துக்கள், நீதித்துறையின் சுயாதீனத்தில் அரசு மேற்கொள்ளும் நேரடித் தலையீடு என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.


வவுனியாவில் நடைபெற்ற மே தினக் கூட்டத்தில் உரையாற்றிய அமைச்சர் பிமல் ரத்நாயக்க, விமல் வீரவன்ச, நாமல் ராஜபக்ஷ, ஷஷீந்திர ராஜபக்ஷ, கெஹலிய ரம்புக்வெல, மேர்வின் சில்வா, பிரியங்கர ஜயரத்ன மற்றும் ரவி கருணாநாயக்க உள்ளிட்டோரின் வழக்கு விசாரணைகள் வரும் மே, ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் நடைபெறவுள்ளன என்று குறிப்பிட்டிருந்தார். 


இவை வெறும் வழக்கு தினங்கள் மட்டுமல்ல, அவர்களின் கழுத்தில் உள்ள கயிறு இறுக்கமடையும் நாள்கள் என்பது அவர்களுக்குத் தெரியும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.


ஒரு அமைச்சராக இருந்துகொண்டு வழக்கின் தீர்ப்பை முன்கூட்டியே தீர்மானிக்கும் அதிகாரம் பிமல் ரத்நாயக்கவுக்குக் கிடையாது என்று திஸ்ஸ அத்தநாயக்க சுட்டிக்காட்டினார்.


"வழக்கு விசாரணைகள் நிலுவையில் உள்ளபோது, சந்தேகநபர்கள் மீது குற்றஞ்சுமத்தி தீர்ப்பை வழங்க ஜனாதிபதிக்கோ அல்லது அரசுக்கோ அதிகாரம் இல்லை.நீதிமன்றத்தால் மாத்திரமே தீர்ப்பை வழங்க முடியும் எனும் நிலையில், முன்கூட்டியே இவ்வாறான கருத்துக்களை வெளியிடுவது நீதிமன்றச் செயற்பாடுகளில் அரசு மேற்கொள்ளும் நேரடித் தலையீடாகவே பார்க்க வேண்டியுள்ளது.


ஏதேனும் தவறுகள் இடம்பெற்றிருந்தால் அது குறித்துச் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் துறையினருக்கு அறிவித்துவிட்டு, எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்காகக் காத்திருப்பதே அமைச்சர்களின் பொறுப்பு." - என்றார்.


இந்நிலையில் 

நீதிமன்றங்கள் தீர்ப்பளிப்பதற்கு முன்னரே அமைச்சர்கள் தீர்ப்புகளைக் கூறுவது நீதிமன்ற அவமதிப்பாகும் என்றும், இதற்காக ஜனாதிபதி உட்பட அமைச்சர்கள் அனைவரும் நீதிபதிகள் முன்னிலையில் மன்னிப்புக்கோர வேண்டும் என்றும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.


கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் மேலும் குறிப்பிடுகையில்,


திறைசேரியால் செலுத்தப்பட்ட 2.5 மில்லியன் டொலர் மோசடி செய்யப்பட்ட விவகாரத்தில் பணி நீக்கப்பட்ட மேலதிக பணிப்பாளர் உயிரிழந்துள்ளமை தற்கொலை எனக் குறிப்பிடப்படுகின்றது.அரசின் தவறான தீர்மானங்களினால் அரச உத்தியோகத்தர்களே பலியாகின்றார்கள். 


2.5 மில்லியன் டொலர் மோசடி செய்யப்பட்ட விவகாரத்தில் மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்கவையும் விசாரிக்க வேண்டும். அவருக்கு மாத்திரம் ஏன் சிறப்பு சலுகை வழங்கப்படுகின்றது.?எனவே, இந்த 2.5 மில்லியன் டொலர் மோசடி விவகாரத்தில் மத்திய வங்கியின் ஆளுநரையும் விசாரிக்க வேண்டும்.


அமைச்சர் பிமல் ரத்நாயக்க தன்னைச் சிறைக்கு அனுப்புவதாகக் கூறுகின்றார். நீதிமன்ற விசாரணைக்கு முன்னரே இவ்வாறு தீர்ப்புக் கூறுவதற்கு அவர் ஒன்றும் நீதிபதி அல்ல.நீதிமன்றங்களை அவமதிக்கும் வகையில் செயற்படும் அரச தரப்பினர், நீதித்துறைக்கு முன்னால் மண்டியிட்டு மன்னிப்புக் கேட்க வேண்டும்." - என்றார்.

நீதிமன்ற விசாரணைக்கு முன்னரே தீர்ப்புச் சொல்ல அமைச்சர்கள் யார் - அநுர அரசு மீது பாயும் எதிர்க்கட்சிகள் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்களுக்கு எதிரான நீதிமன்ற வழக்குகள் குறித்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க வெளியிட்ட கருத்துக்கள், நீதித்துறையின் சுயாதீனத்தில் அரசு மேற்கொள்ளும் நேரடித் தலையீடு என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.வவுனியாவில் நடைபெற்ற மே தினக் கூட்டத்தில் உரையாற்றிய அமைச்சர் பிமல் ரத்நாயக்க, விமல் வீரவன்ச, நாமல் ராஜபக்ஷ, ஷஷீந்திர ராஜபக்ஷ, கெஹலிய ரம்புக்வெல, மேர்வின் சில்வா, பிரியங்கர ஜயரத்ன மற்றும் ரவி கருணாநாயக்க உள்ளிட்டோரின் வழக்கு விசாரணைகள் வரும் மே, ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் நடைபெறவுள்ளன என்று குறிப்பிட்டிருந்தார். இவை வெறும் வழக்கு தினங்கள் மட்டுமல்ல, அவர்களின் கழுத்தில் உள்ள கயிறு இறுக்கமடையும் நாள்கள் என்பது அவர்களுக்குத் தெரியும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.ஒரு அமைச்சராக இருந்துகொண்டு வழக்கின் தீர்ப்பை முன்கூட்டியே தீர்மானிக்கும் அதிகாரம் பிமல் ரத்நாயக்கவுக்குக் கிடையாது என்று திஸ்ஸ அத்தநாயக்க சுட்டிக்காட்டினார்."வழக்கு விசாரணைகள் நிலுவையில் உள்ளபோது, சந்தேகநபர்கள் மீது குற்றஞ்சுமத்தி தீர்ப்பை வழங்க ஜனாதிபதிக்கோ அல்லது அரசுக்கோ அதிகாரம் இல்லை.நீதிமன்றத்தால் மாத்திரமே தீர்ப்பை வழங்க முடியும் எனும் நிலையில், முன்கூட்டியே இவ்வாறான கருத்துக்களை வெளியிடுவது நீதிமன்றச் செயற்பாடுகளில் அரசு மேற்கொள்ளும் நேரடித் தலையீடாகவே பார்க்க வேண்டியுள்ளது.ஏதேனும் தவறுகள் இடம்பெற்றிருந்தால் அது குறித்துச் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் துறையினருக்கு அறிவித்துவிட்டு, எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்காகக் காத்திருப்பதே அமைச்சர்களின் பொறுப்பு." - என்றார்.இந்நிலையில் நீதிமன்றங்கள் தீர்ப்பளிப்பதற்கு முன்னரே அமைச்சர்கள் தீர்ப்புகளைக் கூறுவது நீதிமன்ற அவமதிப்பாகும் என்றும், இதற்காக ஜனாதிபதி உட்பட அமைச்சர்கள் அனைவரும் நீதிபதிகள் முன்னிலையில் மன்னிப்புக்கோர வேண்டும் என்றும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் மேலும் குறிப்பிடுகையில்,திறைசேரியால் செலுத்தப்பட்ட 2.5 மில்லியன் டொலர் மோசடி செய்யப்பட்ட விவகாரத்தில் பணி நீக்கப்பட்ட மேலதிக பணிப்பாளர் உயிரிழந்துள்ளமை தற்கொலை எனக் குறிப்பிடப்படுகின்றது.அரசின் தவறான தீர்மானங்களினால் அரச உத்தியோகத்தர்களே பலியாகின்றார்கள். 2.5 மில்லியன் டொலர் மோசடி செய்யப்பட்ட விவகாரத்தில் மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்கவையும் விசாரிக்க வேண்டும். அவருக்கு மாத்திரம் ஏன் சிறப்பு சலுகை வழங்கப்படுகின்றது.எனவே, இந்த 2.5 மில்லியன் டொலர் மோசடி விவகாரத்தில் மத்திய வங்கியின் ஆளுநரையும் விசாரிக்க வேண்டும்.அமைச்சர் பிமல் ரத்நாயக்க தன்னைச் சிறைக்கு அனுப்புவதாகக் கூறுகின்றார். நீதிமன்ற விசாரணைக்கு முன்னரே இவ்வாறு தீர்ப்புக் கூறுவதற்கு அவர் ஒன்றும் நீதிபதி அல்ல.நீதிமன்றங்களை அவமதிக்கும் வகையில் செயற்படும் அரச தரப்பினர், நீதித்துறைக்கு முன்னால் மண்டியிட்டு மன்னிப்புக் கேட்க வேண்டும்." - என்றார்.

Advertisement

Advertisement

Advertisement