• Dec 03 2024

வெள்ளை வான்' சர்ச்சை வழக்கு: ராஜித உள்ளிட்ட மூவர் விடுவிப்பு!

Tamil nila / Nov 30th 2024, 7:19 am
image

'வெள்ளை வான்' குறித்து சர்ச்சைக்குரிய தகவல்களை வெளியிட்டமை தொடர்பான வழக்கிலிருந்து முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன உள்ளிட்ட மூவரை விடுவிப்பதாக கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

2019ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின்போது ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தி, வெள்ளை வானில் ஆட்கள் கடத்தப்பட்டமை தொடர்பில் அன்றைய ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக சர்ச்சைக்குரிய கருத்துக்களை முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன வெளியிட்டிருந்தார்.

அதனையடுத்து, ராஜித சேனாரத்ன மற்றும் இருவர் மீது வழக்குத்  தொடரப்பட்டிருந்தது.

அந்த வழக்கிலிருந்து தற்போது ராஜித சேனாரத்ன உட்பட மூவரும் கொழும்பு மேல் நீதிமன்றத்தால் நேற்று வெள்ளிக்கிழமை விடுவிக்கப்பட்டுள்ளனர்.

வெள்ளை வான்' சர்ச்சை வழக்கு: ராஜித உள்ளிட்ட மூவர் விடுவிப்பு 'வெள்ளை வான்' குறித்து சர்ச்சைக்குரிய தகவல்களை வெளியிட்டமை தொடர்பான வழக்கிலிருந்து முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன உள்ளிட்ட மூவரை விடுவிப்பதாக கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.2019ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின்போது ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தி, வெள்ளை வானில் ஆட்கள் கடத்தப்பட்டமை தொடர்பில் அன்றைய ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக சர்ச்சைக்குரிய கருத்துக்களை முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன வெளியிட்டிருந்தார்.அதனையடுத்து, ராஜித சேனாரத்ன மற்றும் இருவர் மீது வழக்குத்  தொடரப்பட்டிருந்தது.அந்த வழக்கிலிருந்து தற்போது ராஜித சேனாரத்ன உட்பட மூவரும் கொழும்பு மேல் நீதிமன்றத்தால் நேற்று வெள்ளிக்கிழமை விடுவிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement